பனங்கற்கண்டு பால் பொங்கல்
2020-01-14@ 14:51:50

தேவையானவை
பனங்கற்கண்டு - 100 கிராம்
பச்சரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
பால் - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
ஏலக்காய் - 2
உலர் திராட்சை, முந்திரி - தலா ஒரு ஸ்பூன்
பாதாம் துருவல் - 1 ஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 1/4 கப்
செய்முறை
வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். அரிசியை கழுவி சுத்தம் செய்து, பாசிப்பருப்பு, பால் சேர்த்து குழைய வேகவிடவும். சூடான நெய்யில் ஏலக்காய், உலர்திராட்சை, முந்திரியை வறுத்து இதில் சேர்க்கவும். இறுதியாக பொடித்த பனங்கற்கண்டு, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறவும். பனங்கற்கண்டு கரைந்ததும் சிறிது நெய் ஊற்றி அடுப்பில் இருந்து இறக்கவும். பின்னர் பாதாம் துருவலை சேர்க்கவும். பனங்கற்கண்டு பால் பொங்கல் ரெடி.
மேலும் செய்திகள்
மாட்டுப் பொங்கலன்று நந்திக்கு மரியாதை
விவசாயிகளின் ஆனந்த பொங்கல் எங்கே?
சாமை அரிசி பொங்கல்
கவுனி அரிசி பொங்கல்
அவல் சர்க்கரை பொங்கல்
மஞ்சள் பூசணி பொங்கல்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்