திருப்பம் தரும் திருமலை தரிசனம்!
2020-01-21@ 10:17:16

தேனாய் இனிக்கிறது
திருமலையை நினைத்தால்
திருப்பம் வருகிறது
விரும்பும் வாழ்வை
திருவேங்கடம் தருகிறது!
பணத்தால் கூடும்
பயனுள்ள இன்பமதை
குணம் மாறாதேற்க
குன்றென காத்திடுவாய்
குறைகள் பொறுத்திடுவாய்!
மாசறு மங்கைமணாளன்
மல்லிகை சிரிப்பில்
மனநோய் பறந்திடும்
மைவிழி மான்நோக்கில்
மங்கலம் நிறைந்திடும்!
திடமன சந்திரக்கலையை
திருமால் தந்திடுவார்
கேட்பதை கொடுத்து
கோரிக்கை வைத்தால்
கோவிந்தன் வந்திடுவான்!
மனமூடிய மேகம்விலக
மாயனை சரணடைவோம்
தனம்கோடி தொழில்வளர
தயாளனை போற்றிடுவோம்
தயவுடன் கேட்டிடுவோம்!
வளைந்து கொடுத்தால்
வாழ்வு ஏற்றம்காணும்
மலைப்பாதை சொல்கிறது
மலையப்பன் மனம்நெகிழ
மோட்சசக்தி வீடுசேர்கிறது!
தன்னைத்தான் அறிந்தவன்
தரணியில் தாழ்வதில்லை
உன்னையும் உணர்ந்தவன்
உருமாறி விழ்வதில்லை
திருமலைவாசன் கைவிடுவதில்லை!
திருக்கோயில் சிற்றெறும்பாய்
திருமாலின் மனக்கரும்பாய்
திருவாழ்வு காலம்கழிய
திருக்கண் அருள்புரிவாய்
திருவாசல் சேவகனாவேன்!
போலி வாழ்வில்
அறிவை செலுத்தி
பயனற்று வாழ்ந்தது போதும்
மண்ணை பொன்னாக்கும்
பணியில் மனதை திருப்பி
மாநிலம் பயனுற வாழ்வோம்
மாதவ னருள் துணையாகும்!
விஷ்ணுதாசன்
மேலும் செய்திகள்
சிறப்புகள் அள்ளித்தரும் செங்கதிரோன்
சகலமும் அருளும் சமத்துவ நாயகன்
வேதத்தில் அக்னி
மூவாக்னி
கிரி வலம் எனும் இருதய ஸ்தானம்
தீபமே பிரம்மம்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்