நெல்லை டவுன் திருப்பணிமுக்கு சங்கிலிபூதத்தார், பேச்சியம்மன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்
2019-09-04@ 14:02:33

நெல்லை: நெல்லை டவுன் திருப்பணிமுக்கு பூதத்தார் காம்பவுன்ட் சங்கிலிபூதத்தார், பேச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது. நெல்லை டவுன் திருப்பணிமுக்கு பகுதியில் பூதத்தார் காம்பவுன்டில் அருள்பாலித்து வரும் சங்கிலிபூதத்தார், பேச்சியம்மன் கோயிலில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் இன்று நடந்தது. முன்னதாக கும்பாபிஷேக விழா கடந்த 3ம் தேதி அதிகாலை மங்கள இசை, விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து பஞ்சகவ்ய பூஜை, மஹா கணபதி வேதிகார்ச்சனை, மஹா கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம் முதலான பல்வேறு ஹோமங்கள், வேத பாராயணம், திருமுறை பாராயணம், கஜ பூஜை, கோ பூஜை, அஸ்வபூஜை என பல்வேறு பூஜைகள் நடந்தன.
இதைத்தொடர்ந்து நேற்று மாலை மாலை 5 மணிக்கு தாமிரபரணி நதிக்கரையில் இருந்து ஊர்வலமாக தீர்த்தம் எடுத்துவந்தனர். மாலை 6 மணிக்கு மேல் தீர்த்த சங்கிரஹணம், வாஸ்து சாந்தி பூஜை, வாஸ்து ஹோமம் முதலான பல்வேறு பூஜைகளை தொடர்ந்து கடம் யாகசாலை பிரவேசத்துடன் முதற்கால யாகசாலை பூஜை துவங்கியது. இரவு 10.15 மணிக்கு பீடபூஜை, யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சார்த்தும் வைபவம் நடந்தது. கும்பாபிஷேக தினமான இன்று (4ம் தேதி) அதிகாலை 4 மணிக்கு மேல் மங்கள இசை, திருமுறை பாராயணத்துடன் 2ம் கால யாகசாலை பூஜை மற்றும் பஞ்சகவ்ய பூஜை, பிம்ப சுத்தி, மூர்த்திகளுக்கு ரக்சாபந்தனம், மூல மந்திரஜெபம், ஹோமம், நாடி சந்தானம், யாத்ரா தானம் நடந்தது.
காலை 6 மணிக்கு மேல் கடம் புறப்பாடு, விமான கும்பாபிஷேகம், சங்கிலி பூதத்தார், பேச்சியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. காலை 10 மணிக்கு மஹா அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை மஹேஸ்வர பூஜை, அன்னதானம் நடந்தது.. மாலை 6.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் லலிதா ஸகஸ்ர நாம அர்ச்சனை, சோடஷ உபசார தீபாராதனை, பிரசாதம் வழங்கல் நடைபெறும். விழாவில் நெல்லை மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் திரளாகப் பங்கேற்கின்றனர்.ஏற்பாடுகளை திருப்பணி முக்கு பூதத்தார் காம்பவுன்ட் கோயில் விழா கமிட்டியார் செய்துள்ளனர்.
மேலும் செய்திகள்
ஆதவன் வழிபட்ட அற்புத ஆலயங்கள்
அனுமனின் அருள் பெருக்கும் அற்புத ஆலயங்கள்
அஞ்சு மலை வாசன் ஐயப்பனின் ஆலயங்கள்
புத்தாண்டன்று தரிசிக்க வேங்கடவனின் தலங்கள்
சனி பகவான் பரிகார தலங்கள்
திருவண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டிய நாட்கள்
18-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்