காப்பரிசி
2019-12-16@ 12:48:25

தேவையான பொருட்கள்:
பச்சரிசி - ஒரு கோப்பை
வெல்லம் - முக்கால் கோப்பை
பொட்டுக் கடலை - அரை கோப்பை
தேங்காய் - பல்லு பல்லாக நறுக்கியது - இரண்டு டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் தூள் - ஒரு ஸ்பூன்
செய்முறை:
அரிசியை அலம்பிவிட்டு உடனே வடிகட்டி ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் காயவைக்க வேண்டும். அரிசி அதிகம் ஊறக்கூடாது. ஈரம் நீங்கி நன்கு உலர்ந்த அரிசியை ஒரு வாணலியில் போட்டு அது சிவந்து பொரியும் வரை கைவிடாமல் வறுக்க வேண்டும். நன்கு சிவக்கும்போது அரை ஸ்பூன் நெய் சேர்த்து வறுத்து அடுப்பை அணைத்து அதை ஒரு தட்டில் மாற்றி விடவும். அதே வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு தேங்காய் பற்களையும் பொன்னிறமாக வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும். வெல்லத்தை கால் கப் நீர் விட்டு கரைத்து வடிகட்டி வாணலியில் விட்டு அடுப்பில் வைத்து முற்றிய பாகு வைத்துக் கொள்ளவேண்டும். பாகில் சிறிது எடுத்து நீரில் விட்டால் அது உருண்டு கெட்டியாக வேண்டும். அதுதான் சரியான பதம். இந்தப் பதம் வந்ததும் ஏலக்காய் பொடியை சேர்த்து பின்னர் அதில் வறுத்து வைத்திருக்கும் அரிசி, அதோடு பொட்டுக் கடலை, வறுத்த தேங்காய் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலந்து ஒரு இரண்டு நிமிடம் போல கிளறி விடவேண்டும். பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு சற்றுப் பொறுத்து கிளறி விட்டால் முற்றிய வெல்லப்பாகு அரிசியில் உறைந்து காப்பரிசி கையில் ஒட்டாமல் உதிர் உதிராகியிருக்கும். பிரதோஷ நேரத்தில் பக்தர்களுக்கு இதை பிரசாதமாக கொடுப்பது வழக்கம்.

Tags:
காப்பரிசிமேலும் செய்திகள்
கிருஷ்ண கலய பிரசாதம்
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி