ஆண்டாள் கோயிலில் வசந்த உற்சவ விழா
2019-04-12@ 14:13:14

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில் வசந்த உற்சவ விழா நடைபெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில் வசந்த உற்சவ விழா ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் மிகச் சிறப்பாக நடைபெறும். 10 நாட்கள் நடைபெறும் இந்த வசந்த உற்சவம் நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாளான நேற்று முன்தினம் ஆண்டாள் ரெங்கமன்னார் வெள்ளிக்கிழமை குரடு மண்டபத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
தற்போது கோடைகாலம் என்பதால் ஆண்டாளுக்கும், ரங்க மன்னருக்கும் மலர்களால் ஆன சட்டை அணிவிக்கப்பட்டிருந்தது. இதை காண திருவில்லிபுத்தூர் மட்டுமன்றி ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர் என மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். வசந்த உற்சவத்திற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் செய்திருந்தனர்.
மேலும் செய்திகள்
கல்வியில் பெரியவர்...
மதுரை மீனாட்சி கோயில் ஆவணி பெருவிழா
ஸ்ரீ கிருஷ்ண அமுதம்- பகவத் கீதை உரை
த்வனி தீபிகா எனும் ரிக் வேதத்தின் விளக்கவுரை
ஆமுக்த மால்யத
வாசகர்களின் ஆன்மிக அனுபவம்
கிழக்கு உக்ரைனில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தும் ரஷ்யப்படை... ஒரேநாளில் 12 பேர் பலியான சோகம்
சோமாலியாவில் தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்.. பசி பட்டினியுடன் மக்கள்!!
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!