செல்வர் அப்பம்
2020-01-09@ 17:28:52

இது ஸ்ரீரங்கம் கோவில் வைகுண்ட ஏகாதசி, பகல் பத்து, ராப்பத்து இருபது நாட்களில் மட்டும் கோவிலில் கிடைக்கும் சிறப்பு பிரசாதம்..
தேவையான பொருள்கள்:
நெய் - 1/2 கிலோ
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசியை முதல்நாளே ஒரு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து நீரை வடித்துக் கொள்ளவும். பிறகு அதை உரலில் போட்டு இடித்து மாவாக்கி சலித்து வைத்துக் கொள்ளவும்.. சலித்த மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி ஈரப் பதத்துடன் கையால் நன்கு அழுத்தி அடைத்து வைத்துவிடவும். சலித்ததில் கடைசியாக மிச்சம் இருக்கும் மெல்லிய ரவை போன்ற கப்பியை உப்புப் போட்டு தண்ணீர் விட்டு கஞ்சியாகக் காய்ச்சி வைத்துக் கொள்ளவும்,. இவைகளை முதல்நாளே செய்துவைத்துக் கொண்டால்தான் மாவு புளிப்பாக இருக்கும்.
அடுத்த நாள், முதல்நாள் தயார் செய்துவைத்துள்ள கஞ்சியை அடைத்து வைத்துள்ள மாவில் கொட்டி கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது உப்பும், தண்ணீரும் சேர்த்துக் கொள்ளவும். பிசைந்த மாவை ஒரு வெள்ளைத் துணியில் தட்டை மாதிரி(தட்டையை விட சற்று தடிமனாகத்) தட்டிக்கொள்ளவும். வாணலியில் நெய்யைச் சூடாக்கி, அப்பங்களைப் பொன்னிறமாக, நன்றாக ஓசை அடங்கும் வரை மிதமான சூட்டில் பொரித்து எடுத்து, நெய்யை வடித்தபின் பெருமாளுக்கு நிவேதிக்கவும். மணமணக்கும் செல்வர் அப்பம் தயார்..
மேலும் செய்திகள்
கிருஷ்ண கலய பிரசாதம்
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!