SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை முருகன் கோயில் ஆவணி திருவிழா கொடியேற்றம் : செப். 12ல் தேரோட்டம்

2019-09-04@ 14:03:31

நெல்லை:  நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 12ம் தேதி தேரோட்ட வைபவம் நடக்கிறது.வற்றாத ஜீவநதியாம் தன்பொருநை பாய்ந்து வளம்கொழிக்கும் நெல்லையில் சந்திப்பு குறுக்குத்துறை பகுதியில் ஆற்றின் மையத்தில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கும் குடைவறை கோயிலாக சுப்பிரமணிய சுவாமி கோயில் திகழ்கிறது.திருவாவடுதுறை ஆதீனத்திற்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா, வைகாசி விசாக திருவிழா உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் வெகுவிமரிசையாக நடந்து வருகின்றன. இதில் தனித்துவமிக்க  ஆவணி திருவிழா நேற்று  காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

நேற்று காலை 8.40 மணிக்கு மேல் கொடியேற்றத்தைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. இதையடுத்து மஹா தீபாராதனையை ஏராளமானோர் தரிசித்தனர். திருவிழா நாட்களில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், காலை, மாலை சுவாமி வீதியுலாவும் நடக்கிறது. வரும் 9ம் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு மேல் ஆறுமுகப்பெருமானுக்கு உருகு சட்ட சேவையும், மாலை 5 மணிக்கு தங்கசப்பரத்தில் சிகப்பு சாத்தி தரிசனமும் நடக்கிறது. 10ம் தேதி அதிகாலை 6 மணிக்கு மேல் வெள்ளை சாத்தியும், மாலை 6 மணிக்கு மேல் பச்சை சாத்தி தரிசனமும் நடைபெறும்.

 விழாவின் சிகரமான தேரோட்டை வைபவம் வரும் 12ம் தேதி (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு மேல் நடக்கிறது. இதில் நெல்லை மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் திரளாகப் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்து நிலையத்தில் சேர்க்கின்றனர். மறுநாள் (13ம் தேதி) தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீன நெல்லை மண்டல பேஸ்கார் மற்றும் நிர்வாகிகள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-09-2020

    26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-09-2020

    25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-09-2020

    24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbairain23

    விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

  • ele23

    தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்