SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பழ தலவிருட்சங்கள் : ட்வென்ட்டி 20

2013-12-11@ 16:00:48

ஔவையாருக்குச் சுட்டபழம் உதிர்த்துத் தந்தானே முருகன், அந்த நாவல் மரம், பழமுதிர்ச்சோலையில் தலவிருட்சம். இது கந்த சஷ்டி நாட்களில் மட்டுமே  கனி தருகிறது!

திருவையாற்றுக்கு அருகே உள்ளது திருக்கூடலூர். ஆடுதுறைப்பெருமாள் அருளும் இத்தலத்தின் தல
விருட்சம் பலாமரம்.

ஜம்பு முனிவரால் வளர்க்கப்பட்ட வெண்நாவல் மரத்தை தலவிருட்சமாகக் கொண்டது, ஜம்புகேஸ்வரம் எனும் திருவானைக்காவல்.

நான்கு புறங்களிலும் நான்கு வகை சுவைகளுடன் பழங்கள் தரும் அதிசய மாமரம், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத் தலவிருட் சமாகும்.

காழிச்சீராம விண்ணகரம் எனும் சீர்காழி தாடாளன் ஆலயத்தின் தல விருட்சம் பலாமரம்.

தஞ்சாவூர்-திருப்பழனம் ஆபத்சகாயர் ஆலயத்தில் கதலி வாழை மரமே தல விருட்சம்.

திருச்சி-மாந்துறை ஆம்ரவனேஸ்வரர் ஆலயத்தில், பெயருக்கேற்றபடி (வடமொழியில் ‘ஆம்’ என்றால் மாம்பழம்) மாமரமே தலவிருட் சம்.

திருநீலக்குடி மனோக்ஞ்ய நாத சுவாமி ஆலயத்தில் வன்னி, கூவிளம், நொச்சி, விளா, மாவிலங்கை ஆகிய ஐந்து மரங்கள் தலமரங் களாகத் திகழ்வதால்  பஞ்சவில்வவனேசர் என ஈசன் வணங்கப்படுகிறார். தற்போது ஆலயத்தில் பலாமரமும் ஆறாவது தல மரமாகத் திகழ்கிறது.

திருவையாற்றுக்குக் கிழக்கே சந்திரன் வணங்கி பேறு பெற்ற திங்களூர் கயிலாயநாதர் ஆலயத்தின் தலவிருட்சங்கள் வாழையும்
வில்வமும்.

நாகராஜனுக்கு திருமால் திருவருள் புரிந்த நாகப்பட்டினத்தில் அருளும் சௌந்தரராஜப் பெருமாளை அழகியார் என ஆழ்வார்கள்  போற்றிப் பாடியுள்ளனர். இங்கு  தல விருட்சம், மாமரம்.

திருக்கழுக்குன்றத்தின் தல விருட்சம் வண்டுவகை வாழையாகும். ஐந்தாம் திருவிழாவில் வாழை மரங்கள் கட்டிய சப்பரத்தில் வேதபு ரீஸ்வரர்  திரிபுரசுந்தரியுடன் எழுந்தருள்வார். அச்சேவை கதலி விருட்ச சேவை எனப்படுகிறது.

திருவோத்தூர் வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் திருஞானசம்பந்தரால் ஆண் பனைமரம் பெண் பனைமரமாகி காய்த்த அற்புதம் நடந்தது.  அந்த பனைமரமே  ஆலயத்தின் தல விருட்சம். திருவோத்தூர் தலபுராணத்தில் இப்பனைமரம் ஈசனின் அர்த்தநாரீஸ்வர திருக்கோலம் கொண்டது என  குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றாலம் குற்றாலநாதர் ஆலயத்தில் குறும்பலாவே தலவிருட்சம். அதற்கு தினமும் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. புகழ்பெற்ற குற் றாலக் குறவஞ்சியிலும்  இம்மரத்தின் பெருமை குறிப்பிடப்பட்டுள்ளது.

திருக்கரம்பனூர் எனும் உத்தமர் கோயிலில் கதலி வாழையே தலமரமாக உள்ளது. இத்தலம் சப்தகுருத்தலமாக போற்றப்படுகிறது.

கும்பகோணம் அருகில் உள்ள திருவிசநல்லூர் சிவயோகநாதர் கோயிலில் பரசுவில்வம், வன்னி, உந்துவில்வம், புன்னை, மகிழம்,  ஆல், அரசு  போன்றவற்றோடு நெல்லிக்கனியும் தல விருட்சமாக உள்ளது. இத்தல ஈசனின் லிங்கத்திருமேனியில் ஏழு சடைகள் உள்ளன.

பத்ரிநாத் ஆலயத்தில் இலந்தை மரமே தலவிருட்சம். இந்த பத்ரி நாராயணனின் சந்நதியில் ஏற்றப்படும் விளக்கு, பனிக்காலத்திற்காக  6 மாதங்கள் மூடப்பட்டு,  பின் திறக்கப்பட்டாலும் எரிந்து கொண்டிருப்பது அதிசயம்.

திருமால் நின்றும் இருந்தும் கிடந்தும் அமர்ந்தும் நடந்தும் தன் அழகுத் திருக்கோலங்களை பக்தர்களுக்குக் காட்டியருளும் தி ருக்கோஷ்டியூரின் தல விருட்சம்  பலாமரம். ராமானுஜர், ‘ஓம் நமோநாராயணாய’ எனும் எட்டெழுத்து மந்திரத்தை பக்தர்களுக்கு உபதேசம் செய்த  தலம் இது.

நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வரர் ஆலய தலவிருட்சமான மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூன்று சுவைகளுடன் கனிகள் தரும் அதிசய மரமாகும்.

புதுக்கோட்டை திருமெய்யம் சத்யமூர்த்திப்பெருமாள் ஆலயத்தில் பலாமரம் தலவிருட்சமாக விளங்குகிறது. மணவாளமாமுனிகள் தன்  இளமைக் காலத்தில்  வாழ்ந்த தலம் இது.

திருச்சிக்கு அருகே திருப்பைஞ்ஞீலியில் வாழை மரமே தலவிருட்சம். திருமணத்தடை உள்ளவர்களுக்கு இங்கு வாழைமர பூஜை  செய்து அந்த தடையை  நீக்குகின்றனர்.

-ந. பரணிகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 06-03-2021

  06-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • military-helicopter5

  துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!

 • 05-03-2021

  05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 100farmmmm

  100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?

 • train4

  கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்