SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிறந்த தேதி பலன்கள்ஏப்ரல் 13 முதல் 19 வரை

2013-12-11@ 16:00:48

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

உத்யோகஸ்தர்கள் பல சிறப்புகளைப் பெறுவீங்க. நிலுவையிலிருக்கும் பதவி, ஊதிய உயர்வுகள் கூடுதல் ஆதாயத்தோடு சேர்ந்து வருமுங்க. வேலை  தேடுகிறவர்களுக்கு அவங்கவங்க தகுதிக்கேற்ப, விரும்பிய வேலையே கிடைக்குமுங்க. அதேபோல அரசியல்வாதிகளுக்கும் பிரமாதமான காலமுங்க;  கௌரவம் மேம்படும். மேற்கொள்ளும் செயல்கள் எல்லாம் வெற்றி காணுமுங்க. படைப்பாளிகள் பாராட்டு பெறுவீங்க. சிலருக்கு மதிப்பு மிக்க  விருதுகளும் கிடைக்கலாம். தடைகள் விலகி, எதிர்பார்த்தபடி, குடும்பத்தில் சுபவிசேஷங்கள் நிறைவேறுமுங்க. விடுபட்ட தெய்வ வழிபாட்டை  உடனடியாக நிறைவேற்றிடுங்க; இது மேலும் வளம் சேர்க்குமுங்க. சிலர் காது-மூக்கு-தொண்டை உபாதையால பாதிக்கப்படுவீங்க. சிலருக்கு  ஒவ்வாமையால சளித் தொந்தரவு உண்டாகும்.

இந்தத் தேதிப் பெண்கள் பலராலும் மதிக்கப்படுவீங்க. புதன்கிழமை பெருமாள்-தாயாரை துளசி தளங்களால் அர்ச்சனை செய்து வழிபடுங்க. வாழ்க்கை  மணக்கும்.


2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு


கொஞ்சம் குழப்பமான வாரமுங்க. யாரோடும் அனாவசிய வாக்குவாதம் வேண்டாங்க. முக்கியமா, பூர்வீக சொத்து விவகாரத்ல பெற்றோர், ரத்த பந்த  உறவுகிட்ட ஆக்ரோஷப்படாதீங்க. உங்களுக்குன்னு வரவேண்டியது வரத்தான் போகுது; அதனால அமைதியா இருப்பதே உங்க மதிப்பை உயர்த்துமுங்க.  இந்த விஷயத்ல பிறர் அறிவுரையைக் கேட்டு நஷ்டப்படாதீங்க. உத்யோகஸ்தர்கள் கணக்கு வழக்கிலே ரொம்பவும் கவனமா இருங்க. சக ஊழியர்கள்,  உங்களுக்காகப் பரிதாபப்படற சாக்கில், மேலதிகாரிங்ககிட்ட உங்களைப் போட்டுக் கொடுக்கத் தயங்க மாட்டாங்க.

இந்தத் தேதி இளைஞர்கள் கூடா சகவாசத்தை ஆரம்பத்திலேயே வெட்டிவிட்டுடுங்க. சர்க்கரை, ரத்த அழுத்தத்தைப் பரிசோதிச்சுக்கோங்க. இந்தத்  தேதிப் பெண்கள் வெளிப்படையாகப் பேசி பகையைத் தேடிக்காதீங்க. சனிக்கிழமை அனுமனை வெற்றிலை மாலையிட்டு வழிபடுங்க; வெற்றி உங்க  பக்கம்தான்.

3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு


துரதிருஷ்டவசமாக சில சம்பவங்கள் உங்க கோபத்தைத் தூண்டுவதாக அமையுமுங்க. கடுமையான வார்த்தைகளைப் பேசாதீங்க. முடிந்தால் அந்தப்  பகுதியிலிருந்தே விலகிப் போயிடுங்க. அதேபோல சாலையில் எதற்காகவாவது கூட்டம் கூடியிருந்தால், ஆர்வக்கோளாறோடு அங்கே போய்ப்  பார்க்காதீங்க; அந்த ஆர்வம் ஆபத்தில் கொண்டு விட்டிடலாம். குடும்பத்ல பிள்ளைகளோட நடவடிக்கைகள் மன சங்கடம் உண்டாக்குமுங்க.  அவங்ககிட்ட நிதானமாகப் பேசுங்க. உத்யோகத்ல அனாவசியமா ரோஷப்படாதீங்க; வேலையை ராஜினாமா செய்யும் நிலைக்கும் சிலர் போகக்கூடும்;  அப்படி செய்துடாதீங்க. மேலே மேலே அடி விழுந்தாலும் பொறுமையும் அமைதியுமே உங்களுக்குக் கேடயமா அமையுமுங்க. சிலருக்கு அடிவயிறு  முதல் பாதம்வரை ஏதேனும் கோளாறு தெரியுமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் மென்மையான பேச்சால சில பிரச்னைகளைத் தீர்ப்பீங்க. செவ்வாய்க்கிழமை துர்க்கையை வழிபடுங்க; நிம்மதி பிறக்கும்.


4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

நீங்களே பேசித் தீர்த்துக்கக்கூடிய சின்ன குடும்ப விஷயங்களுக்கெல்லாம் மூன்றாம் நபரின் ஆலோசனையைக் கேட்காதீங்க. பொதுவாகவே ஆதாயம்  இல்லாம ஆத்திலே இறங்காத உங்க சுபாவத்தை குடும்பத்தார்கிட்டேயும் காட்டாதீங்க. எந்த கையெழுத்திடுமுன்னும் யோசிச்சு செய்ங்க.  கொடுக்கல்-வாங்கல் பிரச்னையில உங்களோட நேரடி அணுகுமுறைதான் உங்களுக்கு சாதகமாக இருக்குமுங்க; அதனால யாரையும் உங்க சார்பாக  அனுப்பிவைக்காதீங்க. விடுபட்ட குலதெய்வ வழிபாட்டைக் கண்டிப்பாக நிறைவேற்றிடுங்க; அதனால பல நன்மைகளை அடைவீங்க. சிலருக்கு  வெளிநாட்டுப் பயண வாய்ப்பு வரலாம்; ஆனா, இப்போதைக்கு பயணிக்க வேண்டாங்க; கொஞ்சம் ஒத்திப்போடுங்க.  அஜீர்ணக் கோளாறு தெரியுதுங்க;  சிலருக்கு சரும நிற மாற்றம் ஏற்படலாம்.

இந்தத் தேதிப் பெண்கள் கொஞ்சம் சுயநலத்தை ஒதுக்கி வெச்சுட்டு பிறரோட பழகுங்க. செவ்வாய்க்கிழமை அனுமனை வழிபடுங்க; ஆனந்தம்  துளிர்க்கும்.

5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு


தடைகள் நீங்கி சுபவிசேஷங்கள் சிறப்பாக நடந்தேறுமுங்க. அந்த விசேஷங்கள்ல கலந்துக்க விரும்பாத உறவுக்காரங்க அல்லது நண்பர்கள்கிட்ட  அதெல்லாம் ரொம்பவும் சிறப்பாக நடந்ததை விலாவரியாக சொல்லிகிட்டிருக்காதீங்க; எந்த கண்ல எந்த திருஷ்டி இருக்குமோ! அதனால அவங்க  கேட்டா மட்டும் ‘ஆமாம், நடந்தது’ன்னு சொல்லிட்டு நைஸா நழுவிடுங்க. பெருமையடிச்சுக்கறது உங்களுக்கு சில வேண்டாத விளைவுகளை  ஏற்படுத்திவிடலாமுங்க. சிலர் புது வீடு, புது வாகனம்னு வசதிகளைப் பெருக்கிப்பீங்க. சிலருக்கு திடீர் அதிர்ஷ்டத்தால எதிர்பாராத வகையில  பணவரவுக்கு வாய்ப்பு இருக்குங்க. இந்தத் தொகையை நல்ல விதமாக முதலீடு செய்துடுங்க. கண்களைப் பரிசோதனை செய்துக்கோங்க; சிலரை கண்  நீர் அழுத்தம் எனப்படும் க்ளூகோமா நோய் தாக்கலாம்.

இந்தத் தேதிப் பெண்கள் செலவைக் குறைத்து சேமிப்பில் கவனம் செலுத்துங்க. வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை வழிபடுங்க; மங்கலம் பெருகும்.

6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு


சிலருக்கு இதயப் பகுதியில சிக்கல் வரலாமுங்க. அது வாயுத் தொந்தரவுன்னு நீங்களாக முடிவு பண்ணிக்காதீங்க; அல்லது வேண்டியவங்க  வருத்தப்படுவாங்களேன்னு யாரிடமும் அந்த உபாதையைச் சொல்லாம இருக்காதீங்க. மருத்துவர் பார்த்து, ‘பயப்படாதீங்க’ன்னு சொல்லிட்டார்னா  நிம்மதி; பெரிய பாதிப்பு எதுவும் இருக்காதுன்னுதான் கிரக சஞ்சாரமும் சொல்லுதுங்க. யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போடாதீங்க. மாலையில்  வேலை முடிஞ்சதும் நேராக வீட்டுக்கு வர்ற பழக்கத்தை கைக்கொள்ளணுமுங்க. இரவில் எங்கும் அனாவசியமாக வெளியே தங்க வேண்டாங்க;  குடும்பத்தாரோடு அதிக நேரம் செலவழியுங்க. உத்யோகம், வியாபாரம், தொழில் எல்லாம் எந்தப் பிரச்னையும் இல்லாம சுமுகமாகப் போகுமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் யாருக்கும் எந்த யோசனையும் சொல்ல வேண்டாங்க. ஞாயிற்றுக்கிழமை விநாயகரை வழிபடுங்க; விக்னமெல்லாம் தீரும்.

7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

உத்யோகஸ்தர்கள் சாமர்த்தியமாகப் பழகணுமுங்க. ஆயிரம்தான் மனவேற்றுமை இருந்தாலும் மேலதிகாரிகளோட எந்த பிரச்னையும் இல்லேங்கற  மாதிரி நடிக்கவாவது செய்ங்க. முக்கியமா அரசுத் துறை ஊழியர்கள் சில நிர்ப்பந்தங்களுக்கு ஆட்படவேண்டியிருக்கும். நாசுக்காக சந்தர்ப்பங்களைக்  கையாளுங்க. வியாபாரம், தொழில்ல கூட்டாளிகளோட யோசனைகளைத் தட்டாம கேளுங்க; உடன்பாடு இல்லாவிட்டால், அதை மென்மையாகத்  தெரிவிச்சு, நல்மதிப்புப் பெறுங்க. வாகனத்தை நிதானமாக செலுத்துங்க. சாலையில் இருக்கக்கூடிய சிறு கல்கூட சக்கரத்தை சறுக்கிவிடச் செய்யும்.  குடும்பத்தாரோடு போய் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்க. சிலருக்கு முதுகெலும்பின் கீழ்ப்பகுதியில பாதிப்பு வரலாமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் மனசுக்குள் வெறுப்பு இருந்தாலும் உறவுக்காரங்ககிட்ட சிரிச்சு பேசி காரியத்தை சாதிச்சுக்கோங்க. திங்கட்கிழமை சிவனை  வழிபடுங்க; சிக்கல்கள் தீரும்.

8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

தைரியமும் தன்னம்பிக்கையும் வளரும் காலமுங்க. இந்த சமயத்தில் அந்த சக்தியை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துங்க; நீங்க பாதிக்கப்பட்ட பழைய  சம்பவங்களை நினைச்சு, அப்போது உங்களை பாதிச்சவங்களை இப்பப் பழி வாங்க பயன்படுத்தாதீங்க. மருத்துவமனையில் தங்கி சிகிச்சை  பெறுகிறவங்க, முழுமையாக குணமாகி வீடு திரும்புவீங்க. இந்தத் தேதி இளைஞர்களின் காதல், திருமணம் எல்லாம் அவங்க மனசுக்கேத்தபடியே  இனிமையாக நடந்தேறுமுங்க; இதுக்குப் பெற்றோர் மற்றும் வீட்டுப் பெரியவங்க ஆதரவும் ஆசியும் உண்டுங்க. படிப்பில் இருந்த தடைகளும்  விலகிடுமுங்க. உத்யோகத்ல பிறருக்கு முடிந்தால் உதவி செய்ங்க; விரும்பாவிட்டால் அந்தப் பேச்சையே எடுக்காதீங்க. ரத்தக் கொதிப்பு, சர்க்கரையைப்  பரிசோதிச்சுக்கோங்க.

இந்தத் தேதிப் பெண்களுக்கு ஹார்மோன், கர்ப்பப்பை கோளாறு வரலாமுங்க. வியாழக்கிழமை, மகான் ராகவேந்திரரை வழிபடுங்க; மதிப்பு  மேலோங்கும்.


9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு


சோம்பலை விலக்கிட்டீங்கன்னா இந்த வாரம் நீங்க சூப்பர்மேன்தாங்க. அதிகாலையிலேயே எழுந்திருங்க; சுறுசுறுப்பு பெறுவீங்க. அன்றைய  வேலைகளை எது முதல்ல, எது அப்புறம்னு திட்டமிட்டுகிட்டீங்கன்னா, வேலைகளும் மளமளன்னு முடியும்; நேரமும் மிச்சமாகும். சட்டத்துக்குப்  புறம்பான விஷயங்கள்ல கொஞ்சமும் ஆர்வம் காட்டாதீங்க. அந்த சாமர்த்தியமோ, எந்தப் பின்விளைவையும் எதிர்கொள்ளும் மன உறுதியோ  உங்களுக்கு இல்லேங்கறதால அனாவசியமா பலிகடா ஆகிடாதீங்க. பிள்ளைகளைப் பற்றி பிறரிடம் அனாவசியமாகக் குறை சொல்லாதீங்க; நாளைக்கு  உங்களைப் பிள்ளைங்க மதிக்கணும், நினைவு வெச்சுக்கோங்க. ஆரம்பகால சுவாசக் கோளாறை அலட்சியமா விட்டீங்கன்னா, பெரிய சிக்கலாகிடுமுங்க.
இந்தத் தேதிப் பெண்கள் அண்டை வீட்டாரோடு பிணக்கு வெச்சுக்காதீங்க. வெள்ளிக்கிழமை பள்ளிகொண்ட பெருமாளை வழிபடுங்க; ஆற்றல் மிகுந்து  வரும்.

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • erode-senthilbalaji-8

  சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!

 • athisayangal

  நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்

 • perunad

  பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!

 • turkeydeath11

  துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!

 • lantern-festival-china

  உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்