SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2020-01-31@ 16:44:00

பிப்ரவரி 01, சனி :  ரதஸப்தமி. காஞ்சிபுரம் கடுக்களூர் ஸ்ரீஆதிகேசவ பெருமாள் ரதஸப்தமி, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கலசபாக்க தீர்த்தவாரி. செந்தலை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் கந்தர்வ பெண் சந்திரரேகைக்கு காவேரியில் தீர்த்தம் கொடுத்தல். வாலாஜாபேட்டை அனந்தலை தன்வந்த்ரி ஆரோக்யபீடத்தில் இன்று ஆண் குழந்தை வரம், இந்திர பதவி கிடைக்க  அஸ்வமேத பூஜை.

பிப்ரவரி 02, ஞாயிறு : அஷ்டமி. திருநெல்வேலி நெல்லையப்பர் நெல்லுக்கு வேலி கட்டிய திருவிளையாடல். மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் ரிஷப வாகனத்தில் பவனி. சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை. வாலாஜாபேட்டை அனந்தலை தன்வந்த்ரி ஆரோக்யபீடத்தில்  இன்று வாழ்க்கை உயர  சாஸ்தா ஹோமம்.

பிப்ரவரி 03, திங்கள் : நவமி. தை கிருத்திகை. பழநி ஸ்ரீஆண்டவர் வௌ்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி. வாலாஜாபேட்டை அனந்தலை தன்வந்த்ரி ஆரோக்யபீடத்தில் இன்று  தந்தை மகன் ஒற்றுமைக்காக  சூரிய நாராயணர் ஹோமம். திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தேரோட்டம்.

பிப்ரவரி 04, செவ்வாய் : ராமேஸ்வரம் கோயிலில் தேரோட்டம். காஞ்சிபுரம் ஸ்ரீஉலகளந்த பெருமாள் புறப்பாடு. வாலாஜாபேட்டை அனந்தலை தன்வந்த்ரி ஆரோக்யபீடத்தில் இன்று  பித்ரு சாபம், நாகதோஷம் விலக  நாகதேவர் ஹோமம். திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தெப்பத்திருவிழா.

பிப்ரவரி 05, புதன் : ஏகாதசி. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருக்கல்யாணம். காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலில் தெப்பத்திருவிழா. திருவெண்காடு சுப்ரமண்ய கனபாடிகள் டிரஸ்ட் 82ம் வருடம் சதுர்வேத பாராயணத்துடன் கூடிய மகாருத்ர யாகம். கோவை 10 திருப்பேரூர் எனும் மேலை சிதம்பர க்ஷேத்திரத்தில் தை 22ந் தேதி புதன் முதல் மாசி 3 சனிக்கிழமை வரை (05 -02-2020  15-02-2020) நடைபெறுகிறது. ஸர்வபீஷ்ம ஏகாதசி. வாலாஜாபேட்டை அனந்தலை தன்வந்த்ரி ஆரோக்யபீடத்தில் இன்று  உடற்பிணி, மனப்பிணி அகல  ஏகாதசி ஹோமம்.

பிப்ரவரி 06, வியாழன் : துவாதசி. சுக்லபட்ச மகா பிரதோஷம். திருச்சேறை ஸ்ரீசாரநாதர் சூர்ணாபிஷேகம். ஸ்ரீவராஹத் துவாதசி.  வாலாஜாபேட்டை அனந்தலை தன்வந்த்ரி ஆரோக்யபீடத்தில் இன்று இதய நோய் நிவர்த்தியாக  சூரிய சாந்தி ஹோமம்.

பிப்ரவரி 07, வெள்ளி : ஸ்ரீ ரங்கம் கோயிலில் தை தேரோட்டம். திருச்சேறை ஸ்ரீசாரநாதர் பருத்திசேரி எழுந்தருளல். கோயம்புத்தூர் ஸ்ரீபாலதண்டாயுதபாணி திருக்கல்யாணம். வாலாஜாபேட்டை அனந்தலை தன்வந்த்ரி ஆரோக்யபீடத்தில் இன்று அரசு பதவி கிடைக்க  லக்ஷ்மி ஹோமம். பழநி முருகன் கோயிலில் திருக்கல்யாணம். பூதப்பாண்டி பூதலிங்க ஸ்வாமி கோயிலில் தேரோட்டம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • formars29

  வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் வெடித்தது போராட்டம்!: இந்தியா கேட் அருகே டிராக்டரை தீயிட்டு எதிர்ப்பு..!!

 • coronadeath29

  கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் உலக நாடுகள்!: கொடிய தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது..!!

 • thee29

  பற்றி எரியும் காட்டுத்தீயால் கண்ணீரில் தத்தளிக்கும் கலிபோர்னியா மாகாணம்!: பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு..!!

 • vadothara29

  குஜராத் மாநிலம் வதோதராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி!: 10 பேர் இடிபாடுகளில் சிக்கினர்!!

 • dmk28

  புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தி.மு.க தலைமையில் தோழமைக் கட்சிகள் தமிழகம் முழுவதும் போராட்டம்: காஞ்சியில் ஸ்டாலின் பங்கேற்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்