பிரண்டை சாதம்
2020-01-21@ 13:44:18

தேவையான பொருட்கள்
உதிராக வடித்த சாதம் - 2 கப்.
பொடிக்கு...
பொடியாக நறுக்கிய பிரண்டை - 1/2 கப்,
தேங்காய்த் துருவல் - 1/2 கப்,
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 3,
புளி - சிறிய எலுமிச்சம்பழ அளவு,
உப்பு - தேவைக்கு.
தாளிக்க...
கடுகு, உளுத் தம்பருப்பு,
கடலைப்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்,நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,
நெய் - 1 டீஸ்பூன்.
அலங்கரிக்க...
நெய்யில் வறுத்த குண்டுமிளகாய் - 3,
கறிவேப்பிலை - 5 இலைகள்.
எப்படிச் செய்வது?
கடாயில் பொடிக்கு கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய் இல்லாமல் தனித்தனியாக வறுத்து ஆறவைக்கவும். பிரண்டையை தனியாக எண்ணெயில் முறுவலாக வறுத்தெடுத்து ஆறவைக்கவும். ஆறியதும் அனைத்து பொருட்களையும் கலந்து பொடிக்கவும். கடாயில் தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து, சாதம், பொடித்த பொடி சேர்த்து நன்கு கலந்து, கறிவேப்பிலையை தூவி, அதன்மேல் குண்டுமிளகாய் வைத்து அலங்கரித்து நிவேதிக்கவும்.
மேலும் செய்திகள்
கிருஷ்ண கலய பிரசாதம்
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி