கருப்பட்டி மிட்டாய்
2020-02-24@ 12:09:46

தேவையான பொருட்கள்
அரிசி - 1 கப்
கருப்பட்டி - 2 கப்
முழு உளுந்து - ¼கப்
ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
சுக்குத் தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க
நீர் - 1 கப்
செய்முறை
முதலில் அரிசி மற்றும் பருப்பை எடுத்துக் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கழுவி சுத்தம் செய்யவும். பின்பு அதனுடன் நீர் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்கவும். அரிசி ஊறியதும் அதனை வடிகட்டி மிக்ஸியில் போட்டு சிறிது நீர் சேர்த்து அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து 30 நிமிடம் - 1 மணி நேரம் வரை தனியே வைக்கவும். பின்பு கருப்பட்டியை உடைத்து ஒரு பானில் எடுத்துக் கொள்ளவும்.சிறிது நீர் சோ்க்கவும். நன்கு கலக்கி கருப்பட்டி கரையும் வரை கொதிக்க வைக்கவும். பின்பு அதனை வடிகட்டிக் ஒரு பானில் விடவும். சிறிது கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும். பின்பு அதனுடன் ஏலக்காய் தூள், சுக்குத் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். பின்பு தீயை குறைத்து வைக்கவும். பின்பு பைப்பிங் பேக்கை எடுத்துக் கொள்ளவும். அதனுள் மாவை நிரப்பி அதனை மூடியால் மூடவும். பின்பு எண்ணெயில் மாவை சுருள் சுருளாக விட்டு பொரித்தெடுக்கவும். பின்பு அதனை எடுத்து ஒரு தட்டில் வைக்கவும். அதனை கருப்பட்டி கலவையில் போட்டு 2-3 நிமிடங்கள் ஊற வைக்கவும். கருப்பட்டி ஜவ்வு மிட்டாய் பிரசாதம் தயார்.
Tags:
கருப்பட்டி மிட்டாய்மேலும் செய்திகள்
கிருஷ்ண கலய பிரசாதம்
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!