SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறுநீரக நோய் நீக்கி, இழந்த பதவியை பெற்றுத்தரும் ஊட்டத்தூர் சுத்த ரத்தினேஸ்வரர் கோயில்

2019-12-21@ 17:24:53

திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா ஊட்டத்தூரில் பிரசித்தி பெற்ற அகிலாண்டேஸ்வரி சமேத சுத்த ரத்தினேஸ்வரர் திருக்கோயில் உள்ளது.  மூலவர்-சுத்த ரத்தினேஸ்வரர், துய்ய மாமணீஸ்வரர், மாசிலாமணி. தாயார்-அகிலாண்டேஸ்வரி. இத்தலத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

தல வரலாறு:  மன்னன் ராஜராஜ சோழன் ஊட்டத்தூரின் மேற்கு பகுதியில் சோளேஸ்வரம் கோயிலை எழுப்பினார். வில்வ வனமாக இருந்த  அப்பகுதிக்கு ராஜராஜ சோழன் அடிக்கடி வருவது வழக்கம். அவ்வாறு ஒருமுறை மன்னன்  வந்தபோது, அவரது வருகையையொட்டி வழியெங்கும்பாதையைச் செப்பனிடுவதற்காகப்  புல் செதுக்கும் பணி நடைபெற்றது. அப்போது ஓரிடத்தில் எதிர்பாராது ரத்தம்  பீறிட்டது. உடனே பணியாட்கள் மன்னரிடம் இதுபற்றித் தெரிவித்தனர்.

அங்கு வந்த ராஜராஜ சோழமன்னர், அந்த இடத்தைச்  சோதித்துப்பார்த்தபோது, சிவலிங்கம் காட்சியளித்தது. புல்லைச் செதுக்கும்போது  மண்வெட்டி பட்டதால், சிவலிங்கப் பெருமானின் மீது தழும்பு காணப்பட்டது.  பெருமானிடம் தன்னை மன்னிக்கும்படி பிரார்த்தித்த ராஜராஜ சோழன்,  உடனடியாக அப்பெருமானுக்கு கோயிலை எழுப்பி பூஜை செய்தார். அக்கோயில்தான் சுத்தரத்தினேஸ்வரர் கோயிலாகும். இன்றும் சிவலிங்கத்தின் தலைப்பகுதியில் மண்வெட்டியால்  ஏற்பட்ட வடு உள்ளது.  மற்ற சிவ தலங்களில் இல்லாத விசேஷமாக இங்கு  நந்திதேவர் கிழக்கு முகமாக உள்ளார். கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை,  காவிரி, சிந்து, துங்கப்பத்திரா ஆகிய நதிகளில் யார் பெரியவர்? என்ற  தகராறு ஏற்பட்டு இத்தலம் வந்து சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது போட்டியை தீர்த்துவைக்கும்படி சிவபெருமான் நந்திதேவருக்கு கட்டளையிட்டார்.

இதையடுத்து நந்தி தான் குடித்த நதிகளின்  நீரை வெளியில் விட்டார். அதுவே நந்தி ஆறு எனப் பெயர் பெற்று கொள்ளிடம் வரை  பெருகிச் சென்றது. அதன்படி நந்திதேவர் 7 நதிகளையும் விழுங்கி விட்டு கிழக்கு  நோக்கி படுத்து இருந்ததாகவும் அப்போது கங்கை மட்டும் வெளியே வந்ததாக வரலாறு கூறுகிறது. இறந்தவர்களின் அஸ்தியை இந்த நந்தி  ஆற்றில் கரைத்தபோது, அவை புஷ்பமாக மாறியது. காசித் திருத்தலத்தில்கூட  அஸ்தியைக் கரைக்கும்போது, அதிலுள்ள எலும்புகள் எலும்பாகவே காட்சி தந்தன.  ஆனால், ஊட்டத்தூர் நந்திஆற்றில் கரைத்த அஸ்திகள் மட்டும் மலர்களாக  மலர்ந்தன. ஆதலால், காசியை விட  ஊட்டத்தூர்  உயர்ந்தது என்பது ஐதீகம்.  

தல சிறப்பு:  ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம்  12, 13, 14 ஆகிய மூன்று தேதிகளில் சூரிய ஒளி கர்ப்பகிரகத்தில் உள்ள் லிங்கத்தின்மேல் படுகிறது.  இத்தலத்தில் சிவனைப்பார்த்து மேற்கு திசை நோக்கி ஒரு நந்தியும், கிழக்கு திசைநோக்கி ஒரு நந்தியும் அமைந்திருப்பது சிறப்பு.   கோயிலின் நடுவில் நோய்களைத் தீர்த்து ஆயுளை அதிகரிக்கச் செய்யும்  சக்திவாய்ந்த பிரம்ம தீர்த்தம் உள்ளது. இங்குள்ள பிரம்ம தீர்த்தம்  பிரம்மாவினால் சிருஷ்டிக்கப்பட்டது. இதன் அருகே காட்சி அளிக்கிறார்  நந்தியம்பெருமான்.   ஸ்ரீபஞ்ச நதன நடராஜர்: பஞ்சநதனக் கல் என்பது, கருங்கல்லைப் போன்ற தோற்றம் இருந்தாலும் பலகோடி சூரியன்களின் சக்தியை உள்ளடக்கியது. பத்து லட்சம் கோடி பாறைகள் உருவாகும்போது, அவற்றுள் ஒன்றே ஒன்றுதான் பஞ்சநதனப் பாறையாக மாறும் வாய்ப்பு உண்டு என்பது சித்தர்கள் வாக்கு. சூரியனிலிருந்து வெளிப்படும் சிற்சபேச கதிர்களை தனக்குள் ஈர்க்கிறது பஞ்சநதனப் பாறை.

இந்த பாறைகளால் பஞ்ச ஸ்வரங்களையும் உருவாக்க முடியும். இந்தப் பாறையைத் தட்டினால், இசையின் அடிநாதமான சப்த ஸ்வரங்களில் ஐந்து ஸ்வரங்களை கேட்க முடியும். பஞ்சநதனப் பாறையின் இன்னோர் அபூர்வமான சிறப்பு, மனிதக் கரங்களால் இதைச் செதுக்கி சிலைகள் செய்ய முடியாது. சித்தர்களின் ஆன்மிகச் சக்தியால், பஞ்சநதனப் பாறைகளில் இறைவனின் உருவங்கள் தானாகவே உருவாகும் என்று சொல்லப்படுகிறது.
அவ்வகையில் ஊட்டத்தூரில் அருள்பாலிக்கும் ஆடல் வல்லானின் விக்கிரகம், உளி இல்லாமல் செதுக்கப்பட்டது என்கின்றனர்.  இதைப்போல பல கோயில்களில் அருள்பாலிக்கும் நந்தி உருவங்கள், தெய்வீக சக்தியால் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்றாலும் பஞ்சநதனக் கல்லில் உருவான மூர்த்தி ஊட்டத்தூர் நடராஜர் மட்டுமே என்கின்றனர். நவ லிங்க பூஜை எனப்படும் ஒன்பதுவிதமான பூஜைகளை நிறைவு செய்த பின்னரே, பாறையில் பஞ்சநதன நடராஜர் உருவம் தோன்றும், அதன் பிறகுதான் மனிதர்கள் தரிசனம் செய்யமுடியும்.இவ்வளவு மகத்துவங்கள் மிகுந்த ஊட்டத்தூர் ஆடல்வல்லானை வேண்டினால் அனைத்தும் நிறைவேறும். திருமண தடை நீங்கும். பஞ்ச நதன நடராஜர் சிறுநீரக சம்பந்தமான நோய் நீக்க வல்லவர். இழந்த பதவிகளை மீட்டு தரும் சக்தி படைத்தவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • drugs-11

  போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

 • cuba-fire-accident

  கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

 • south korea

  தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

 • birds-flu-10

  பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

 • raksha-rakhi-8

  ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்