SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சகல தோஷம் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ உதவும் கோமுக தீர்த்தம் பற்றி தெரியுமா?

2020-01-22@ 11:31:54

மிக மிக சாதாரணமாக கிடைக்கும் விலை மதிப்பில்லாத சில விஷயங்கள் நம் கண்களுக்கு புலப்படுவதே இல்லை. அப்படி தெரிந்தாலும் அதன் மதிப்பை நாம் உணருவதில்லை. இக்கால கட்டத்தில் இதை செய்தால் நல்லது என்று கூறுவதற்கு கூட நேரம் இல்லாமல் போய்விட்டது. அரிய பல புண்ணிய பொருட்களில் சில சாதாரணமாக கிடைக்க கூடிய ஒன்றாக இருக்கிறது. அவற்றில் திருத்தலங்களில் தெய்வ கருவறையில் இருந்து வெளியேற கூடிய வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கும் கோமுகமும் ஒன்றாகும். இந்த கோமுகத்திலிருந்து வரும் புனித தீர்த்தம் மிகுந்த சக்தி வாய்ந்தது.

கோவிலுக்கு செல்லும் போது பலர் இந்த கோமுகத்திலிருந்து கிடைக்கும் புனித நீரை தலையில் தெளித்து கொள்வதை நாம் பார்த்திருப்போம். சிலர் பிடித்து கொண்டு வீட்டிற்கும் எடுத்து செல்வர். இன்னும் சிலர் பார்ப்பதற்கு அசுத்தமாக தெரிவதால் என்னவென்றே தெரியாமல் முழித்து விட்டு சென்று விடுவர்.

கோவில் மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் தெய்வ சிலைகளுக்கு செய்யப்படும் அபிஷேக பொருட்கள் இறைவனின் திருமேனி மீது பட்டு வழிந்து கருவறையிலிருந்து இந்த கோமுகம் வழியாக தான் வெளியேறும். இங்கு பற்பல கோடி தேவதைகள் குடி கொண்டிருப்பதாக சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. பூமியில் ஓடும் கங்கை, யமுனை போன்ற புண்ணிய நதிகளின் பலன்களை விட இந்த கோமுக தீர்த்தம் மகிமை வாய்ந்தது. இந்த புண்ணிய நதிகளே கோமுக தீர்த்தத்தை தெளித்து தூய்மை அடைவதாக சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கோவிலுக்கு செல்லும் போது கோமுக நீரை தெளித்து கொள்வதால் நம்மிடம் இருக்கும் தீவினைகள் ஒழிந்து மனம் சுத்தமாகும் என்பது ஐதீகம். விசாக நட்சத்திரத்தன்று இந்த புனித தீர்த்தத்தை ஒரு கண்ணாடி பாட்டிலில் அடைத்து கொண்டு சென்று வீட்டில், உங்கள் வியாபார ஸ்தலங்களில், பணம் வைக்கும் இடத்தில், வாகனம் மற்றும் குடும்ப நபர்களின் மீதும் தெளித்து விட வேண்டும். இதனால் வளம் பெருகி செல்வ செழிப்பு உண்டாகும். பரணி, மகம் நட்சத்திரத்தன்று பிடித்து கொண்டு வரப்படும் கோமுக தீர்த்தத்திற்கு தனி சிறப்பு உண்டு.

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அப்படியே இருக்கும். இந்த இரண்டு நட்சத்திரங்களன்று தெளித்து கொள்வதால் விபத்துகள் ஏற்படாது. எம பயம் நீங்கும். கோமுக நீரை கொண்டு வந்து பூஜை அறையில் எப்போதும் இந்த நீரை வைத்திருக்கலாம். முக்கிய நட்சத்திரத்தன்று இதே போல் செய்வதால் சகல தோஷங்கள் நீங்கும் என்றும் கூறப்படுகிறது. எந்த விதமான கண் திருஷ்டியும் நீங்கும். கெட்ட கனவுகள் வந்து பயமுறுத்தாது. இந்த தீர்த்தத்தை அருந்துவதால் தீராத பிணிகள் தீரும். இது போல் ஒவ்வொரு நட்சத்திரத்தன்றும் பல்வேறு பலன்களை பெறலாம்.

கார்த்திகை நட்சத்திரத்தன்று கோமுக தீர்த்தத்தை தெளித்து கொள்வதால் பிரிந்த தம்பதியர் விரைவில் ஒன்று சேருவார்கள். ரோகிணி நட்சத்திரத்தன்று தெளித்து கொள்வதால் குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தை பிறக்கும். திருவாதிரை நட்சத்திரத்தன்று தெளித்து கொள்வதால் ஆரோக்கியம் சீர்படும். புனர்பூசம் நட்சத்திரத்தன்று தெளித்து கொள்வதால் திருமண தடை நீங்கும். பூசம் நட்சத்திரத்தன்று தெளித்து கொள்வதால் பூர்வ ஜென்ம பாவங்கள் விலகும். அஸ்தம் நட்சத்திரத்தன்று தெளித்து கொள்வதால் உதவிகள் கிட்டும். கடன் பிரச்சனை தீரும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News Advertisement
Like Us on Facebook Dinkaran Daily News
 • haryana28

  மதம் மாற மறுத்த இளம்பெண்..பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை!: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பல இடங்களில் ஆர்ப்பாட்டம்..!!

 • water28

  தென் அமெரிக்காவில் 2,000 ஆண்டுக்களுக்கு முந்தைய மக்களான மயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் கண்டுபிடிப்பு: ஆச்சர்யத்தில் ஆய்வாளர்கள்..!!

 • biharele28

  கொரோனா பாதிப்புகளுக்கு இடையே பீகார் சட்டசபை தேர்தல் 2020: முதல் கட்டமாக 71 தொகுதிகளில் வாக்கு பதிவு தொடக்கம்..!!

 • pakistanbomb27

  பாகிஸ்தானில் மத பாடசாலையில் பயங்கர குண்டு வெடிப்பு!: சிறுவர்கள் உள்பட 7 பேர் பலி...70க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!

 • bee27

  6 லட்சத்துக்கும் அதிகமான தேனீக்களை உடலில் சுமந்து சீன இளைஞர் கின்னஸ் சாதனை!: பேஸ்புக்கில் கலக்கும் வித்தியாசமான சாதனை முயற்சி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்