SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேரட் சாதம்

2020-02-19@ 15:43:04

தேவையானவை:

கேரட்- 6
வறுத்த, தோல் நீக்கிய நிலக்கடலை- 3 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
உதிர் உதிராக வேக வைத்த பாசுமதி அரிசி- 4 கப்

வறுத்து அரைக்க:

வெள்ளை உளுத்தம்பருப்பு- 2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1/2 தேக்கரண்டி
மிளகு- 6
சீரகம்- 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 10 இலைகள்
மிளகாய்வற்றல்- 5

தாளிக்க:
நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
பெருங்காயம்- 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1/2 இணுக்கு
கொத்தமல்லி- அலங்கரிக்க

செய்முறை:

பாசுமதி அரிசியை உதிர் உதிராக வேக வைத்து வாயகன்ற பாத்திரத்தில் ஆற வைத்துக் கொள்ளவும். கேரட்டை சுத்தம் செய்து தோலைச் சிறிதளவு நீக்கி(தோலிற்கு நெருக்கமான பகுதியில் தான் உயிர்ச்சத்து உள்ளதால் அதிகம் நீக்கத் தேவையில்லை) துருவி வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயிட்டு தாளிதப்பொருட்களைத் தாளித்துக் கொண்டு துருவிய கேரட்டை உப்பு சேர்த்து வதக்கவும். இன்னொரு வாணலியில் வறுக்கக் கொடுத்த பொருட்களை(சீரகத்தை மட்டும் கடைசியில் சேர்க்கவும்) வறுத்து பொற பொறவென்று அரைத்து வைக்கவும். கேரட் வெந்ததும் இந்தப் பொடியைச் சேர்த்து, தனியே வறுத்து வைத்திருக்கும் நிலக்கடலையையும் சேர்த்துக் கிளறவும். கேரட் கலவையைச் சிறிது ஆற விடவும், பின் ஆற வைத்திருக்கும் சாதத்துடன் சேர்த்துக் கிளறி கொத்தமல்லி தூவிப் பரிமாறவும். சுவையான, எளிதான, ஆரோக்கியமான கேரட் சாதம் தயார்.
வித்தியாசமான கேரட் பிரசாதம் தயார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • erode-dmk-votes-2

    அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!

  • scotland-bonfire-festival

    ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி

  • stalin-corp-31

    மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

  • long-whale-newyork

    35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

  • pak-blast-30

    பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்