SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிறந்த தேதி பலன்கள் ஏப்ரல் 20 முதல் 26 வரை

2013-12-11@ 16:00:48

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

‘வாய்ப்பு ஒருமுறைதான் கதவைத் தட்டும்’னு ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டுங்க. உங்களைப் பொறுத்தவரை இந்த வாரம் வாய்ப்புகள் அடுத்தடுத்து  பலமுறை உங்கக் கதவைத் தட்டப்போகுதுங்க. அந்த சத்தத்தை சரியாகக் கேட்டு அந்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கறது உங்க  கையிலதாங்க இருக்கு. சோம்பல், சிற்றின்ப கேளிக்கைகள்ல நேரத்தை வீணாக்காம சிறப்பு பெறுங்க. உத்யோகஸ்தர்கள் சுற்று நடப்புகளைப்  புரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்தால், உங்க முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாதுங்க. தடைகள் நீங்கி வீட்ல சுபவிசேஷங்கள்  நடந்தேறுமுங்க. படிப்பு, வியாபாரம், தொழில் நிமித்தமாக வெளிநாடு போகிறவங்க பல மேன்மைகளை அடைவீங்க. சிலருக்கு நரம்பு உபத்திரவம்  தெரியுதுங்க. கண்ணைப் பரிசோதனை செய்துக்கோங்க.

இந்தத் தேதிப் பெண்கள் பெற்றோரிடம் விவாதம் செய்யாதீங்க. துர்க்கை வழிபாடு உங்களை உயரே தூக்கிவிடுமுங்க.  

2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு


‘செய்யும் தொழிலே தெய்வம்’னு ஒரு சொலவடை உண்டுங்க. உங்கள்ல சிலர் பக்தியிலேயும் ஆலய வழிபாட்டிலேயும் ஆலய திருப்பணிகள்ல  ஈடுபடறதும் பெரும்பாலும் விளம்பரத்துக்காகவே இருக்குமுங்க. குடும்பம் மற்றும் செய்தொழில் கடமையிலிருந்து விலகி இப்படி பக்தி வேடம்  போடறது, சிலசமயம் நகைப்புக்கு இடமாகிடுமுங்க, கவனம். குடும்பப் பெரியவங்க, உங்க நலன்ல அக்கறை கொண்டவங்களோட யோசனையைக்  கேட்டுக்கோங்க. முக்கியமா வேலை விஷயத்ல அவசரப்பட்டு ராஜினாமா செய்துடாதீங்க. பொறுமை, விவேகத்தை ரொம்ப முக்கியமா  கடைப்பிடிக்கணுமுங்க. உறவுகள்கிட்ட யோசிச்சுப் பேசுங்க. சிறு வாக்குவாதமும் பெரிய விபரீதமாகலாம். அடிவயிற்றுக் கோளாறு வருமுங்க. சிலர்  அமிலச் சுரப்பு ஏற்றத் தாழ்வால பாதிக்கப்படுவீங்க.

இந்தத் தேதிப் பெண்கள் நீங்க உண்டு, உங்க வேலை உண்டுன்னு இருந்திடறதே நல்லதுங்க. சிவன் வழிபாடு சிக்கலெல்லாம் தீர்க்குமுங்க.

3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

‘ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்’னு சொல்வாங்க. இது, அனாதரவாக விடப்பட்ட குழந்தைகளுக்கு முடிந்த உதவி  செய்யறதை வலியுறுத்தற வாசகம். ஆனா, தன் வீட்டுக் குழந்தைகளை அப்படி வேற யாராவது ஊட்டி வளர்ப்பாங்கன்னு காத்திருக்கவா முடியும்?  நீங்கதான் அவங்களோட உடல்நலத்ல, பழக்க வழக்கங்கள்ல, படிப்பிலே அக்கறை எடுத்துக்கணுமுங்க. பிறர் வீட்டுப் பிரச்னையில அக்கறை  காட்டறதைக் குறைச்சுகிட்டு சொந்த குடும்பத்தை கவனிக்கணுமுங்க. ஏதேனும் வழக்கு நிலுவையில இருந்தா அதில் முழு ஈடுபாடு செலுத்துங்க.  அலட்சியமா இருந்தீங்கன்னா வழக்கு வழுக்கிவிட்டிடுமுங்க. பெரிய முதலீடு எதையும் இப்ப செய்ய வேண்டாங்க. சிலருக்குத் தொண்டையில் புண்,  வறட்சின்னு ஏற்படுமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் பிள்ளைகள்கிட்ட தன்மையாகப் பழகணுமுங்க. மகான் ராகவேந்திரர் வழிபாடு, மங்கலம் சேர்க்குமுங்க.

4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு


‘காதோடு சொன்னாலும் ரகசியம் காத தூரம் போகும்’னு ஒரு வசனம் உண்டு. அதாவது சொல்லக் கூடாத ரகசியம் காது, மூக்கு வெச்சு, விபரீதமாக  வளரும்னு அர்த்தம். உண்மையிலேயே உங்க மேல அக்கறை இருக்கறவங்ககிட்ட மட்டும் உங்கக் குடும்ப விஷயங்களையோ, சொந்த  பிரச்னைகளையோ சொல்லி ஆறுதல் தேடுங்க. உங்க வேதனையில சந்தோஷப்படறவங்களைக் கண்டுபிடிச்சு விலக்கிடுங்க. குடும்பத்ல சிறு  கோபமும் பெரிய பிரச்னையை உண்டாக்கிடுமுங்க. கொடுக்கல்-வாங்கல்ல எச்சரிக்கையா இருங்க. வாழ்க்கைத் துணை உடல்நலத்துக்கு  முக்கியத்துவம் கொடுங்க. சிலருடைய பெற்றோருக்கும் நரம்பு சம்பந்தப்பட்ட உபாதை ஏற்படலாமுங்க. உத்யோகத்ல அலட்சியம் காட்டாதீங்க; நேர  நிர்வாகத்தை முறையாகக் கடைப்பிடிங்க. சிறு அளவில் உடற்பயிற்சி மிக முக்கியமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் மூன்றாம் மனிதரை நம்ப வேண்டாங்க. காளி வடிவ தெய்வ வழிபாடு, காலத்தை உங்களுக்கு சாதகமாக்குமுங்க.

5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு


‘அடக்க முடியலியா, அடங்கிப் போயிடு’ன்னு சொல்வாங்க. இதனால பிரச்னைகள் எதுவும் இல்லாம பார்த்துக்கலாம். நியாயமான விஷயம்னாலும்  உங்க தரப்பு வாதம் எடுபடலேன்னு தெரிஞ்சா அமைதியாகப் போயிடறது நல்லதுங்க. இது குடும்பம், வெளிவட்டாரப் பழக்கம், தொழில், உத்யோகம்னு  எல்லா இனங்களுக்கும் பொருந்துமுங்க. உங்க யோசனைகளும் திட்டங்களும் பிறரால ஏற்றுக்கொள்ளப்படுமுங்க. அதே சமயம், உங்கக் கருத்தை பிறர்  ஏற்றுக்கணும்னு வற்புறுத்தவும் செய்யாதீங்க. புதுசா தொழில் தொடங்கறவங்க, அது சம்பந்தமான சட்ட திட்டங்களைச் சரியாகப் புரிஞ்சுக்கோங்க;  அல்லது தகுந்த நிபுணர்கிட்ட ஆலோசனை கேட்டுக்கோங்க. சிலர் ஒவ்வாமை கோளாறால பாதிக்கப்படுவீங்க. சிலருக்கு சரும நிற மாற்றம் கொஞ்சம்  வருத்தம் தரும்.

இந்தத் தேதிப் பெண்கள் உங்க கருத்தை மென்மையாகத் தெரிவிக்கணுமுங்க. ஆஞ்சநேயர் வழிபாடு, ஆற்றலை அள்ளித் தருமுங்க.

6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு


‘வரவு எட்டணா, செலவு பத்தணா’ பாட்டு தெரியும்தானே? அதனால வரவுக்கு ஏத்த செலவுக்குள்ள வாழப் பார்க்கணுமுங்க. பிறர்  பாராட்டணுங்கறதுக்காக அனாவசிய, ஆடம்பர செலவுகளை இழுத்துப் போட்டுக்காதீங்க. குடும்பத்தார் அப்படி செலவு செய்யச் சொல்லி உங்களை  நிர்ப்பந்தப்படுத்தலாம்; அவங்ககிட்ட சூழ்நிலையை விளக்கிச் சொல்லிப் புரியவையுங்க; புரிஞ்சுப்பாங்க. உத்யோகத்ல கொஞ்சம் இழுபறியாக இருந்த  பிரச்னை உங்களுக்கு சாதகமான முடிவுக்கு வருமுங்க. வியாபாரம், தொழில்ல இருக்கறவங்க அதிகமா செலவு செய்து விளம்பரப்படுத்த வேண்டாங்க;  உங்க பழகு முறையாலேயே வாடிக்கையாளர்களை ஈர்க்கமுடியுமுங்க. கழுத்து, முதுகு எலும்புகள்ல பாதிப்பு வரலாம்.

இந்தத் தேதிப் பெண்கள் சிக்கனத்தைக் கடைப்பிடித்து, எதிர்கால நன்மைக்கு அஸ்திவாரம் போட்டுக்கோங்க. லட்சுமி நரசிம்மர் வழிபாடு, சேமிப்பை  அதிகரிக்குமுங்க.


7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு


‘வெளியில தங்கம்; வீட்ல பித்தளை’ன்னு சொல்வாங்க. வெளியில பத்தரை மாத்துத் தங்கமாக நடந்துக்கற நீங்க வீட்ல மட்டும் ஏன் மதிப்புக்  குறைவாக நடந்துக்கறீங்க? உங்க திட்டம், பிரச்னைகளுக்கு உங்கக் குடும்பத்தாரைத் தவிர வேற யாராலேயும் அன்பான, ஆதரவான, நன்மை மிகுந்த  யோசனையைச் சொல்ல முடியாதுங்க. பெரியவங்கன்னு இல்லே, வயசில சின்னவங்களும் பளிச்னு நல்ல யோசனை சொல்லக்கூடும்; ஈகோவால  அந்த யோசனைகளையும் அதன் பலன்களையும் இழந்திடாதீங்க. தொழிலிடத்திலே உங்க மதிப்பு கூடுமுங்க. வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்றவங்க  உங்க உடைமைகளை பத்திரமாகப் பாதுகாத்துக்கணுமுங்க. சிலருக்கு நரம்பு பிரச்னை வரலாம்; சிலருக்கு காது-மூக்கு-தொண்டை பகுதிகள்ல கோளாறு  வரும்.

இந்தத் தேதிப் பெண்கள் தைரியமா உங்களுக்குத் தோனற யோசனைகளைச் சொல்லலாமுங்க. பெருமாள் வழிபாடு நன்மைப் பாதை வகுக்குமுங்க.


8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு


‘நல்லவன்தான்; ஆனா நாக்கிலே சனி’ அப்படீம்பாங்க. உங்கள்ல பலர் மனசால நல்லவங்கதான்; ஆனா, சிலர் பேச்சாலேயே பெருமையை இழப்பீங்க.  பழைய வன்மங்களும் ஏமாற்றங்களும் மனசிலே அனாவசிய குழப்பங்களையும் சார்ந்தவங்களுக்குப் பெரிய பாதகங்களையும்தான்  கொண்டுவரும்ங்கறதை ஞாபகம் வெச்சுக்கோங்க. மன்னித்து, மறக்கிற மனசுக்குள்ளதான் பெருந்தன்மை குடியேறி, தீய விளைவுகளையும் நன்மையாக  மாற்றிக்கொள்ளும் பக்குவம் வரும். பெற்றோர் மற்றும் குடும்பத்தார்கிட்ட அன்பாகத்தான் நடந்துக்கறீங்க; ஆனா சுள்ளுனு ஒரு பேச்சு உங்களையே  அறியாம வெளியே வந்து விழறபோது செய்த நல்ல விஷயங்கள்லாம் விஷமாகிப் போயிடுதுங்க. தெளிவான சிந்தனை, நல்ல செயல்களை  மேற்கொள்ள பிராணாயாமம், தியானம், யோகா பயிலுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் வார்த்தைகள்ல தேன் தடவிக்கோங்க. சிவன் வழிபாடு சீற்றம் தணிக்கும்; சிறப்பு கொண்டுவரும்.

9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு


‘உழைப்பே உயர்வு’ன்னு சொல்வாங்க. அது யதார்த்தமான அனுபவம்தாங்க. அதாவது, உங்களுக்காக, உங்க மேன்மைக்காக நீங்கதான்  உழைக்கணுமுங்க. பிறர் உழைப்பிலே நீங்க சுகமடைய நினைக்காதீங்க. சோம்பலை விரட்டிடுங்க. கொஞ்சம் உடற்பயிற்சியை தினமும்  மேற்கொள்ளுங்க; சுறுசுறுப்பாவீங்க. சூரிய உதயத்துக்கு முன்னால எழுந்து அன்றன்றைய வேலைகளை ஆரம்பிங்க. யாருடைய வார்த்தைக்கும்  மயங்கிடாதீங்க; யாருக்கும் தகுதிக்கும் மீறி அனுதாபப்படாதீங்க. ஏதேனும் பிரச்னைன்னா, அந்த பிரச்னையை உருவாக்கியவரை நண்பராக்கிக்கொள்ளப்  பாருங்க. கௌரவம் பார்த்து வாழ்க்கையை திசைத் திருப்பிக்காதீங்க. அப்படிப் பார்த்ததால ஏற்பட்ட பழையகால நஷ்டங்களை நினைவுபடுத்திக்கோங்க.  சிலருக்கு ஒற்றைத் தலைவலி சங்கடம் தரும். சைனஸ் தொந்தரவு சிக்கலை உண்டாக்கும்.

இந்தத் தேதிப் பெண்கள் நிதானமா செயல்படுங்க. அனுமன் வழிபாடு அல்லல்களைப் போக்குமுங்க.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • erode-senthilbalaji-8

  சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!

 • athisayangal

  நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்

 • perunad

  பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!

 • turkeydeath11

  துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!

 • lantern-festival-china

  உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்