SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாசி மாத விசேஷங்கள்

2020-02-11@ 10:04:08

மாசி 1, பிப்ரவரி 13, வியாழன் : பஞ்சமி. குறுக்குத்துறை முருகப்பெருமான் லட்ச தீபக் காட்சி. விஷ்ணுபதி புண்ணிய காலம்.  

மாசி 2, பிப்ரவரி 14, வெள்ளி : சஷ்டி. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி பிரம்மோற்ஸவம் ஆரம்பம்.

மாசி 3, பிப்ரவரி 15, சனி : சப்தமி. திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை. இன்று கருட தரிசனம். விஷ்ணுவாலய வழிபாடு நன்று. திஸ்ரோஷ்டகா.

மாசி 4, பிப்ரவரி 16, ஞாயிறு : அஷ்டமி. காளஹஸ்தி, திருக்கோகர்ணம். சைலம், திருவைகாவூர் இத்தலங்களில் சிவபெருமான் உற்சவம். கீழ்த்திருப்பதி கோவிந்த ராஜப்பெருமாள் சந்நதி எதிரில் ஸ்ரீஹனுமானுக்குத் திருமஞ்சன சேவை.

மாசி 5, பிப்ரவரி 17, திங்கள் : நவமி. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி வெள்ளி கைலாச வாகனத்திலும், அம்பாள் தங்க சிம்ம வாகனத்திலும் புறப்பாடு. அன்வஷ்டகா. திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

மாசி 6, பிப்ரவரி 18, செவ்வாய் : தசமி. சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு. காளஹஸ்தி சிவபெருமான் திருவீதியுலா.

மாசி 7, பிப்ரவரி 19, புதன் : ஏகாதசி. வேதாரண்யம் சிவபெருமான் உற்ஸவம் ஆரம்பம். காரிய நாயனார் குருபூஜை.

மாசி 8, பிப்ரவரி 20, வியாழன் : துவாதசி. முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

மாசி 9, பிப்ரவரி 21, வெள்ளி : திரயோதசி. திருவோணவிரதம். பிரதோஷம். மகா சிவராத்திரி. ராமேஸ்வரம் வெள்ளி ரதம்.

மாசி 10, பிப்ரவரி 22, சனி : சதுர்த்தசி. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப்பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீவரதராஜப் பெருமாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. குச்சனூர் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை. ராமேஸ்வரம் ஸ்ரீசுவாமி அம்பாள் ரதோற்ஸவம்.

மாசி 11, பிப்ரவரி 23, ஞாயிறு : அமாவாசை. குறுக்குத்துறை ஸ்ரீமுருகப்பெருமான் லட்சுமி தீபக் காட்சி. வேதாரண்யம் ஸ்ரீசிவபெருமான் பவனி. துவாபர யுகாதி.

மாசி 12, பிப்ரவரி 24, திங்கள் : பிரதமை. புத சுக்கிராளுக்கு மத்தியில் சூரியன் வரும்காலம் பானுமத்திம தோஷமாகும். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

மாசி 13, பிப்ரவரி 25, செவ்வாய் : துவிதியை. சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்க பூமாலை சூடியருளல். சந்திர தரிசனம். திருக்கண்டியூரில் பகல் 5 நாழிகைக்கு சூரிய பூஜை.

மாசி 14, பிப்ரவரி 26, புதன் : திரிதியை. திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். கோயம்புத்தூர் ஸ்ரீகோனியம்மன் புலி வாகனத்தில் திருவீதியுலா.

மாசி 15, பிப்ரவரி 27, வியாழன் : சதுர்த்தி. ஸ்ரீவிநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம். ஆராதனை, வழிபாடு செய்ய நன்று. சதுர்த்தி விரதம். சென்னை திருவெற்றியூர் ஸ்ரீவடிவுடையம்மன் கோயில் ஸ்ரீகணேசர் உற்சவம்.

மாசி 16, பிப்ரவரி 28, வெள்ளி : பஞ்சமி. காங்கேயநல்லூர் ஸ்ரீமுருகப்பெருமான் உற்சவம். சூரியப் பிரபையில் பவனி. திருச்செந்தூர் ஸ்ரீமுருகப் பெருமான் உற்சவம் ஆரம்பம். திருச்சி நாகநாதர், கும்பகோணம் திருமழபாடி ஸ்ரீவாஞ்சியம் மாசிமக உற்ஸவம் ஆரம்பம்.

மாசி 17, பிப்ரவரி 29, சனி : பஞ்சமி. பெருவயல் முருகப்பெருமான் மேஷ வாகனத்தில் பவனி. சஷ்டி விரதம். காங்கேயநல்லூர் முருகப் பெருமான் மயில் வாகனத்தில் திருவீதியுலா.

மாசி 18, மார்ச் 1, ஞாயிறு : சஷ்டி. காங்கேயம் முருகப்பெருமான் பூத வாகனத்தில் பவனி. கார்த்திகை விரதம்.

மாசி 19, மார்ச் 2, திங்கள் : சப்தமி. காரமடை அரங்கநாதர் உற்ஸவம் ஆரம்பம். நத்தம் மாரியம்மன் பவனி. வேதாரண்யம் சிவபெருமான் பவனி.  முருகப்பெருமான் சேஷ வாகனத்தில் திருவீதியுலா.

மாசி 20, மார்ச் 3, செவ்வாய் : அஷ்டமி. திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் திருவீதியுலா. திருக்கச்சிநம்பிகள் திருநட்சத்திரம். திருச்சி நாகநாத சுவாமி ரிஷப வாகனத்தில் 63 நாயன்மார்க்கு காட்சி கொடுத்தல்.

மாசி 21, மார்ச் 4, புதன் : நவமி. திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் மரத்தோளுக்கினியானில் பவனி. கோயம்புத்தூர் கோனியம்மன் ரதோற்ஸவம். திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசி தேரோட்டம். திருச்சி நாகநாத சுவாமி திருக்கல்யாண வைபவம், இரவு யானை வாகனம், காஞ்சியில் சுந்தரமூர்த்தி நாயனார் கண் பார்வைபெற்ற நாள். காஞ்சிபுரம் தேவராஜஸ்வாமி தென்னேரி தெப்பல், நுங்கம்பாக்கம்  சீதாராம் சுவாமிகள் ஜெயந்தி.

மாசி 22, மார்ச் 5, வியாழன் : தசமி. ஸ்மார்த்த ஏகாதசி. குலசேகராழ்வார். காஞ்சி ஏகாம்பரநாதர் தவன தோட்ட உற்சவம்.

மாசி 23, மார்ச் 6, வெள்ளி : ஏகாதசி. சுக்லபக்ஷ ஸர்வ ஏகாதசி. காரமடை அரங்கநாதர் திருகல்யாண வைபவம். வைஷ்ணவ ஏகாதசி.

மாசி 24, மார்ச் 7, சனி : திரயோதசி. சனி மஹாப் பிரதோஷம். மதுரை இன்மையில் நன்மை தருவார் புறப்பாடு. காங்கேயநல்லூர் முருகப் பெருமான் வள்ளி திருமணக்காட்சி. திருச்சி நாகநாத சுவாமி கோயில், திருமழபாடி, கும்பகோணம் ஆகிய ஸ்தலங்களில் தேரோட்டம்.

மாசி 25, மார்ச் 8, ஞாயிறு : சதுர்த்தசி. நடராஜர் அபிஷேகம். காரமடை அரங்கநாதர் கோயிலில் தேரோட்டம்.  மாசிமகம் (நட்சத்திரப்ரதான இடங்களில்). காஞ்சி காமாட்சி அம்மன் காலை தீர்த்தவாரி- இரவு வெள்ளி ரதம். காஞ்சி கச்சபேஸ்வரர் ஐயங்குளம் திருவூரல் உற்சவம், காஞ்சி தேவராஜஸ்வாமி ராஜகுளம் தெப்பல்.

மாசி 26, மார்ச் 9, திங்கள் : பௌர்ணமி. காமதகனம். திருமோகூர் காளமேகப் பெருமாள் யானை மலைக்கு ஸம்ஹார லீலை. திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோயிலில் தெப்பத்திருவிழா.

மாசி 27, மார்ச் 10, செவ்வாய் : பிரதமை. சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். நத்தம் மாரியம்மன் கோயிலில் பொங்கல் பெருவிழா. திருவள்ளுவ நாயனார் குருபூஜை. காஞ்சி கச்சபேஸ்வரர் தவன உற்சவம்.

மாசி 28, மார்ச் 11, புதன் : துவிதியை. திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. காங்கேயநல்லூர் முருகப்பெருமான் விடாயாற்று  உற்சவம். செம்மங்குடி ஆனந்தவல்லி அகஸ்தீஸ்வரர் ஆலய 22ம் வருட சம்வத்ஸரா
பிஷேகம்.

மாசி 29, மார்ச் 12, வியாழன் : திரிதியை. சங்கடஹர சதுர்த்தி. திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் உற்சவம்.  திருப்பதி  ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

மாசி 30, மார்ச் 13, வெள்ளி : சதுர்த்தி. பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அப்பால் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாசப் பெருமாள் காலை பல்லக்கு, இரவு வெள்ளி சூரியப்பிரபையில் பவனி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • RamMandirBhoomiPoojan05

    ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

  • ayothikkk1

    மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

  • italy_96611

    வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

  • umilneer11

    உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

  • 25-07-2020

    25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்