SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

“யாரை நேசிக்கிறாயோ அவர்களுடன் இருப்பாய்.”

2020-01-13@ 17:38:41

இஸ்லாமிய வாழ்வியல்

ஒரு மனிதர் இறைத்தூதரிடம் வந்து,“இறைத்தூதர் அவர்களே, மறுமை எப்போது நிகழும்?” என்று கேட்டார். அதற்கு நபிகளார், “உனக்கென்ன கேடு! அதற்கு நீ என்னென்ன ஆயத்தங்களைச் செய்திருக்கின்றாய்?” என்று கேட்டார். அந்த மனிதர்,“நான் அதற்காக எந்த ஆயத்தமும் செய்யவில்லை. ஆயினும் நான் இறைவனையும் இறைத்தூதரையும் நேசிக்கிறேன்” என்றார். உடனே அண்ணலார்,“நீ யாரை நேசிக்கிறாயோ அவர்களுடன் இருப்பாய்” என்றார்.

(புகாரி, முஸ்லிம்)

இந்த நபிமொழியை அறிவிக்கும் அனஸ் அவர்கள் கூறுகிறார்: “இந்த பதிலைக் கேட்டு முஸ்லிம்கள் வேறு எப்போதும் இல்லாத
அளவுக்குப் பெரிதும் மகிழ்ந்தனர்.”

முதுபெரும் மார்க்க அறிஞர் மௌலானா முஹம்மது பாரூக் கான் அவர்கள் இந்த நபிமொழிக்குப் பின்வருமாறு விளக்கம் அளித்துள்ளார்: இக்லாஸ் எனும் தூய எண்ணத்திற்கு அடிப்படையாக இருப்பது அன்புதான். யாதொன்றின் மீதும் முழுமையான ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் கொள்ளச்செய்வது அதன்மீது மனத்தை ஒருமுகப்படுத்தச் செய்வதும் அன்புதான். எல்லாவற்றுக்கும் அடிப்படை அன்புதான். உலக வாழ்க்கையிலும் சரி, மறுமை தொடர்பான வற்றிலும் சரி, அன்புதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. வரையறுக்கிறது. தீர்க்கமான பங்காற்றுகிறது. மார்க்கத்தின் உண்மையான உயிரோட்டமாக, உச்சமாக இருப்பது இறைவன் மீதான அன்புதான்.

இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்கள் “மார்க்கத்தின் அடிப்படை இறைவன் மீதான அன்புதான்” என்று அறிவித்துள்ளார். மார்க்கக் கடமைகளைச் சிறப்பாக நிறைவேற்றி முடிப்பதும் இறைவன் மீதான அன்பைப் பொறுத்ததே. ஒருவர் இறைவன் மீது வைத்திருக்கிற அன்பில் குறையோ பழுதோ இருந்தால் அது அவருடைய மார்க்கத்திலும் குறைபாட்டையும் பழுதையும் ஏற்படுத்திவிடும் என்கிறார் அறிஞர் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்கள்.
நபித்தோழர்களுக்கு “நீ யாரை நேசிக்கிறாயோ அவர்களுடன்தான் இருப்பாய் என்கிற அண்ணல் நபிகளாரின் வாக்கு தித்திக்கும் செய்தியாக இனித்தது.

என்னதான் நற்செயல்கள், புண்ணிய செயல்கள் நிறைய செய்திருந்தாலும் அவர்களுக்குத் தங்கள் செயல்களில் மனநிறைவு இருக்கவில்லை. அவற்றில் குறையோ பழுதோ இருக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனால் அவர்களின் உள்ளம் மட்டும் இறைவன் மீதும் இறைத்தூதரின் மீதும் மாசற்ற அன்பால் நிறைந்திருந்தது. அவர்களைப் பொறுத்தவரை, இறையன்பும் இறைத்தூதர் மீதான அன்பும்தான் வாழ்வின் மிகப்பெரும் சொத்தாக இருந்தது.

இதனால், “மனிதன் யார் மீது அன்புகொண்டுள்ளானோ அவர்களுடன்தான் இருப்பான்” என அண்ணல் நபிகளார் சொன்னதும் இறைவனின் நெருக்கமும் இறைத்தூதரின் தோழமையும் மறுமையில் தங்களுக்குக் கிடைப்பது உறுதி என்று உணர்ந்துவிட்டனர். மகிழ்ச்சிக் கடலில் மிதந்தனர். மனித வாழ்வில் தீர்மானமான பங்கை ஆற்றுவது அவன் ஒருவன் மீது வைத்திருக்கின்ற அன்பும் நேசமும்தான்.

- சிராஜுல்ஹஸன்

இந்த வார சிந்தனை


“ஒருவர் இறைவனுக்காகவே நேசிக்கிறார்; இறைவனுக்காகவே வெறுக்கிறார்; இறைவனுக்காகவே கொடுக்கிறார்; இறைவனுக்காகவே கொடாதிருக்கிறார் எனில் அவர் தம்முடைய ஈமானை - இறைநம்பிக்கையை நிறைவு செய்துகொண்டவர் ஆவார்.”

- நபிமொழி(அபூதாவூத்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • RamMandirBhoomiPoojan05

  ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்