SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடக்கம் : அம்ச வாகனத்தில் சுவாமி வீதி உலா

2019-09-04@ 14:01:46

சித்தூர்: காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி மாலை அம்ச வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சித்தூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று காணிப்பாக்கம் சுயம்பு வரசித்தி விநாயகர் கோயில். இந்த கோயிலுக்கு சித்தூர் மாவட்டம் மட்டுமல்லாமல் ஆந்திர மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி பிரமோற்சவம் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அனைத்து விநாயகர் கோயில்களிலும் விநாயகர் சதுர்த்திக்கு முன்னதாக பிரமோற்சவம் தொடங்கி சதுர்த்தி அன்று நிறைவு பெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இங்கு மட்டும் விநாயகர் சதுர்த்திக்கு மறுநாளில் இருந்து பிரமோற்சவம் தொடங்கி 21 நாட்கள் நடக்கிறது. இந்நிலையில் வரசித்தி விநாயகர் கோயிலில் நேற்று  காலை 6 மணி முதல் 7 மணிக்குள் சிம்ம லக்னத்தில் சித்திரை நட்சத்திரத்தில் தங்க கொடிமரத்தில் மூஷிக உருவம் வரையப்பட்ட மஞ்சள் கொடியுடன் அர்ச்சகர்கள் வேதமந்திரங்கள் முழங்க பிரமோற்சவ கொடியேற்றம் கோலாகலமாக நடந்தது.

முன்னதாக கொடிமரத்திற்கும், மூலவருக்கும்  பால், தயிர், இளநீர் உட்பட பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை நடந்தது.  பிரமோற்சவத்தையொட்டி தினந்தோறும் ஒவ்வொரு வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
இந்த ஊர்வலத்தை காணிப்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஒவ்வொரு வம்சத்தினர் தொடங்கி வைத்து சீர்வரிசை வழங்குவது வழக்கம்.

பிரமோற்சவத்தின் முதல் நாளான நேற்று மாலை அலங்கரிக்கப்பட்ட அம்ச வாகனத்தில்  விநாயகர் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில்  உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக காணிப்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள 5 கிராமங்களை சேர்ந்த சீர்கருநீக வம்சத்தினர் அம்ச வாகனத்திற்கு பூஜை செய்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். அப்போது ஏராளமான பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
விழாவையொட்டி காணிப்பாக்கம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.பக்தர்களுக்கு எந்த ஒரு  சிரமம் இல்லாத வகையில் கோயில் நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.மேலும் ஆங்காங்கே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நகர் முழுவதும் ஏராளமான சிசிடிவி கேமராக்கள் பொருத்தி 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Advertisement
Like Us on Facebook Dinkaran Daily News
 • humanbodies23

  2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

 • jammu23

  ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

 • yamuna23

  இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

 • chadpuja23

  சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

 • isrelviva23

  இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்