SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிறந்த தேதி பலன்கள் : மே 4 முதல் 10 வரை

2013-12-11@ 16:00:48

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

மனசில் தைரியமும் தன்னம்பிக்கையும் வளர்ந்து புது பலம் கொடுக்குமுங்க. உங்களோட பல கனவுகள் இப்ப நினைவாகுமுங்க. நீங்க எதிர்பார்த்தபடியே உங்க திட்டங்கள்லாம் நிறைவேறும். குடும்பத்ல சுபவிசேஷங்கள் சந்தோஷம் பரப்புமுங்க. இதை ஒரு காரணமா வெச்சுகிட்டாவது ரொம்ப நாளாகத் தொடர்பு இல்லாதிருந்த உறவுக்காரங்க, நண்பர்கள் வந்து உறவையும் நட்பையும் புதுப்பிச்சுப்பாங்க. இந்தத் தேதி இளைஞர்களின் காதல், திருமணமாகக் கைகூட பெற்றோர் ஆசி கிடைக்குமுங்க. உத்யோகத்தில் நிலுவையிலிருந்த சலுகைகளும் உயர்வும் கூடுதல் பொறுப்பும் புதுத் தெம்பைக் கொடுக்குமுங்க. தொழில், வியாபாரம் எல்லாம் மேன்மையாகும். கண் உபத்திரவம் ஏற்படும்.

இந்தத் தேதிப் பெண்களுக்கு புது அணிகலன் சேருமுங்க. செவ்வாயன்று துர்க்கையை வழிபடுங்க: தடைகள் தூள் தூளாகும்.

2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

பழைய அனுபவங்கள் கற்றுத் தந்த பாடங்களை அடிக்கடி மறந்து போறீங்க. எப்போதும் நிதானமா நடந்துக்கறது ரொம்பவும் அவசியமுங்க. அவசரப்படறது, பரபரக்கறதால எந்த வேலையையும் நிறைவாகச் செய்ய முடியாதுங்கறதை நீங்க இன்னும் புரிஞ்சுக்காம இருக்கீங்க. உங்களோட அனாவசியப் பேச்சுதான் சுமுகமான குடும்பப் போக்கில் கொஞ்சம் சலனத்தை ஏற்படுத்துமுங்க. உத்யோகத்ல தைரியமா, விவேகமா எடுக்கற நடவடிக்கைகளால உயர்வடைவீங்க. ஆனால், உணர்ச்சிவசப்படாம நடந்துகிட்டா அந்த உயர்வுக்கு நீங்க பூரணமா தகுதியாவீங்க. தொழில், வியாபாரத்ல எதிர்ப்புகளும் மறைமுகப் போட்டிகளும் இருந்தாலும் யதார்த்தத்தைப் புரிஞ்சுகிட்டு நடந்துகிட்டா, நிலைமைகள் சாதகமாகிடுமுங்க. உணவுக் குழாய், தொண்டை பகுதிகள்ல உபாதை வருமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் பொறுமையால் சாதிச்சுக் காட்டுவீங்க. சனிக்கிழமை சிவனை வழிபடுங்க; சிக்கல் எல்லாம் தீரும்.  

3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு


பொதுவாகவே வேலைப்பளு எவ்ளோதான் அதிகமா இருந்தாலும் அதையெல்லாம் அனாயசமாகத் தாங்கறவர்தான் நீங்க. ஆனா, ஆதாயம், நஷ்டம்னு கணக்கு போட்டு, அந்த வேலைகளை அரைகுறையாக்கிடாதீங்க. அதேபோல தலையில கொஞ்சம் கனத்தை ஏத்திகிட்டு குடும்பத்லேயும் வெளியிடங்கள்லேயும் அலட்சியமாகவும் ஆணவத்தோடும் நடந்துக்காதீங்க. முக்கியமா, யார் பேச்சையோ கேட்டு குடும்பத்ல இருக்கறவங்களை சந்தேகிக்காதீங்க. குடும்பத்தாரின் நியாயமான மனவருத்தமே உங்களுக்குப் பெரிய எதிரிங்க. அவங்களோட யோசனைகளைக் காதுகொடுத்துக் கேளுங்க. சிலருக்கு காது-மூக்கு-தொண்டை பகுதிகள்ல கோளாறு வருமுங்க.

இந்தத் தேதிப் பெண்களுக்கு, உறவினரிடையே மதிப்பு கூடுமுங்க. புதன்கிழமை அனுமனை வழிபடுங்க. புது வாழ்க்கை அமையும்.

4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

தெய்வ பலம்தான் உங்களை வழிநடத்துங்கற உண்மையை உங்க அனுபவத்லேர்ந்தே நீங்க புரிஞ்சுகிட்டிருந்திருப்பீங்க. அதனால அந்த தெய்வத்துக்கு நன்றிக் கடனாக தினமும் சில நிமிடங்கள் வழிபாடு செய்ங்க. நீண்ட நாளா பைசலாகாம இருந்த பிரச்னைகளுக்குத் தீர்வு தெரியுமுங்க. வீட்டுப் பெரியவங்ககிட்ட யோசனை கேட்கத் தயங்காதீங்க. அவங்களோட ஆசி உங்களுக்குப் பல நன்மைகளை உருவாக்கித் தருமுங்க. தொழில், வியாபாரம், உத்யோகம்னு எல்லா இனங்கள்லேயும் மறைமுக எதிரிகள் தொந்தரவு அதிகரிக்குதுங்க. அதுக்குக் காரணம் என்னன்னு உங்களை நீங்களே சுய பரிசோதனை பண்ணிக்கோங்க. சிலருக்கு முதுகு எலும்பில் உபாதை வரலாம்.

இந்தத் தேதிப் படைப்பாளிப் பெண்கள் சிறப்பு பெறுவீங்க. செவ்வாய்க்கிழமை பெருமாள்-தாயார் மற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு, பேரிடர்களையும் விலக்கிவிடுமுங்க.

5, 14, 23, தேதிகளில் பிறந்தவர்களுக்கு

சிலருக்கு முதன்முறையாக வெளிநாட்டுப் பயண வாய்ப்பு கிட்டுமுங்க. இது தொழில், வியாபார காரணமா இருந்தா, அனுபவம் உள்ளவங்ககிட்ட ஆலோசனை கேட்டுக்கோங்க. உத்யோக ப்ராஜக்ட் விஷயமா போறவங்க, அங்கத்திய அலுவலக நிலவரங்களை முன்கூட்டியே நல்லா தெரிஞ்சுக்கோங்க. மேல் படிப்புப் படிக்கப் போறவங்க கேளிக்கை நாட்டமில்லாம இருங்க. குடும்பத்ல சுபவிசேஷங்கள் அதிக மகிழ்ச்சி தருமுங்க. இதுக்காக ஓரிரு சந்தர்ப்பங்கள்ல கடன் வாங்க வேண்டிவந்தாலும், வருத்தப்படாதீங்க. திருமணத்துக்காகக் காத்திருக்கற இந்தத் தேதி இளைஞர்களுக்கு அந்த பிராப்தம் உடனே நிறைவேறுமுங்க. ஒவ்வாமை பிரச்னை தெரியுதுங்க. ஒத்துக்காததை விலக்கிடுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் இனிமையாகப் பேசி நற்பெயர் எடுப்பீங்க. வியாழக்கிழமை மகான் ராகவேந்திரரை வழிபடுங்க; விருப்பங்கள் எல்லாம் ஈடேறும்.

6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

பிறர் தூண்டுதலுக்கு இரையாகிடாதீங்க. உதாரணமா தொழில், வியாபாரத்ல நீங்கதான் பின்தங்கி விட்டதாகவும் போட்டியாளர்கள் எங்கேயோ போயிட்டதாகவும் சிலர் உங்களை உசுபேத்தலாம்; ஆனா, சும்மா சிரிச்சுட்டு அப்படிச் சொல்றவங்களைப் புறக்கணிச்சுடுங்க. கூட்டுத் தொழில்ல இருக்கறவங்க, பிரிய வேண்டிய சந்தர்ப்பம் வந்தா, உடனே அந்தக் கூட்டிலேர்ந்து விடுபட்டு புதிதாகத் தொழில் ஆரம்பிங்க; வெற்றி உங்க பக்கம்தான். உங்கக் குடும்ப விவகாரத்லேயும் சிலர் அனாவசியமா தலையை நுழைக்கப் பார்ப்பாங்க; அதுக்கும் அனுமதி கொடுக்காதீங்க. மொத்தத்ல தான் உண்டு, தன் வேலையுண்டுன்னு இருந்துட்டீங்கன்னா, எல்லாமே நன்மைதான். இதே பக்குவம் உத்யோகத்ல சங்கடங்களை சரிபண்ணிடுமுங்க. சிலருக்குக் கழிவுப் பகுதியில உபாதை வரலாமுங்க.

இந்தத் தேதிப் பெண்களுக்கு நல்ல செய்தி சந்தோஷம் கொடுக்குமுங்க. புற்றுள்ள அம்மனை வழிபடுங்க; வெற்றிவாகை சூடுவீங்க.

7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

சுறுசுறுப்பாக இயங்கணுமுங்க. வாய்ப்புகள் வந்து கதவைத் தட்டும்போது சோம்பல் போர்வையில் முடங்கிக் கிடந்தீங்கன்னா அப்புறம் கதவு தட்டற சத்தமே கேட்காதுங்க. அதிகாலையிலேயே எழுந்திருங்க. இதுக்கு முந்தின இரவு வெகுநேரம் கண்விழிக்காம இருக்கணுமுங்க. உங்க சகவாசம் சரிதானான்னு பரிசீலனை பண்ணுங்க. கேளிக்கை, கொண்டாட்டம்னு வீட்டுக்கு வெளியே இரவைக் கழிக்காதீங்க. சட்டத்துக்குப் புறம்பானவர் நிழலும் உங்களை அண்டாம பார்த்துக்கோங்க. வெளிப் பிரச்னையில ஏற்படற பாதிப்பை வீட்ல எதிரொலிக்காதீங்க. குறிப்பா, வயசில் சின்னவங்ககிட்ட எந்த காரணத்துக்காகவும் விவாதம் பண்ணி மூக்குடைபடாதீங்க. கொடுக்கல்-வாங்கல்ல நம்பிக்கை மோசடி ஏற்படலாம்; எச்சரிக்கையா இருங்க. சிலருக்கு ஒற்றைத் தலைவலி தொந்தரவு தருமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் விவேகமாகப் பேசி காரியத்தை சாதிச்சுப்பீங்க. சனிக்கிழமை விநாயகரை வழிபடுங்க; சங்கடம் நெருங்காது.

8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

உத்யோகஸ்தர்களுக்கு அதிர்ச்சி தரும் சில தடங்கல்கள் எதிர்பாராம வந்து பெரிய மனக்கஷ்டத்தைத் தந்தாலும், என்ன, ஏதுன்னு நீங்க சுதாரிக்கறதுக்கு முன்னாலேயே அதெல்லாம் கரைந்தோடிப் போய் உங்களை நிம்மதிப் பெருமூச்சு விடவைக்குமுங்க. சிலருக்கு வயிற்றுப் பிரச்னை, ரத்தக் கொதிப்புன்னு சிக்கல்கள் வருமுங்க. ரத்தத் தொற்று உபாதை உங்களுக்கு மட்டுமல்லாம, குடும்பத்தாருக்கும் சங்கடம் தருமுங்க. ‘ஏற்கெனவே வந்த கோளாறுதானே, அதுக்கான மருத்துவம்தான் தெரியுமே’ன்னு சுய மருத்துவம் பார்த்துக்காதீங்க. மற்றபடி தொழில், வியாபாரம், உத்யோக இனங்கள்லாம் மேன்மையாகுமுங்க. வீடு, மனையால ஆதாயம் உண்டுன்னாலும், ஏமாறவும் வாய்ப்பு இருக்கு; எச்சரிக்கையா இருங்க.

இந்தத் தேதிப் பெண்கள் உடல்நலத்ல கவனமா இருங்க. புதன்கிழமை பெருமாளை வழிபடுங்க; புது வாழ்க்கை மலரும்.

9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

தொழில், வியாபாரம், உத்யோக இனங்கள்ல பிறர் சொல்ற யோசனைகள் உங்களுக்கு ஏற்புடையதாக இல்லேன்னாலும் சும்மா கேட்டுகிட்டு இருங்க. குறுக்கிட்டு உங்க அபிப்ராயம்னு எதையும் சொல்லாம இருக்கறது நல்லதுங்க. ஏன்னா, கூட இருக்கறவங்களோட பேசும்போதும், சில நடவடிக்கைகள்ல ஈடுபடும் போதும், இந்த காலகட்டத்ல நீங்க வெளியிடற கருத்துகள் பிறரை எதிரிகளாக்கிடுமுங்க. அதனால இப்போதைக்குத் தனிமையில இருங்க; அல்லது எந்த கருத்தும் சொல்லாம இருங்க. அதுக்காக ஒதுங்கி, எங்கேயாவது முடங்கிக் கிடக்கறதுன்னு இல்லீங்க; கூட யார் இருந்தாலும், அனாவசிய பேச்சு வேண்டாம்; பிறர் மனம் வருந்தும் செயலும் வேண்டாம்; அவ்ளோதான். அவசியமில்லாத பயணத்தைத் தவிர்த்திடறது நல்லதுங்க. சிலருக்கு வளர்ப்புப் பிராணியால பாதிப்பு வரலாம்.

இந்தத் தேதிப் பெண்கள் குடும்ப நிம்மதியைக் காப்பீங்க. செவ்வாய்க்கிழமை லட்சுமி நரசிம்மரை வழிபடுங்க; சிறப்புகள் தேடிவரும்.

யதார்த்த  ஜோதிடர் ஷெல்வீ

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • erode-dmk-votes-2

  அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!

 • scotland-bonfire-festival

  ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி

 • stalin-corp-31

  மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 • long-whale-newyork

  35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

 • pak-blast-30

  பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்