மோதகம்
2019-08-06@ 15:30:57

தேவையான பொருட்கள்
அரிசி மாவு / இடியாப்ப மாவு - 1/2 கப்
நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு, தண்ணீர் - தேவையான அளவு
தேங்காய் பூரணம் :
துருவிய தேங்காய் - 1 கப்
வெல்லம் - 1 கப்பிலிருந்து 3 மேஜைக்கரண்டி எடுத்து விடவும்
ஏலக்காய் - 2
மோதகம் எப்படி செய்வது?
போதுமான தண்ணீரை, எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும். மாவில், உப்பு சேர்த்து, கொதிக்கும் தண்ணீரை ஊற்றி பிசையவும். ஒரு தோசைத்திருப்பியின் காம்பு கொண்டு கிளறலாம். அல்லது ஒரு கரண்டி கொண்டும் கிளறலாம். சிறிது கை பொறுக்கும் சூட்டிற்கு வந்தவுடன், நன்கு பிசைந்து, 12 சமமான அளவு உருண்டைகளாக உருட்டி, மூடிவைக்கவும். வெல்ல பூரணத்திற்கு, தேங்காய், மற்றும் வெல்லத்தை ஒன்றாக மிதமான தீயில் வைத்து கிளறவும். வெல்லம் இளகி, நன்கு தேங்காயுடன் கலந்து மறுபடியும் இறுகும் வரை கிளறி, ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து இறக்கவும். ஆறியபின் சம அளவு உருண்டைகளாக உருட்டவும். கைகளில் சிறு துளி எண்ணெய் தடவி, உருட்டிய மாவு உருண்டையை, மெல்லிய தடிமன் உள்ள கிண்ணமாக செய்யவும். உள்ளே பூரண உருண்டையை வைத்து, மூடி, அழகாக மோதகம் வடிவில் செய்யவும். இட்லி தட்டில் எண்ணெய் தடவி, செய்த மோதகங்களை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
Tags:
Motakamமேலும் செய்திகள்
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!