SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சித்திரை மாத விசேஷங்கள்?

2019-04-15@ 17:11:08

சித்திரை 1, ஏப்ரல் 14, ஞாயிறு  

நவமி. திருவையாறு பிரசன்ன மகாகணபதிக்கு பூஜை, திருச்சி உச்சிப்பிள்ளையாருக்கு பாலாபிஷேகம், வேளூர் ஸ்ரீ வைத்யநாதஸ்வாமிக்கு சீதளகும்பம் ஆரம்பம்,  சீர்காழி ஸ்ரீஉமாமகேஸ்வரருக்கு உச்சி காலத்தில் முழுகாப்பு, விழுப்புரம் ஸ்ரீ ஆஞ்சநேயர் லட்ச தீபம், திருவையாறு ஆத்ம பூஜை, ஆரூர் சுவாமிகள் பூஜை,  திருச்சியில் ஸ்ரீதாயுமானவர், ரத்னாவதிக்கு தாயாக வருதல், சித்திரை பெருவிழாவில் சகோபுர ரிஷப வாகனக் காட்சி, காஞ்சிபுரம் காமாட்சி அம்பாள் சமேத  ஸ்ரீஏகாம்பரநாதர் கோயிலில் பஞ்சாங்கபடனம், சென்னை குரோம்பேட்டை குமரன்குன்றத்தில் திருப்படி உற்சவம், திருமலைவையாவூர் அம்ருதபுர ஸ்ரீராமனுஜ  யோகவனத்தில் லட்சதீப விழா, பருத்திசேரி ஸ்ரீ ராமநவமி, ஒலிமங்கலம் மாரியம்மன் மஞ்சள்நீர். பாஞ்சராத்ர ஸ்ரீராமநவமி. தர்மராஜா தசமி. மாவூற்று வேலப்பர்  பெருந்திருவிழா.

சித்திரை 2, ஏப்ரல் 15, திங்கள்  

ஏகாதசி.  திருக்கடவூர் காலசம்காரம், திருச்சி திருக்கல்யாணம். தூத்துக்குடி ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு உருகு சட்ட சேவை. மதுரை மீனாட்சிக்கு பட்டாபிஷேகம்.  இருவரும் வெள்ளி சிம்மாசனத்தில் புறப்பாடு.

சித்திரை 3, ஏப்ரல் 16, செவ்வாய்  

துவாதசி திருவையாறு கோரதக் காட்சி, திருப்பனந்தாள் திருக்கல்யாணம், இரவு கோரதக்காட்சி, திருவஹிந்திரபுரம் ஸ்ரீதேவேந்திரஸ்வாமி உதய கருட சேவை,  திருக்கழுக்குன்றம், சமயபுரத்தில் தேரோட்டம். கோயம்புத்தூர் ஸ்ரீதண்டு மாரியம்மன் உற்சவம் ஆரம்பம். சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் ரதோற்சவம். மதுரை ஸ்ரீமீனாட்சி  சொக்கநாதர் திக் விஜயம். வாமனத் துவாதசி. திருஉத்திரகோசமங்கை மங்களேஸ்வரி வெள்ளி மஞ்சத்தில் தபசுக் காட்சி.

சித்திரை 4, ஏப்ரல் 17, புதன்  

திரயோதசி. மகாபிரதோஷம். திருவையாறு திருச்சி மகாரதம், காஞ்சி ஸ்ரீகாமாட்சி அம்மன் ராஜவீதி உற்சவம், சென்னை குரோம்பேட்டை குமரன் குன்றம்  லட்சார்ச்சனை, காஞ்சி ஸ்ரீகச்சபேஸ்வரர் திருக்கல்யாணம், மதுரை மீனாட்சி ஸ்ரீசுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம். திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயிலில்  தேரோட்டம். மஹாவீரவர்த்தமான பகவான் ஜெயந்தி.

சித்திரை 5, ஏப்ரல் 18,  வியாழன்   

சதுர்த்தசி. வேளூர் மஹன்யாச ருத்ரஜப பூர்வ மண்டாபிஷேகம் ஆரம்பம், காஞ்சி ஸ்ரீதேவராஜஸ்வாமி திருவதார தினம். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில்  தேரோட்டம், திருசிராமலை, சங்கரநயினார் கோயில், கடையம், சீர்காழி, திருப்பனந்தாள், திருக்கடவூர், தூத்துக்குடி ஆகிய திருத்தலங்களில் ரதோற்சவம். ஆறுமுகமங்கலம் 1001 விநாயகர் ரதோற்சவம்.

சித்திரை 6, ஏப்ரல் 19, வெள்ளி  


சித்ரா பெளர்ணமி. கரிநாள். பெளர்ணமி விரதம். மடிப்பாக்கம் குபேரநாதர் சீதளாதேவி கோயில் பால்குடம் உற்சவம், பெளர்ணமி விரத பூஜையில் மருக்கொழுந்து  சாத்துதல், சித்ரகுப்த பூஜை, திருவையாறு பிக்‌ஷாடனார் உற்சவம், இரவு குதிரை வாகனம், காஞ்சி ஸ்ரீதேவராஜஸ்வாமி நடப்பாவி உற்சவம். சித்ரகுப்த பூஜை,  மதுரை வைகையாற்றில் ஸ்ரீகள்ளழகர் எழுந்தருளல். திருமுல்லைவாயல் பச்சையம்மன் மகா அபிஷேகம். திரு உத்திர கோசமங்கை மங்களேஸ்வரி, திருச்சி  உத்தமர் கோவிலிலுள்ள புருஷோத்தமப் பெருமாள் கோயிலில் தேரோட்டம். தேவேந்திர பூஜை. விழுப்புரம் கூத்தாண்டவர் கோயிலில் திருவிழா.

சித்திரை 7, ஏப்ரல் 20,  சனி  


பிரதமை. திருவையாறு ஸப்தஸ்தானம், ஐயாறப்பர் விசித்திர கண்ணாடி சிவிகையிலும் நந்திகேஸ்வர் வெட்டிவேர் சிவிகையிலும் ஸப்தஸ்தல பிரதட்சணம்.  கோயம்புத்தூர் ஸ்ரீதண்டு மாரியம்மன் திருவீதியுலா. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் காலைசேஷ வாகனத்தில் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை  கள்ளழகர் வண்டியூரில் சேஷ வாகனத்தில் தேனூர் மண்டலம் எழுந்தருளல்.

சித்திரை 8, ஏப்ரல் 21, ஞாயிறு  

துவிதியை. திருவையாறு ஐயாறப்பர் ஆரூர் சுவாமிகளுடன் ஆலயத்திற்குள் வரும் ஆனந்தக் காட்சி பூ போடுதல் இரவு சுத்தாபிஷேகம், திருவல்லிக்கேணி  ஸ்ரீபார்த்தசாரதி கோயிலில் கருடசேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் காலை மோகனாவதாரம். கோவை ஸ்ரீதண்டு மாரியம்மன் புறப்பாடு.

சித்திரை 9, ஏப்ரல் 22, திங்கள்  

திரிதியை. சங்கடஹரசதுர்த்தி. திருச்சி உய்யதீக்கொண்டான் சம்வத்சராபிஷேகம், காஞ்சி ஸ்ரீகச்சபேஸ்வரர் வெள்ளி ரதம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர்  மலைக்குப் புறப்பாடு. பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேகம். வீரபாண்டி கௌமாரியம்மன் பவனி.

சித்திரை 10, ஏப்ரல் 23, செவ்வாய்   

சதுர்த்தி. காஞ்சி பாலூரில் திருவூரல் உற்சவம். வராஹ ஜெயந்தி. சென்னை சென்னகேசவப் பெருமாள் நாச்சியார் திருக்கோலம். வீரபாண்டி கௌமாரியம்மன்  புறப்பாடு.

சித்திரை 11, ஏப்ரல் 24, புதன்  

பஞ்சமி. காஞ்சி ஸ்ரீகச்சபேஸ்வரர் பஞ்சமூர்த்தி உற்சவம், திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் ஸ்ரீ காந்தியம்மன் இருவருக்கும் திருமஞ்சன சேவை. ஸ்ரீ பெரும்புதூர்  ஸ்ரீமணவாள மாமுனிகள் புறப்பாடு கண்டருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் காலை சூர்ணாபிஷேகம். கோவை தண்டு மாரியம்மன் பவனி.

சித்திரை 12, ஏப்ரல் 25, வியாழன்  

கிருஷ்ணபட்ச சஷ்டி ஸ்ரீரங்கம் விருப்பன் திருநாள் தொடக்கம், திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள், சென்னை சென்னகேசவப்பெருமாள் கோயில்களில் தேரோட்டம். கோயம்புத்தூர் ஸ்ரீதண்டு மாரியம்மன் புறப்பாடு. சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி  ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

சித்திரை 13, ஏப்ரல் 26, வெள்ளி  

சப்தமி. திருச்செந்தூர் ஸ்ரீநடராஜர் ஷீராபிஷேகம். ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள், ஸ்ரீவைகுண்டம், ஸ்ரீ வைகுண்டபதி இத்தலங்களில் புறப்பாடு. வீரபாண்டி  ஸ்ரீகௌமாரியம்மன் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் வெண்ணெய்த்தாழி சேவை.

சித்திரை 14, ஏப்ரல் 27, சனி  

அஷ்டமி. நடராஜர் அபிஷேகம் (காலை) சித்தர்காடு ஸ்ரீகாழிச்சிற்றம்பல நாடிகள் குருபூஜை, திருச்செந்தூர் சங்காபிஷேகம். திருவோணவிரதம். ஸ்ரீரங்கம்  ஸ்ரீ நம்பெருமாள் புறப்பாடு. செம்பொனார்கோவில் ஸ்ரீ ஸ்வர்ணபுரீஸ்வரர் பவனி. இன்று கருட தரிசனம் நன்று. திஸ்ரோஷ்டகை. சென்னை சென்னகேசவப் பெருமாள்  தங்கப் பல்லக்கு, புண்ணியகோடி விமானத்தில் பவனி.

சித்திரை 15, ஏப்ரல் 28, ஞாயிறு  

நவமி. கரிநாள். ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் கருட வாகனத்தில் திருவீதிவுலா. கீழ் திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நதி எதிரில் ஸ்ரீ ஹனுமாருக்குத்  திருமஞ்சன சேவை. சென்னை சென்னகேசவப் பெருமாள் புஷ்பப் பல்லக்கில் பவனி. வீரபாண்டி கௌமாரியம்மன் புறப்பாடு.

சித்திரை 16, ஏப்ரல் 29, திங்கள்  

தசமி. திருபைஞ்சலி அப்பர் கூட்டமுது. பின்னிரவு திருப்புகலூர், அதிகாலை அப்பர் ஸ்வாமிகள் மோட்சக்காட்சி. ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி சந்நதியில்  நான்கு கருட சேவை. திருநாவுக்கரசர் நாயனார் குருபூஜை.

சித்திரை 17, ஏப்ரல் 30, செவ்வாய்  

ஏகாதசி. திருச்செங்காட்டங்குடி ஸ்ரீ உத்திராபதிஸ்வரர் உற்சவாரம்பம், திருமோகூர் ஸ்ரீகாளமேகப் பெருமாள் புறப்பாடு. வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் புறப்பாடு  கண்டருளல்.

சித்திரை 18, மே 1, புதன்  

துவாதசி. திருக்குவளை பிரம்மோற்சவம் ஆரம்பம். அஹோபிலமடம் ஸ்ரீமத் 32வது பட்டம் ஸ்ரீ அழகியசிங்கர் திருநட்சத்திர வைபவம். திருச்செங்காட்டங்குடி  உத்திராபதிஸ்வரர் புஷ்ப பல்லக்கில் பவனி. வீரபாண்டி கௌமாரியம்மன் பவனி.

சித்திரை 19, மே 2, வியாழன்  

திரயோதசி. பிரதோஷம். திருவண்ணாமலை பகவான் ஸ்ரீரமண மகரிஷி ஆராதனை, புதுவண்ணை ஞானசுந்தர பிரம்மன் குருபூஜை. மாலை சகல  சிவாலயங்களிலும் ஸ்ரீநந்தீஸ்வரர் வழிபாடு. திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் புறப்பாடு.

சித்திரை 20, மே 3, வெள்ளி  

சதுர்த்தசி சீர்காழி முத்துசட்டைநாதர் உற்சவம், ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சித்திரைத் தேரோட்டம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப்பெருமாளுக்குத் திருமஞ்சன  சேவை. மாலை ஊஞ்சல் சேவை. மாத சிவராத்திரி. திருச்செங்காட்டங்குடி ஸ்ரீ உத்திராபதிஸ்வரர் யானை வாகனத்தில் திருவீதிவுலா.

சித்திரை 21, மே 4, சனி  

சர்வ அமாவாசை. அக்னி நட்சத்திர ஆரம்பம். திருச்செங்காட்குடி அமுது படையல், உத்திராபதிஸ்வரர் ரிஷப சேவை. திருநள்ளாறு ஸ்ரீசனிஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை. கருட தரிசனம் நன்று.

சித்திரை 22, மே 5, ஞாயிறு  

பிரதமை. கிருத்திகை.  கிருத்திகை விரதம், தருமை ஷண்முகர் அபிஷேகம்.  அமுது படையல் விழா. திருப்போரூர் ஸ்ரீமுருகப் பெருமான் அபிஷேகம்.  சிறுத்தொண்ட நாயனார் குருபூஜை. வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் பவனி. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் ஆளும் பல்லக்கில் பவனி.

சித்திரை 23, மே 6, திங்கள்   

துவிதியை. கிருத்திகை விரதம். சந்திர தரிசனம். வேளூர் கிருத்திகை, ஸ்ரீச்யாமா சாஸ்திரிகள் ஜனன உற்சவம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப்  பாவாடை தரிசனம். உய்யக்கொண்டான் திருநட்சத்திரம். வேலூர் மாவட்டம் ரத்தினகிரியில் ஸ்ரீபாலமுருகன் தங்க ரதக் காட்சி.

சித்திரை 24, மே 7, செவ்வாய்  

திரிதியை. கார்த்திகை. சிறுவாச்சூர் ஸ்ரீமதுரகாளி அம்மனுக்கு பூச்சொறிதல், கும்பகோணம் பெரிய தெருவில் 12 கருடசேவை. அக்ஷய திரிதியை. பலராமஜெயந்தி,  கும்பகோணம் பெரிய கடைத் தெருவில் 12 கருடசேவை. மங்கையர்க்கரசி நாயனார் குருபூஜை.

சித்திரை 25, மே 8, புதன்  

சதுர்த்தி. சூரியனார் கோயில் சிவாக்கிர யோகிகள் குருபூஜை. சதுர்த்தி விரதம். திருச்செங்காட்டங்குடி உத்திராபதிஸ்வரர் தேரோட்டம். வார்த்தா கெளரி விரதம்.  தேரெழந்தூர் ஸ்ரீஞானசம்பந்தர் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் விடாயாற்று சாற்று முறை.

சித்திரை 26, மே 9, வியாழன்  

பஞ்சமி. ஸ்ரீ சங்கர ஜயந்தி. ஸ்ரீ ராமானுஜ ஜெயந்தி. சிவஸ்தலங்களில் வைகாசி பெருவிழா ஆரம்பம். லாவண்ய கெளரி விரதம். எம்பெருமானார் திருநட்சத்திரம்.  விரண்மீண்ட நாயனார் குருபூஜை. வீரபாண்டி கௌமாரியம்மன் மின்விளக்கு அலங்கார புஷ்பப் பல்லக்கில் பவனி.

சித்திரை 27, மே 10, வெள்ளி  

சஷ்டி விரதம். ஸ்ரீரங்கம் வசந்த உற்சவ ஆரம்பம். முதலியாண்டார் திருநட்சத்திரம். கச்சியப்ப முனிவர் நாயனார் குருபூஜை. மதுரை வீரராகவப் பெருமாள்,  வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயில்களில் தேரோட்டம்.

சித்திரை 28, மே 11, சனி  

சப்தமி. சஷ்டி விரதம். காஞ்சி ஸ்ரீகந்தகோட்டம் தேவேந்திர மயில், வேதாரண்யம் அகஸ்திய காட்சி. மதுரை ஸ்ரீகூடலழகர் உற்சவாரம்பம். வீரபாண்டி ஸ்ரீ  கௌமாரியம்மன் தெற்கு ரத வீதியில் தேரோட்டம். ஸ்ரீசிவஞான சுவாமி நாயனார் குருபூஜை. ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் தங்க புன்னை மர வாகனத்தில்  திருவீதிவுலா.

சித்திரை 29, மே 12,  ஞாயிறு  

அஷ்டமி. தருமை 26வது குருமஹா சந்நிதானம் ஜென்ம நட்சத்திர விழா, திருக்காவூர் முல்லைவனநாதர் திருக்கல்யாணம். பழனி ஸ்ரீஆண்டவர் உற்சவாரம்பம்.  புதுச்சேரி சப்பரத்தில் பவனி. காளையார்கோவில் ஸ்ரீஅம்பாள் கதிர் குளித்தல், தபசுக் காட்சி.

சித்திரை 30, மே 13, திங்கள்  

நவமி. வைகாசி விசாக பெருவிழாவில் சகோபுரக் காட்சி. நாகை காரோணர் இரவு ரிஷப வாகனம். கன்னிகா பரமேஸ்வரி பூஜை. இரவு முத்துச் சப்பரத்தில்  தேர்த்தடம் பார்த்தல். மின்விளக்கு அலங்காரத்துடன் பவனி. திருப்பத்தூர், திருத்தணிநாதர், காளையார் கோவில் சிவபெருமான் திருக்கல்யாண வைபவம்.

சித்திரை 31, மே 14, செவ்வாய்  

தசமி. சிறுவாச்சூர் ஸ்ரீமதுரகாளி அம்மனுக்கு காப்பு கட்டுதல். மானாமதுரை நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை. வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் பொங்கல்  பெருவிழா. இரவு வெள்ளி விருஷப சேவை. வெள்ளி சிம்மாசனத்தில் பவனி வரும் காட்சி. வாசவி ஜெயந்தி. காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன்  உற்சவாரம்பம்.

தொகுப்பு: ந.பரணிகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jayallithaa_mmeerrr

  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்

 • 27-01-2021

  27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • ramukudi

  குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!

 • autoooo_maaa

  சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!

 • vilaaaa_neeemm

  அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்