SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தா.பேட்டையில் விதைகள் வைக்கப்பட்ட 108 விநாயகர் சிலைகள் வழிபாடு

2019-09-03@ 17:35:13

தா.பேட்டை, : தா.பேட்டையில் விதைகள் வைக்கப்பட்ட 108 களிமண் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தினர்.தா.பேட்டையில் பிள்ளாதுறை பெரிய மாரியம்மன் கோயில் திடலில் இருபதாம் ஆண்டாக விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சுமார் 12 அடி உயரமுள்ள விநாயகர் சிலை நிறுவப்பட்டு அதற்கு கணபதி பூஜை, கண் திறப்பு உள்ளிட்ட வழிபாடுகள் நடத்தப்பட்டது. இரவு களிமண்ணால் செய்யப்பட்டு அதனுள் வேம்பு, புங்கன் மரத்தின் விதைகள் வைத்து செய்யப்பட்ட 108 களிமண் பிள்ளையார் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. அரையடி உயரமுள்ள 108 விதை பிள்ளையார் சிலைகளை சிறுவர், சிறுமியர் அமர்ந்து பூஜை செய்து வழிபட்டனர். அப்போது விநாயகர் துதி, விநாயகர் போற்றி, சங்கல்பம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டது. மேலும் குழந்தைகள் விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும், கல்வியில் சிறந்து விளங்கவும் பிரார்த்தனை செய்தனர். வழிபாட்டின் முடிவில் பாலவிநாயகர் வழிபாட்டில் பங்கேற்ற குழந்தைகளுக்கு எழுதுபொருட்கள் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகரை வழிபட்டு சென்றனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்