வெண் பொங்கல்
2019-12-16@ 12:49:04

தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - 1/2 கப்
தண்ணீர் - 5 கப்
இஞ்சி - 1 துண்டு
மிளகு - 1 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 1/4 கப்
நெய் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவை அளவு
முந்திரி - 5-7
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை நன்கு கழுவி, குக்கரில் ஒன்றாக சேர்த்து 5 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு மற்றும் 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து, 3-4 விசில் விட்டு இறக்கி, லேசாக மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து முந்திரியை சிறிது நெய் ஊற்றி வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் மிளகு மற்றும் சீரகத்தை ஒன்றிரண்டாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், மிளகு சேர்த்து தாளித்து, பின் அதில் இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். பின்பு அத்துடன் மசித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்கு கிளறி விட்டு, பின் அதில் முந்திரியை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், வெண் பொங்கல் பிரசாதம் தயார்.
Tags:
வெண் பொங்கல்மேலும் செய்திகள்
கிருஷ்ண கலய பிரசாதம்
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!