SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2020-02-08@ 08:43:50

பிப்ரவரி 08, சனி:   தைப்பூசம். பௌர்ணமி. பழநி முருகன் கோயிலில் தேரோட்டம். நாகர்கோவில் நாகராஜா கோயிலில் தேரோட்டம். திருவிடைமருதூர் ஸ்ரீமஹாலிங்கசுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகளுடன் காவேரியில் தீர்த்தம் கொடுத்தருளல், இரவு வெள்ளி ரதக்காட்சி, காஞ்சி வெள்ளிரிஷபம் பஞ்சமூர்த்தி உற்சவம், காஞ்சி ஸ்ரீகச்சபேஸ்வரர் ஒட்டிவாக்கம் திருவூறல் உற்சவம், காஞ்சி ஸ்ரீதேவராஜஸ்வாமி அனந்தசரஸ் தெப்பல், சிறுவாச்சூர் ஸ்ரீமதுரகாளி அம்மனுக்கு 46ம் ஆண்டு மகா அபிஷேகம். செறுவாமணி கிராமம் ஆலாத்தூர் ஸ்வாமிகள் ஆராதனை. வடலூர் ஸ்ரீராமலிங்க சுவாமிகள் ஜோதி தரிசனம். ராமேஸ்வரம் பிள்ளையார் தெப்பம்.  வாலாஜாபேட்டை அனந்தலை தன்வந்த்ரி ஆரோக்ய பீடத்தில் இன்று ஆண், பெண் திருமணத்தடை விலக, தம்பதிகள் குழந்தை பாக்யம் பெற பௌர்ணமி யாகம்.

பிப்ரவரி 09, ஞாயிறு: எண்கண் ஸ்ரீமுருகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தருளல். காஞ்சி பெருந்தேவி தெப்பம். ஸ்ரீமூஷ்ணம் ஸ்வேத நதித்தீர்த்தம். வாலாஜாபேட்டை அனந்தலை தன்வந்த்ரி ஆரோக்ய பீடத்தில் இன்று  அழியா செல்வம் பெற  சுப்ரமண்ய ஷடாக்ஷரீ ஹோமம்.

பிப்ரவரி 10, திங்கள்: மகா பஹூள பிரதமை. திருமழிசையாழ்வார். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. வாலாஜாபேட்டை அனந்தலை தன்வந்த்ரி ஆரோக்ய பீடத்தில் இன்று குரு மகான்கள் ஆசி பெற மஹா பெரியவர் மூலமந்திர ஹோமம்.

பிப்ரவரி 11, செவ்வாய்: வைத்தீஸ்வரன் கோயில் ஸ்ரீசெல்வமுத்துக்குமாரஸ்வாமி பவனி. தென்காசி ஸ்ரீவிஸ்வநாதர் லட்ச தீபக் காட்சி. வாலாஜாபேட்டை அனந்தலை தன்வந்த்ரி ஆரோக்ய பீடத்தில் இன்று துஸ்வப்ன பலன்கள் விலக  துஸ்வப்ன சாந்தி ஹோமம்.

பிப்ரவரி 12, புதன்:  க்ருஷ்ணபட்ச சங்கடஹர சதுர்த்தி. வாலாஜாபேட்டை அனந்தலை தன்வந்த்ரி ஆரோக்ய பீடத்தில் இன்று  சங்கடங்கள் விலக  சங்கடஹர கணபதி ஹோமம்.

பிப்ரவரி 13, வியாழன்: பஞ்சமி. குறுக்குத்துறை முருகப்பெருமான் லட்ச தீபக் காட்சி. விஷ்ணுபதி புண்ணிய காலம்.  வாலாஜாபேட்டை அனந்தலை தன்வந்த்ரி ஆரோக்ய பீடத்தில் இன்று மன தைரியம் கிடைக்க வீர கணபதி ஹோமம்.

பிப்ரவரி 14, வெள்ளி: சஷ்டி. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி பிரம்மோற்சவாரம்பம். வாலாஜாபேட்டை அனந்தலை தன்வந்த்ரி ஆரோக்ய பீடத்தில் இன்று விஷ ஜுரம் அகல  இந்திராக்ஷி ஹோமம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • RamMandirBhoomiPoojan05

    ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

  • ayothikkk1

    மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

  • italy_96611

    வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

  • umilneer11

    உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

  • 25-07-2020

    25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்