அரவணைப் பாயசம்
2019-11-21@ 17:36:03

ஐயப்பன் கோயில்களில் வழங்கப்படும் பிரத்யேகப் பிரசாதம், இந்தப் பாயசம். இந்த அரவணைப் பாயாசத்தை வீட்டில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
புழுங்கலரிசி - 200 கிராம் (சின்ன அரிசியாக இருக்க வேண்டும்)
வெல்லம் - 1 கிலோ
தண்ணீர் - தேவையான அளவு
நெய் - 250 மில்லி
ஏலக்காய்த்தூள் - 2 டீஸ்பூன்.
செய்முறை :
புழுங்கலரிசியை தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும். வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி கொள்ளவும். வடிகட்டிய வெல்லக்கரைசலை அடுப்பில் வைத்து பாகாகக் காய்ச்சவும். இத்துடன் அரிசியைச் சேர்த்து மிதமான தீயில் கைவிடாமல் கிளறி விடவும். அதிகம் குழையாமலும், அதிகம் வெந்து போகாமலும் பார்த்துக்கொள்ளவும். அரிசி உடைய ஆரம்பிக்கும் போது நெய்யை ஊற்றி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும். பார்ப்பதற்கு வேகாதது போல இருக்கும் இந்தப் பாயசம் சாப்பிடும் போது கரகரவென்றிருக்கும். மணமணக்கும் அரவணைப் பாயாசம் ரெடி.
Tags:
அரவணைப் பாயசம்மேலும் செய்திகள்
ஐயப்பன் அறிவோம்! - 3 நீ நானாக... நான் நீயாக...
ஐயப்பன் அறிவோம்! - 2 : கன்னிச்சாமி...
ஐயப்பன் அறிவோம்! - 1 குருவுக்கு மரியாதை
சபரிமலை ஐயப்பன்
அஞ்சு மலை வாசன் ஐயப்பனின் ஆலயங்கள்
ஆகம நெறியில் ஐயப்பன்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!