SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மனமுருகி வேண்டுவோருக்கு குழந்தை வரம் தரும் மகாதேவர் கோயில்

2019-07-30@ 10:32:44

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் வள்ளியாற்றங்கரையில் உள்ளது திருநயினார்குறிச்சி. திருவள்ளுவர் பிறந்த ஊராக குமரியை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்களால் கருதப்படும் இங்கு கறைகண்டேஸ்வரம் மகாதேவர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் ராஜராஜ தென்னாட்டு குறுநாட்டு கடிகைப்பட்டிணத்து கறைகண்டேஸ்வரம் உடையார் - நயினார் - கூத்தாடும் தேவர் என்ற அருள்மிகு கறைகண்டேஸ்வரம் மகாதேவர் திருக்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

சுயம்புவகை, அம்மை அப்பனாக, நடராஜராக நவகிரகங்களை தன்னுள் அடக்கி முப்பரிமாணமாக காட்சி தரும் பரிகார ஸ்தலம் திருநயினார்குறிச்சி கறைகண்டேஸ்வரம் மகாதேவர் திருக்ேகாயிலின் தல வரலாறை காணலாம். கறைகண்டேஸ்வரர் என்பது மூலவர் பெயர். பாற்கடலை கடைந்த போது, வந்த விஷத்தை சிவன் அருந்தினார். பார்வதி தேவி சிவனின் கழுத்தில் கை வைத்து பிடித்தார். அதனால் விஷம் (கறை) கழுத்தில் (கண்டம்) நின்றது. சிவன் கறைகண்ட ஈஸ்வரன் எனப்பட்டார். அந்த ஈஸ்வரன் குடிகொண்ட இடம் இது.

இந்த கோயிலில் மொத்தம் 10 கல்வெட்டுகள் உள்ளன. ஒரு கல்வெட்டில், மூலவரை கறைகண்டேஸ்வரமுடையார் மகாதேவர் எனவும், இந்த ஊரை கடிகைப்பட்டிணம் திருநயினார்குறிச்சி என்றும் குறிக்கிறது. கடிகைப்பட்டிணம் என்பது திருநயினார் குறிச்சியை அடுத்த கடற்கரை கிராமம் ஆகும். இந்த கிராமம் மாமன்னர் முதலாம் ராஜராஜன் காலத்தில் துறைமுகமாக இருந்துள்ளது. மற்றொரு கல்வெட்டு கருவறையை அகநாழிகை எனக்குறிப்பிடுகிறது. இதனால் கோயில் 13ம் நூற்றாண்டிற்கு முந்தையது என்று உறுதியாக கூறமுடியும். கோயிலின் பலிபீடத்தை கேரளன் குன்றன் என்பவர் அமைத்துள்ளார். கோயில் மரமாத்து பணிகளை கவனிக்க ஆரியன் என்ற தச்சரும், ரவிவர்மன் என்ற பொற்கொல்லரும் 1228ம் ஆண்டு நிரந்தரமாக இருந்துள்ளனர்.

கோயிலின் நிர்வாகம் சரியாக நடக்கிறதா என்பதனை கண்காணிக்க அரசின் பிரதிநிதி அடிக்கடி வந்து சென்ற குறிப்புகளும் கல்வெட்டில் உள்ளன. 1629ல் இக்ககோயிலில் பணிபுரிந்த தேவனடியார்கள் நாடகம் நடத்த நிபந்தம் அளித்ததும் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொரு கல்வெட்டு கோயிலில் கூத்துநடத்தும் தேவதாசிகளுக்கு படித்தரத்தை குறிப்பிடுகிறது. கோயிலில் சைவ விழாக்களும், சடங்குகளும் ஆரம்ப காலத்திலிருந்தே நடந்திருக்கின்றன. 1263ம் ஆண்டு கல்வெட்டில் நீராடுதல் என்கிற ஆறாட்டு திருவிழாவை தெரிவிக்கிறது. 1433ம் ஆண்டு சித்திரைமாதம் 26ம் தேதி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. கோயிலின் முன்பகுதி ஷோபன மண்டபம் பெரும் பற்றப்புலியூர் சிவனுக்கடியான் என்பவரால் சிறந்த சிற்பி கொண்டு 1432ல் கட்டப்பட்டுள்ளது. 1532ம் ஆண்டு மாசிமாதம் பௌர்ணமி விழா நடந்ததையும், விழாவில் 10 பிராமணர்களுக்கு உணவு வழங்கிய செய்தி, 1707ல் பிரதோஷ விழா விமரிசையாக நடைபெற்றது கல்வெட்டில் உள்ளது.

இந்த கோயிலில் முகப்பில் குழல் ஊதும் கண்ணன், அர்ச்சுனர், தபசு சிற்பங்கள் உள்ளன. 3 வெளிப்பிரகாரங்களை தொடர்ந்து முன்மண்டபம் அமைந்துள்ளது. இதனை அடுத்த முகப்பு மண்டபம் சோழர் கால கட்டிட பாணியில் அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து சிறிய அர்த்த மண்டபம் உட்பிரகாரம், வலம்புரி விநாயகர், நடுவே நந்தீஸ்வரர், கருவறையை சுற்றிய அதிர்ஷ்டான அமைப்பு கோயிலின் பழமையை காட்டுகிறது.
கருவறை, அந்தராளம் என இருஅறைகளை கொண்டது. கருவறை கட்டுமானம் 12ம் நூற்றாண்டிற்கு முந்தையது என கல்வெட்டு கூறுகிறது. மூலவர் லிங்கவடிவானவர். லிங்கத்தின் தட்டையாக அமைப்பும், ஆவுடையும் நீர் விழும் தூம்பும் பழமையை காட்டுகிறது. விமானம் 16ம் நூற்றாண்டை சேர்ந்தது. ஏகதள விமானம் சுதையால் ஆனது. வனதர்ம ராஜா, காலபைரவர், கரமகரிஷி உள்பட பல சன்னதிகள் உள்ளன. இந்த கோயிலில் குழந்தை இல்லாதவர்கள் மனமுருகி வேண்டினால் இறைவனே உடனே குழந்தை வரத்தை கொடுத்து குடும்பத்தை தழைக்க வைக்கிறார். வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்து ெசல்கின்றனர். அவர்கள் வேண்டும் காரியங்களை உடனே நிறைவேற்றி கொடுக்கிறார் இறைவன்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • stalin-corp-31

  மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 • long-whale-newyork

  35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

 • pak-blast-30

  பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

 • china-spring-festival

  சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!

 • orange-tree-wishes-27

  ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்