SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கீதையை படியுங்கள் கீர்த்தியை பெறுங்கள்

2019-11-26@ 12:22:30

?ஒரு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறேன். எனக்கு ஒரு மகன் உள்ளான். மனைவி, மகனுடன் சேர்ந்து வாழக்கூடிய சூழல் எனக்கு எப்போது கிட்டும்?
- மகேந்திரன், திருச்சி மத்திய சிறை.

கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் ராகு புக்தி துவங்கி உள்ளது. உங்களுடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி செவ்வாய் உச்சம் பெற்றிருந்தாலும் உடன் சனி மற்றும் கேது இணைந்திருப்பதால் இந்த நிலையைப் பெற்றிருக்கிறீர்கள். இருந்தாலும் உங்களுடைய ஜீவன ஸ்தான பலம் என்பது சிறப்பாக உள்ளது. 15.06.2021ற்குப் பிறகு மறுவாழ்வு என்பது துவங்கும். உங்களுடைய தொழில்முறையில் உச்சத்தைத் தொடுவீர்கள். 11ம் இடமாகிய லாப ஸ்தானமும் பலமாக உள்ளதால் சிறை வாசம் முடிந்து வெளியே வந்ததும் நினைத்ததை சாதித்து வாழ்வீர்கள். வாழ்வினில் இதுவரை நடந்த விஷயங்களையே அனுபவ பாடமாகக் கொண்டு புது வாழ்வினைத் துவக்குவீர்கள். மனைவி மற்றும் மகனுடன் இணைந்து வாழ்வதுடன் இன்னமும் பல குடும்பங்களின் நல்வாழ்விற்கான ஆதாரமாகத் திகழ்வீர்கள். மற்றவர்களுக்காக நீங்கள் வாழும் வாழ்க்கை உங்களை உச்சத்திற்குக் கொண்டு செல்லும். தினந்தோறும் காலையில் கீழ்க்கண்ட ஸ்லோகத்தினைச் சொல்லி முருகப்பெருமானை வணங்கி வர உங்கள் விருப்பம் நிறைவேறும். அமூர்த்த மூர்த்தாய ஸஹஸ்ரமூர்த்தயே குணாயகுண்யாய பராத்பராய அபார பாராய பராத்பராய நமோஅஸ்து துப்யம் சிகிவாஹனாய.

?ஐ.டி. துறையில் கடந்த ஒன்பது வருடங்களாக பணியாற்றி வருகிறேன். நான் பயிற்சி கொடுத்து வந்த ஜூனியர்களை கம்பெனி வெளிநாடு அனுப்புகிறது. நீதி, நேர்மை, கடமை உணர்வுகொண்ட என்னை இங்கேயே வைத்துள்ளனர். தாழ்மை உணர்வு, மன வேதனை, வீட்டுக்கடன் மற்றும் கௌரவக்குறைவு பிரச்னையிலிருந்து மீள வழி சொல்லுங்கள்.
- முத்துராஜா, தேனி மாவட்டம்.


மிருகசீரிஷம் நட்சத்திரம், ரிஷப ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது குரு தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. பிரச்னை உங்கள் ஜாதகத்தில் இல்லை, உங்கள் மனதில்தான் உள்ளது. வெளிநாடு சென்றால்தான் பெருமையா, எங்கோ சென்று யாருக்கோ அடிமை வேலை பார்ப்பதில் என்ன கௌரவம் கிடைத்துவிடும் என்று எண்ணுகிறீர்கள்? பணம் ஒன்று மட்டும் வாழ்வினைத் தீர்மானித்துவிடாது. இங்கேயே வைத்திருந்தாலும் கம்பெனி ஊதிய உயர்வு அளித்திருப்பதாக உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். இதைவிட வேறு அங்கீகாரம் வேண்டுமா என்ன? உங்கள் ஜாதகத்தில் ஜீவன ஸ்தானமும், தன லாப ஸ்தானமும் நன்றாகவே உள்ளது. ஜீவன ஸ்தானத்தில் நீசம் பெற்ற சூரியன் இருந்தாலும், நீச பங்க ராஜயோக அமைப்பினைப் பெற்றுள்ளீர்கள். உங்கள் ஜாதகத்தின்படி வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகம் அத்தனை சிறப்பாக இல்லை. தற்போது நடந்து வரும் நேரம் மிகச் சிறப்பாக உள்ளதால் இங்கேயே இருந்து உங்கள் உத்தியோகத்தினை உயர்த்திக் கொள்ள முயற்சியுங்கள். அந்நிய மோகத்தினை விடுத்து இதே கம்பெனியில் தொடர்ந்து வேலை பார்த்து வாருங்கள். வேறு கம்பெனிக்கு முயற்சிக்க வேண்டாம். வலியச் சென்று வாழ்க்கையை வீணாக்கிக் கொள்ளாமல் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழுங்கள். உங்கள் ஜாதக பலம் நன்றாக இருப்பதால் பரிகாரம் ஏதும் அவசியமில்லை.

?எனக்கு சிறு வயது முதலே குடும்ப கஷ்டம். மதுவிற்கு அடிமையான அப்பா, நோய்வாய்ப்பட்ட அம்மா, திருமணம் ஆகாத அத்தை, விவாகரத்து பெற்ற ஒரு அத்தை என குடும்ப பொறுப்பு அத்தனையும் சுமக்கிறேன். என் சித்தப்பா குடும்பம் மொத்தமும் நோய் வந்து மரணமடைய அவரது மகள் ஒருவர் மட்டும் திருமணம் ஆகாமல் இருக்கிறார். பரம்பரைக்கு சாபம் உள்ளதா? எனக்கு திருமணம் நடந்து நல்வாழ்வு அமையுமா?
- சங்கர், நாகை மாவட்டம்.

புனர்பூசம் நட்சத்திரம், கடக ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது கேது தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜோதிடர் கூறியது போல பரம்பரை சாபம் என்பது கடுமையாகவே உள்ளது. ஜென்ம லக்னத்திலேயே சூரியன்-சந்திரன், புதன் - ராகு ஆகியோரின் இணைவும் குரு சண்டாள யோகமும் உங்கள் முன்னேற்றத்தை வெகுவாக தடை செய்து வருகிறது. போதாக்குறைக்கு ஏழாம் பாவகத்தில் அமர்ந்திருக்கும் கேது திருமண வாழ்விலும் பிரச்னையை உண்டாக்குவார். மூன்றாம் இடத்துச் செவ்வாய் எதையும் தாங்கும் இதயத்தை மட்டுமே தரும், மாறாக வாழ்வியல் சந்தோஷத்தைத் தராது. நீங்கள் திருமணம் செய்து கொள்வதால் மேலும் சுமைதான் கூடுமே தவிர, வாழ்வியல் மகிழ்ச்சி என்பது கிடைக்காது. ஏற்கெனவே பல்வேறு பொறுப்புகளை சுமக்கின்ற உங்களுக்கு மணவாழ்வு என்பது சாத்தியப்படவில்லை. விதிப்பயனை அனுபவித்துத்தான் ஆக வேண்டும் என்பதை நினைவில் கொண்டு இந்த ஜென்மாவிலேயே கர்மாக்கள் அனைத்திற்கும் தீர்வு காண முயற்சியுங்கள். காரண காரியங்களைப் பற்றி அலசாமல் எப்பொழுதும் போல் உங்கள் கடமையைச் செய்து வாருங்கள். ஓய்வு நேரத்தில் பகவத் கீதையைப் படித்துவருவது மனதிற்கு ஆறுதலை அளிக்கும். இறைவன் நம்மை சுமைதாங்கி ஆகப் படைத்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு செயல்பட்டால் மனசஞ்சலம் காணாமல் போகும்.

?நாங்கள் எவ்வளவோ புத்திமதி கூறியும் கேட்காமல் எங்கள் மகள் காதல் திருமணம் செய்துகொண்டாள். பி.இ., இறுதி ஆண்டு படிப்பினையும் தொடரவில்லை. சொன்ன பேச்சு கேட்டு திரும்பி வருவாளா அல்லது அவளை அப்படியே விட்டுவிடலாமா? அவளது எதிர்காலம் நல்லபடியாக அமைய பரிகாரம் கூறுங்கள்.
- மகேந்திரன், நீலகிரி.

மிருகசீரிஷம் நட்சத்திரம், ரிஷப ராசி, கன்னி லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் செவ்வாய் புக்தி நடந்து வருகிறது. திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் நான்கு கிரஹங்களின் இணைவும், ஆறாம் பாவகத்தில் குரு - சுக்கிரன் - கேதுவின் இணைவும், 12ல் ராகுவும் அவரது வாழ்வினில் தடுமாற்றத்தைத் தந்திருக்கிறது. உங்கள் மகளின் ஜாதகப்படி 14.02.2020க்குப் பிறகு தனது முடிவு தவறானது என்பதை உணர்வார். நீங்கள் எந்த ஒரு முயற்சியும் எடுக்க வேண்டாம். அவராக மனம் திருந்தி வரும் வரை காத்திருங்கள். நிராதரவாக அவர் திரும்ப வரும்போது அவரைக் குற்றம் சொல்லாமல் அன்போடு அரவணைத்து வழி நடத்திச் செல்லுங்கள். மறுமணம் குறித்து உடனடியாக யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் மகளின் வாழ்வு போராட்டம் நிறைந்தது மட்டுமல்ல, ஏமாற்றத்தையும் தரக்கூடியது. அவர் தனக்கென்று ஒரு உத்தியோகத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். தந்தை என்ற முறையில் அவருக்கு பக்கபலமாய் துணை நில்லுங்கள். எந்தச் சூழலிலும் அவர் மீது பழி சுமத்தி விடாதீர்கள். அதை அவரால் தாங்கிக்கொள்ள இயலாது போகும். செவ்வாய்கிழமை தோறும் முருகப்பெருமானின் சந்நதியில் ஆறு அகல் விளக்குகள் ஏற்றி வைத்து அவரது நல்வாழ்விற்காக பிரார்த்தனை செய்து வாருங்கள். உங்கள் மகள் உங்களிடமே திரும்ப வந்து சேர்வார்.

?21 வயதாகும் நான் தற்போது ஐஏஎஸ் தேர்விற்கு படிக்கத் துவங்கியுள்ளேன். தேர்வில் வெற்றி பெற்று ஐஏஎஸ் அதிகாரி ஆவேனா? மேலும் நான் ஒரு பெண்ணை காதலித்து வருகிறேன். காதல் மணம் புரிய வாய்ப்பு உள்ளதா? இரண்டும் வெற்றிகரமாக அமைய வழிகாட்டுங்கள்.
- மதிராஜா, காட்டுமன்னார்கோவில்.

பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் நீங்கள் இக்கால இளைஞர்களின் மன நிலைக்கு ஒரு எடுத்துக்காட்டாய் உள்ளீர்கள். படிக்க வேண்டிய வயதில காதல் எதற்கு? அதிலும் ஐஏஎஸ் தேர்வு எழுத ஆசைப்படும் நீங்கள் காதல் வலையில் விழலாமா? இந்த வயதில் வருவது உண்மையான காதலே அல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். தற்போது நடந்து வரும் சூரிய தசையின் காலம் உங்களை நிரந்தரமாக உத்யோகத்தில் அமர வைக்கும். ஐஏஎஸ் அளவிற்கு உயர இயலாவிட்டாலும் குரூப் 2 தேர்வு போன்றவற்றில் வெற்றி பெற்று அரசுத்துறையில் அதிகாரியாக பணியில் சேரும் வாய்ப்பு நன்றாக உள்ளது. மேலும் உங்கள் ஜாதக பலத்தின்படி ஏழாம் பாவகத்தில் குரு-கேது இணைந்திருப்பதால் காதல் திருமணம் செய்வதற்கான வாய்ப்பு அறவே கிடையாது. 28வது வயது வரை திருமணம் பற்றிய சிந்தனையே கூடாது. உங்களை உயர்ந்த நிலையில் காண விரும்பும் குடும்பத்தினரின் கனவை நனவாக்க முயற்சி செய்யுங்கள். வெறும் இனக்கவர்ச்சியை காதல் என்று நம்பி வாழ்க்கையை தொலைத்து விடாதீர்கள். உங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக ஆசிரியர் ஒருவர் அமைந்திருக்கிறார். அவரது வழிகாட்டுதலை பின்பற்றி நடந்து வாழ்வினில் முன்னேற்றம் காண முயற்சி செய்யுங்கள். காதல் கதைகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு முழுமூச்சோடு உழைத்து வந்தீர்களேயானால் 24வது வயதிற்குள் நிரந்தர உத்தியோகத்தில் அமர்ந்துவிடலாம். வியாழன்தோறும் குரு பகவானை வணங்கி வர உங்கள் வாழ்வு உயர்வு காணும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • RamMandirBhoomiPoojan05

  ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்