SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நவராத்திரி ஸ்பெஷல் : சப்த மாதர்களைப்பற்றி அறிவோம்

2019-09-25@ 13:45:24

கண்ட முண்டாசுரர்கள் சாமுண்டாதேவியினால் போர்க்களத்தில் வீழ்ந்தனர். அதனால் சினமுற்ற சும்பாசுரன் தம் படைவீரர்கள் அனைவரையும் மகாசரஸ்வதியுடன் போர்புரிய ஏவினான். அச்சமயம் அசுரர்களை வதைக்கவும், தேவர்களுக்கு நன்மைகள் கிட்டச் செய்யவும் பிரம்மா, ருத்ரன் போன்றவர்களின் சக்திகள் அவரவர்கள் உலகினின்றும் அவரவர்கள் தரித்துள்ள ஆயுதங்களுடன் தோன்றினர் என தேவி பாகவதத்திலும் கூறப்பட்டுள்ளது. அப்படித் தோன்றிய எழுவரும் பண்டாசுர வதம் நிகழ நடந்த போரில் பராசக்திக்கு உதவ அவளின் திருமுக மண்டலத்தினின்று ப்ராம்ஹியும், காதுகளிலிருந்து மாஹேஸ்வரியும், கழுத்திலிருந்து கௌமாரியும், கைகளிலிருந்து வைஷ்ணவியும், பிருஷ்டபாகத்திலிருந்து வாராஹியும், ஸ்தனங்களிலிருந்து இந்திராணியும், வெளிவந்து தேவியின் உடலிலிருந்து நேராக உதித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
அம்பிகையுடன் அம்பாசுரன் நேரிடையாகப் போர் புரியும்போது சப்த மாதர்களும் அவளுக்குத் துணையாய் நின்று பெரும் போர் புரிந்தனர்.
ஸ்ரீசக்கரத்தில் முதல் ஆவரண பூஜையில் இந்த சப்தமாதர்கள் பூஜை செய்யப்படுகின்றனர். பகவதி ஸ்தோத்ரமாலையில் சப்தமாதர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. கலிங்கத்துப் பரணியிலும் சப்தமாதர்களுக்கு கடவுள் வாழ்த்தில் வணக்கம் சொல்லப்பட்டுள்ளது.
இந்த நவராத்திரி சமயத்தில் அவர்களைப்பற்றி அறிவோம்.

1. பிராம்ஹி

பிராம்ஹி வடிவம் எடுத்து ஹம்ஸம் பூட்டிய விமானத்தில் வீற்றிருந்து தர்ப்பைப்புல்லால் நீரைத் தெளிக்கும் தேவி நாராயணியே! உனக்கு நமஸ்காரம். அம்பிகையின் ஒரு அம்சம் பிரம்மசக்தி. சிருஷ்டி ஆற்றல் பெற்றது. வாகாத்மகமான ரூபத்தோடு இருப்பவள். ப்ராம்ஹணீ என்பதற்கு பரமசிவனின் பத்தினி என்றும் பெயர்.தோலிற்குத் தலைவியான இவள் கோபம் கொண்டால் சொறி நோய் ஏற்படும். வெட்டிவேர் விசிறியால் விசிறி, விபூதி அணிந்து, புட்டும், சர்க்கரைப் பாகும் நிவேதனம் செய்து ஏழைகளுக்கு அளித்தால் அன்னை சாந்தமடைந்து நம்மை ஆசிர்வதிப்பாள்.தேவரும், முனிவரும், மனிதரும் வழிபடும் திருவடித் தாமரையினாலும் பிரம்மனின் சக்தியான ப்ராம்ஹி எப்போதும் தம்மைக் காக்கட்டும்.


2. மாஹேஸ்வரி

மகேஸ்வரி வடிவம் கொண்டு, திரிசூலமும், பிறை மதியும், அரவமும் தரித்து, ரிஷப வாகனத்தில் எழுந்தருளும் நாராயணீ உனக்கு நமஸ்காரம்.
மகேஸ்வரன் பரமசிவனுடைய பத்தினி மாகேஸ்வரி. யோ வேதா தௌ ஸ்வர: ப்ரோக்தா: வேதாந்தே ச ப்ரதிஷ்டித:தஸ்ய பிரக்ருதி லீனஸ் ய: பரஸ் ஸ மஹேஸ்வர: எனும் ச் ருதி வாக்கியத்தில் குறிக்கப்பட்ட மஹேஸ்வரன் த்ரிகுணாதீதமானதும் நிர்குணமானதுமான வடிவமுடையவர். அப்பேர்ப்பட்டவரின் ஈஸ்வரியும் அவரைப் போலவேதான் இருப்பாள். மஹதீ என்றால் அளவிடமுடியாத பெரும் சரீரத்தையுடையவள் என்று அர்த்தம்.
நம் உடலில் கொழுப்புக்குத் தலைவியான இத்தேவி சினம் கொண்டால் வெட்டுக்காயம் ஏற்படும்.குறுவேர் விசிறியினால் விசிறி, குங்குமார்ச்சனை செய்து, சுண்டலும், நீர்மோரும் ஏழைகளுக்கு விநியோகம் செய்தால் அன்னை மகிழ்வாள்.இத்தேவதையை மனமார வழிபடும் யாவரும் மங்களங்கள் பெருகி இன்பமாய் வாழ்வர்.

3  கௌமாரி

மயில் வாகனம் மீது கொழிக்கொடி சூழ, மகா சக்தி ஆயுதத்தைத் தாங்கி பாபமற்ற கௌமாரியாக விளங்குகின்ற நாராயணி உனக்கு நமஸ்காரம். தேவர்களின் சேனாதிபதியாக விளங்கும் முருகப்பெருமானின் வீரத்திற்குக் காரணமே கௌமாரிதான். மன்மதனைப் பழிக்கும் பேரழகோடும் சௌந்தர்யத்தோடும் தோற்றமளிப்பதால் சுப்ரமண்யர் குமாரர் என வணங்கப்படுகிறார். அஹங்காரத்திற்கு தேவதையாக இவர் சொல்லப்படுகிறார். ரத்தத்திற்குத் தலைவியான இவள் கோபமடைந்தால் பசுக்களுக்கு கோமாரி எனும் நோய் தோன்றும்.பனை ஓலை விசிறியால் விசிறி எலுமிச்சம் பழ சாதம் நிவேதனம் செய்ய நலம் பெறலாம்.

4 வைஷ்ணவி

வைஷ்ணவீ ரூபிணியாக சங்கு, சக்ரம், கதை, சார்ங்கம் என்ற வில் இவைகளை ஆயுதங்களாகக் கொண்ட நாராயணீ உனக்கு நமஸ்காரம்.  லக்ஷ்மி வடிவாக இருப்பவள் என்று அர்த்தம். விஷ்ணுவின் சக்தியாய் பொலிபவள். தேவி புராணத்தில்சங்க சக்ர கதா தத்தே விஷ்ணுமாதா ததாஹரிஹரவிஷ்ணு ரூபா த்வா தேவி வைஷ்ணவீ தேவி தேந கீயதே என்று இவள் புகழ் பாடுகிறது. திருமாலைப் போல சங்கு, சக்கரம், கதை முதலியவற்றைத் தரிப்பதாலும், அவருக்கு ஜனனியாக இருப்பதாலும், அவரைப் போலவே துஷ்டர்களை ஸம்ஹாரம் செய்வதாலும் வைஷ்ணவீ என்று பெயர் பெற்றாள் என்றும் கூறுகிறது. தேவியே திருமால். திருமாலே தேவி. கோபிகைகளை மோகத்தில் ஆழ்த்திய கிருஷ்ணன் புருஷ வடிவம் என்பதை மமைவ பௌருஷம் ரூபம் கோபிகா ஜன மோகன ம் என்று லலிதோபாக்யானத்தில் லலிதையே கூறியதாக இருக்கிறது குறிப்பிடத்தக்கது.  
அந்த லலிதோபாக்யானத்திலேயே திருமால் வீரபத்திரரிடம்
ஆத்யா சக்திர் மஹேசஸ்ய சதுர்தா பிந்ந விக்ரஹா
போகே பவாநீ ரூபா ஸா துர்க்காரூபா ச ஸங்கரே

கோபேச காளிகா ரூபா பும்ரூபா ச மதாத்மிகா என்று ஆதி சக்தியே போக வடிவில் பவானியாகவும், யுத்தத்தின் போது துர்க்காம்பிகையாகவும், கோபத்தில் காளியாகவும், புருஷ வடிவில் விஷ்ணுவாகவும் நான்கு வடிவங்களில் அருள்வதாகக் கூறப்பட்டுள்ளது. கூர்ம புராணத்தில் ஹிமவான் தேவியை துதிக்கையில் க்ஷீராப்தி சயனம் கொண்ட நாராயணன் வடிவை நமஸ்கரிக்கிறேன் எனப் பொருள்படும்சீழுக்கு அதிதேவதையான இவள் சினமுற்றாள் விஷக்கடிகள் பெருகும். தென்னை ஓலையால் விசிறி, ப்ரார்த்தனை செய்து, பட்டினி இருந்து, பன்னீர் தெளித்து, பாயசம் நிவேதனம் செய்து பாலகர்களுக்கு அளித்தால் நிவாரணம் பெறலாம்.

5 வாராஹி

லலிதையின் சேனைகள் அனைத்திற்கும் தலைவியே தண்டநாதா என பக்தர்கள் போற்றும் வாராஹி தேவியாவாள். ‘ஜகத் கல்யாண காரிண்ய’ எனும் படி உலகம்உய்ய வேண்டிய பணிகளில் அருளும் ஸப்த மாதர்களில் தலையானவள்.மகாகாளி தாருகாசுரனோடு போர் புரியும்போது அவளுக்குத் துணை நின்றவள் இவள். யக்ஞ வராஹ மூர்த்தியின் சக்தி இவள். சும்பாசுரனோடு சண்டிகா புரிந்த போரிலும் உதவியவள்.ஹிரண்யாட்சனைக் கொல்ல வராஹ ரூபம் தரித்து சங்கு, சக்கரம், கதை போன்றவற்றை ஏந்தி அவனை வதைத்து பூமாதேவியை கடலில் இருந்து மீட்டார் திருமால். உலகின் ஜீவாதாரமான பூமிதேவியை உலகிற்கு மீட்டுத் தந்த மூர்த்தி அவரின் அம்சமான வாராஹியும் பராக்ரமங்களில் தன்னிகரில்லாதவள்.
மந்த்ர சாஸ்த்ரம் அறிந்தவர்கள் பல்வேறு ரூப பேதங்களில் இவளை வழிபடுகின்றனர்.

பண்டாசுரனை வதம் செய்ய வேண்டி லலிதா திரிபுரசுந்தரி நால்வகைப் படைகளுடன் புரிந்த போரில் அனைத்திற்கும் தலைமையேற்றதோடு விஷூக்கன் எனும் அரக்கனின் உயிரைக் கவர்ந்தாள் என லலிதோபாக்யானம் பரக்கப் பேசுகிறது. லலிதா ஸஹஸ்ர நாமத்திலும் விஷூக்ரப் ப்ரான  ஹரண வாராஹி வீர்ய நந்திதா, கிரி சக்ர ரதாரூட தண்டநாத புரஸ்க்ருதா’ எனும் நாமங்கள் இவளைக் குறிக்கின்றன.இவன் ஆரோகணித்து வரும் ரதம் ‘கிரி சக்ரரதம் என்றும், இவளின் யந்திரம் ‘கிரியந்த்ரம்’ என்றும் போற்றப்படுகிறது. (கிரி - பன்றி). காட்டுப் பன்றிகளால் இழுக்கப்படுவதால் அந்த ரதத்திற்கு அப்பெயர் ஏற்பட்டது. பராபட்டாரிகையான லலிதையின் மனக்குறிப்பறிந்து கீதத்தைச் செலுத்துவதால் ‘ஸங்கேதா’ என இவள் போற்றப்படுகிறாள்.மகாவாராஹி யந்த்ரம் பெரிய தொழிலகங்களில் நிறுவப்படுமாயின் தொழில் வளம் சிறக்க உதவும். ஒரு நாட்டின் தலைநகரத்தில் மஹாவாராஹி யந்த்ரமும், மூர்த்தமும் நிறுவப்படுவது மிகமிக அவசியம். பிற நாடுகளால் ஏற்படக்கூடிய பயங்களையும், இன்னல்களையும் தவிர்க்கும் ஆற்றல் உடையது கிரி சக்ரம்.உன்மத்த பைரவி, ஸ்வப்னேசி, திரஸ்கரீணி, கிரிபதா போன்றோர் இந்த அம்பிகையின் பரிவார தேவதைகளாவர்.


6 இந்த்ராணீ
(ஐந்த்ரீ)

கிரீடம் தரித்து பெரிய வஜ்ராயுதம் தாங்கி, ஆயிரம் கண்களுடன் ஜொலிக்கும் இந்திரனின் மகாசக்தியே,  விருத்தாசுரன் பிராணனைப் போக்கியவளே. உன்னை நமஸ்கரிக்கிறேன். இவள் இந்திரனின்சக்தி. ராஜ்ய லாபங்களைத் தருபவள். ஐராவத யானையே இவளின் வாகனம். தேவலோக ராஜ்ய பாரத்தைத் தாங்கும் தேவதை இவள். அம்பிகைக்கு ஸாம்ராஜ்யதாயினீ என்று ஒரு திருநாமம் உண்டு. ராஜசூய யாகம் செய்த மண்டலேஸ்வரனை அல்லது ராஜாதிராஜனை சாம்ராட் என்பர். அப்பேர்ப்பட்ட பதவிக்கு சாம்ராஜ்யம் என்றும் பெயர். இங்கு பக்தர்களுக்கு ராஜ்யம் அளிப்பது என்பது வைகுண்டம் கைலாசம் இவைகளைக் குறிக்கும். அரச சம்பத்தெல்லாம் இந்த சக்தியின் அனுக்கிரகத்தால் ஏற்படும் என்கிறது லகு ஸ்துதி எனும்  கீழ்க்கண்ட ஸ்லோகம்.சதையின் அதி தேவதையான இவள் கோபம் கொண்டால் அம்மை நோய் ஏற்படும். வேப்பிலையால் விசிறி, சந்தனம் பீசி பலாச்சுளை நிவேதித்து தானம் அளித்தால் நலம் உண்டாகும்.


7 சாமுண்டி

தெற்றிப்பல் திருவாயும், முண்டமாலையை அணிந்தவளும், முண்டனைக் கொன்றவளுமான நாராயணீ உனக்கு நமஸ்காரம். இவள் மிகுந்த கோபம் கொண்டவள். சண்டா என்று சங்க் புஷ்பத்திற்குப் பெயர். அந்த புஷ்பத்தில் பிரியமுள்ளவள். நரம்பின் தலைவியான இவள் சீற்றம் கொண்டால் ஊர் கலகம் உண்டாகும். காளியின் கதையைக் கேட்டும், கவரிமான் விசிறியால் அன்னைக்கு விசிறியும், தயிர் அபிஷேகம் செய்தும் அவல், சேமியா ஆகியவையிலான திண்பண்டத்தை நிவேதனம் செய்து எளியோர்க்கு அளித்துத் துதித்தால் தேவி மனம் குளிர்வாள்.இவளை வணங்குவோர் வாழ்வில் எத்தகைய துன்பமும் எளிதில் தீரும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pudha_purnima

  உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

 • nellai-16

  நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!

 • nepallumbii

  நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .

 • ooty-rose-exhi-14

  50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!

 • odisha_park

  இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்