நவராத்திரி பிரசாதங்கள் : மொச்சை சுண்டல்
2019-09-25@ 13:42:53

தேவையான பொருட்கள்
மொச்சை - ஒரு கப் (ஊறவைத்து, அரை உப்பு போட்டு வேகவைத்தது)
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப
தேங்காய் துருவல் - இரண்டு டீஸ்பூன்
எலுமிச்சை பழம் சாறு - அரை டீஸ்பூன்
பொடி செய்ய :
புதினா - ஒரு கைப் பிடி
ஓமம் - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - இரண்டு
தாளிக்க :
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - ஒன்று
கறிவேப்பில்லை - சிறிதளவு
செய்முறை: கடாயில் ஓமம் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து லேசாக வறுத்த பின், புதினா சேர்த்து லேசாக வதக்கி பொடி செய்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை போட்டு தாளித்த பின் வேகவைத்த மொச்சை, மஞ்சள் தூள், உப்பு, தேங்காய் துருவல் போட்டு மூன்று நிமிடம் கிளறவும். கடைசியாக வறுத்து அரைத்த பொடி சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் கழித்து எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான சத்தான மொச்சை சுண்டல் ரெடி.
Tags:
மொச்சை சுண்டல்மேலும் செய்திகள்
நவராத்திரியின் 3ம் நாளில் வழிபட வேண்டிய அம்மன்
அளவிலா ஆற்றலை அள்ளித்தரும் அட்சர சக்திகள்
நவராத்திரி சுபராத்திரி A-Z : சிறப்புகளும் வழிபாடு முறைகளும்
லலிதா ஸஹஸ்ரநாம த்யான ஸ்லோக தேவியர்
நவராத்திரி ஸ்பெஷல் : சப்த மாதர்களைப்பற்றி அறிவோம்
நவராத்திரி பிரசாதங்கள் கல்கண்டு பாத்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்