SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எது நிறைவு

2019-10-30@ 17:39:09

கிறிஸ்தவம் காட்டும் பாதை

‘‘ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர் மூத்தவரிடம் போய், மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச்சென்று வேலை செய் என்றார். அவர் மறுமொழியாக, ‘‘நான் போக விரும்பவில்லை’’ என்றார். ஆனால் பிறகு தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு போய் வேலை செய்தார்.’’ அவர் அடுத்த மகனிடம் போய் அப்படியே சொன்னார். அவர் மறுமொழியாக ‘‘நான் போகிறேன் ஐயா’’ என்றார். ஆனால் போகவில்லை. இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்? என்று கேட்டார். அவர்கள் மூத்தவர் என்று விடையளித்தனர்.

இயேசு அவர்களிடம், வரி தண்டுவோரும், விலை மகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில், யோவான் நீதி நெறியைக்காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக, வரி தண்டுவோரும், விலை மகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்த பின்பும் நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவும் இல்லை. அவரை நம்பவும் இல்லை என்றார்.’’ - (மத்தேயு 21: 28-32) ஒரு பெரியவருக்கு இரண்டு பையன்கள். இருவரையும் ஒருநாள் அழைத்து ஆளுக்கு நூறு ரூபாய் கொடுத்தார்.

பின்பு ஆளுக்கொரு அறையைக் காட்டினார். நாளை நான் உங்கள் அறைகளை வந்து பார்க்கப்போகிறேன். அறைகளை நன்றாக நிரப்பி வையுங்கள் என்றார். சொன்னபடி தந்தை, முதல் பையன் அறைக்குப் போனார். அறைக்கதவை திறக்கவே முடியவில்லை. அறை முழுவதும் வைக்கோல் நிரப்பப்பட்டிருந்தது. இவற்றை மலிவான விலைக்கு வாங்கி வந்தேன். இல்லாவிட்டால் நூறு ரூபாய்க்கு அறையை நிரப்ப முடியும் எனப்பெருமை பட்டுக்கொண்டார் பையன். தந்தை அவனையும் அழைத்துக்கொண்டு அடுத்த பையனின் அறைக்குப் போனார். அறையில் ஒரு சிறிய விளக்கு ஒளி பரப்பிக்கொண்டிருந்தது.

சில ஊதுபத்திகள் வாசனையைப் பரப்பிக்கொண்டிருந்தது. ஒரு தட்டில் கொஞ்சம் பூக்கள்! இன்னொரு தட்டில் கொஞ்சம் சர்க்கரை! ஆகியவை இருந்தன. தந்தை அறைக்குள் வந்தார். வாருங்கள் அப்பா! என்று வரவேற்றார் மகன். நீங்கள் வந்து கலகலப்பாகச் சிரித்துப் பேசினாலே அறை நிரம்பி வழியும் என்று அன்பாகச் சொன்னான். ‘‘எது நிறைவு? எதில் முழுமையான நிறைவு? பொருள்களின் நிறைவா? நல்ல உறவால் மலரும் மனநிறைவா? செல்வத்தைத் தேடிக் குவிப்பது நிறைவல்ல! உறவுகளை அரவணைத்துப் பார்ப்பதுதான் நிறைவு!’’

‘‘தான் யார் என்று அறிந்த மனிதர்கள்தான், ‘தான் யார் அல்ல’ என்பதையும் அறிந்திருக்கின்றார்.’’ இன்றைய மனிதருக்கு வானத்தில் என்ன நடக்கிறது பூமியின் மறுமுனையில் என்ன நடக்கிறது என்பதெல்லாம் தெரிகிறது. ஆனால் தனக்குள்ளே என்ன நடக்கிறது என்பதுதான் தெரியவில்லை. எனவேதான் உணர்வுகள் மற்றும் எண்ணங்கள் மேல் அவரால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. சுற்றியுள்ள சூழலையும் சரியான நொடியில் புரிந்துகொள்ள முடியவில்லை.

‘‘நான் ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன். அவர் என் வலப்பக்கம் உள்ளார். எனவே நான் அசைவுறேன். இதனால் என் இதயம் பேருவகை கொள்கின்றது. என் நா மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது. என் உடலும் எதிர்பார்ப்பில் நிலைத்திருக்கும். ஏனென்றால், என்னைப் பாதாளத்திடம் ஒப்படைக்க மாட்டீர். உம் அயவனைப் படுகுழியைக் காணவிட மாட்டீர். வாழ்வின் வழியை நான் அறியச்செய்வீர். உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு’’ - (திருத்தூதர் பணிகள் 2: 25-28)

- ‘‘மணவைப்பிரியன்’’
ஜெயதாஸ் பெர்னாண்டோ

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • RamMandirBhoomiPoojan05

  ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்