SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிறந்த தேதி பலன்கள் : மார்ச் 30 முதல் ஏப்ரல் 5 வரை

2013-12-11@ 16:00:48

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எந்தத் துறையில் பணியாற்றினாலும், உத்தியோகஸ்தர்கள் எல்லோருக்கும் மிகவும் சாதகமான வாரமுங்க. மனசில் தைரியமும், தன்னம்பிக்கையும்  வளரும். உங்களோட பணி வரைமுறைக்கு உட்படாத வேறு வேலைகளையும் எடுத்துச் செய்து அதில் வெற்றியும் பெறுவீங்க; இதனால மதிப்பும், மரியாதையும் கூடுமுங்க. சிலருக்கு உத்தியோக மாற்றம், கூடுதல் ஆதாயத்தோடு அமையுமுங்க. வியாபாரம், தொழில்ல ஈடுபட்டிருக்கறவங்களும், நூதனமான உத்தியால சாதனை புரிவீங்க. குடும்பத்ல தடைகள் நீங்கி, சுபவிசேஷங்கள் மனம் மகிழ நடந்தேறுமுங்க. தொலைதூரச் செய்திகள் நன்மைகளை சுமந்து வருமுங்க. சிலர் ஒவ்வாமையால பாதிக்கப்படுவீங்க; சிலருக்கு காது-மூக்கு-தொண்டை பகுதிகள்ல பிரச்னை வரலாம்.

இந்தத் தேதிப் பெண்கள் புதுப்பிக்கப்படும் உறவால் சந்தோஷம் அடைவீங்க. புதன்கிழமை பெருமாள்-தாயாரை துளசியால் அர்ச்சித்து வழிபடுங்க: வாழ்க்கை மணக்கும்.
 
2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

மனதில் இனம் புரியாத கவலையும், பயமும் தோன்றுமுங்க. இது அநாவசிய கற்பனையாலும், எதிர்பார்த்த சில விஷயங்கள் கைகூடாமல் போவதாலும் ஏற்படற விரக்தியின் வெளிப்பாடுதாங்க. பிராணாயாமம், தியானம், யோகா பயில்வதால, அலைபாயும் மனசு அடங்குமுங்க. உணவில் உப்பைக் குறைத்துக் கொள்வதும் நல்லதுங்க. யாருக்கும் எந்த உத்தரவாதமும் கொடுக்காதீங்க. சாதாரணமாகத்தான் பேசிகிட்டிருப்பீங்க; ஆனா, திடீ ர்னு ஆக்ரோஷப்பட்டு, கோபப்படுவீங்க; வாக்குவாதம் பண்ணுவீங்க. இதனால நஷ்டம் உங்களுக்குதாங்கறதைப் புரிஞ்சுக்கோங்க; அதோட உடல் நலமும் பாதிக்கப்படுமுங்க. பிறரைப் பார்த்தாவது புத்திசாலித்தனமாக நடந்துக்கோங்க.

இந்தத் தேதிப் பெண்கள் அதிகப் பேச்சால் உறவிலும், நட்பிலும் விரிசலை ஏற்படுத்திப்பீங்க. ஞாயிற்றுக்கிழமை பக்கத்துக் கோயில்ல அனுமன் சந்நதி முன் அமர்ந்து கொஞ்ச நேரம் தியானம் பண்ணுங்க; புத்தி, மனம் எல்லாம் தெளிவாகும்.

3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

நன்மைகள் கனிந்து வரும் காலமுங்க; இந்த சந்தர்ப்பங்களை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டியது உங்க சாமர்த்தியமுங்க. உத்தியோகத்ல இருக்கறவங்க மேலதிகாரிகளுடனும், சக ஊழியர்களுடனும் எதற்கும் வாக்குவாதம் பண்ணாதீங்க. வியாபாரம், தொழில்லயும் கூட்டாளிகளோட மனத்தாங்கல் வர வாய்ப்பு இருக்கறதால மூன்றாம் மனிதர் பேச்சுக்கு முக்கியத்துவம் தராதீங்க; கூட்டாளிகளை விட்டுக் கொடுக்காதீங்க. முதலீடு ஏதாவது செய்யறதானா வீட்டுப் பெரியவங்ககிட்ட யோசனை கேளுங்க. ஏற்கெனவே நரம்புப் பிரச்னை இருக்கறவங்க மருத்துவர் சொல்றதை வேதவாக்காக எடுத்துக்கணுமுங்க. சிலருக்கு சிறு சுளுக்கும் பெரிய சிக்கலில் கொண்டு விடலாம்.

இந்தத் தேதிப் பெண்கள் சேமிப்பை, எதிர்கால நன்மை கருதி தங்கத்தில் முதலீடு செய்யலாமுங்க. குலதெய்வ வழிபாட்டை கட்டாயம் மேற்கொள்ளுங்க. லட்சுமி நரசிம்மர் வழிபாடு நன்மைகளைப் பெருக்குமுங்க.

4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

தொட்டதெல்லாம் துலங்கும் இனிய காலகட்டமுங்க. முயற்சிக்கும் எல்லா விஷயங்களும் வெற்றியையே தருமுங்க. உத்தியோகத்தில் சிலருக்குப் பதவி  உயர்வுக்கான வாய்ப்பு தெரியுதுங்க; அதுக்கு உங்களை முழுமையாகத் தகுதிப்படுத்திக்கோங்க; அனாவசிய வம்பைக் குறைச்சுகிட்டு, ஆக்கபூர்வமாக  செயல்படுங்க. சோம்பலை முற்றிலுமாகத் தவிர்த்திடுங்க. குடும்பத்ல வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தை கவனிங்க. வேலை மிகுதியால, அந்தக்  குடும்பப் பொறுப்பைப் புறக்கணிச்சுடாதீங்க. சிலருக்கு வெளிநாட்டுப் பயண வாய்ப்பு அமையுமுங்க. சிலர் திடீர் அதிர்ஷ்டத்தால பல ஆதாயங்களைப் பெறுவீங்க. அதே சமயம் நட்பு வட்டாரத்ல எல்லா ரகசியத்தையும் பகிர்ந்துக்க வேண்டாங்க. ரத்தக் கொதிப்பையும், சர்க்கரை அளவையும் பரிசோதிச்சுக்கோங்க.

இந்தத் தேதிப் பெண்கள் சுபநிகழ்ச்சிகளால மகிழ்ச்சி அடைவீங்க. செவ்வாய்க்கிழமை பிள்ளையாரை வழிபடுங்க; ஆனைமுகன் அரவணைத்துக் காப்பான்.

5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

கொடுக்கல், வாங்கலில் ரொம்பவும் எச்சரிக்கையா இருக்கணுமுங்க. சாட்சி யாரையும் வெச்சுக்காம, அதீத நம்பிக்கையோட இதிலே நீங்க ஈடுபட்டீ ங்கன்னா, அது பெரிய கடன் பிரச்னையாகிடுமுங்க. குடும்பத்ல தேவையில்லாத ஈகோவால மன இறுக்கம் கொள்ளாதீங்க. உழைப்புக்கு ஏற்ற பாராட்டோ, செய்த உதவிக்கு நன்றியோ எதிர்பார்க்காதீங்க. அதெல்லாம் கேட்டுப் பெறுவதில்லீங்க. ஆனா, விரைவில உங்க நற்செயல்கள் எல்லாம்  பல நற்பலன்களை ஈட்டித் தருமுங்க. சிலருக்கு பணியிடத்தில் மன அழுத்தம் ஏற்படலாம். அதுக்காக இந்த வேலையை விட்டுவிட்டு வேறு  வேலையைத் தேட முயற்சிக்காதீங்க - இந்த காலகட்டம் உங்களுக்கு அனுபவ அறிவை ஊட்டக்கூடியதுங்க. சிலருக்கு உஷ்ண உபாதைகள்  ஏற்படலாமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ன்னு இருந்திடுங்க. வியாழக்கிழமை மகான் ராகவேந்திரரை வழிபடுங்க; மங்கலம் உண்டாகும்.

6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

அடுத்தடுத்து ஏற்படும் நல்ல விஷயங்கள் மனசுக்கு தன்னம்பிக்கையும், உற்சாகத்தையும் அள்ளித் தருமுங்க. அரசியல்வாதிகளுக்கு இது  அதிர்ஷ்டகரமான காலம். தலைமையின் நெருக்கத்தையும், அபிமானத்தையும் பெறுவீங்க. உயர் படிப்பில் சேரும் இந்தத் தேதி மாணவர்கள், தங்கள்  திறமையை நிரூபித்து சிறப்பு பெறுவீங்க. சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் ஏற்பாடாகுமுங்க. பணம் கொடுத்தல், வாங்குதலில் எந்த சிக்கலும் வராது ங்க. பூமியால் ஆதாயம் உண்டுங்க. விடுபட்ட குலதெய்வ வழிபாடு ஏதேனும் இருந்தா அதை உடனே நிறைவேற்றிடுங்க. ஏற்கெனவே முதுகு எ லும்பில் பாதிப்பு ஏற்பட்டிருந்தவங்க எச்சரிக்கையாக இருங்க. வாகனத்தில் ஏறும்போதும், இறங்கும்போதும் ரொம்பவும் கவனமா இருங்க; காலில்  அடிபட வாய்ப்பு இருக்கு.

இந்தத் தேதிப் பெண்கள் குடும்பத்ல ஒற்றுமைக்குக் காரணமா இருப்பாங்க. புதன்கிழமை பெருமாளை வழிபடுங்க; வாழ்வில் புத்தொளி பிறக்கும்.

7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

பிறருக்கு யோசனை சொல்லி, நீங்க வம்பிலே மாட்டிக்கக்கூடிய நேரமுங்க. அதனால யாரேனும் வந்து யோசனை கேட்டாலும், எதையாவது சொல்லி  மழுப்பிடுங்க; ‘நம்மளையும் மதிச்சு கேட்கறாங்களே‘ன்னு புளங்காகிதம் அடைஞ்சு, நீங்க சொல்ற யோசனைகள் ஏடாகூடமான பிரச்னைகளை உருவாக்கிடுமுங்க; கவனம். அதேபோல உங்க குடும்ப விவகாரங்கள்லேயும் மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்காதீங்க. சட்டத்துக்குப் புறம்பான  செயல்கள்ல கொஞ்சமும் ஆர்வம் காட்டாதீங்க. பிள்ளைகளோட உடல்நலத்துக்கு முக்கியத்துவம் கொடுங்க. அவங்க அலட்சியமா இருந்தாலும், நீங்க உங்க கடமையிலிருந்து விலகாதீங்க. எந்தப் பயணத்தையும் தள்ளிப்போடாதீங்க; உடனே மேற்கொண்டு உரிய பலன்களை அனுபவிங்க. சிலர்  வயிற்று உபாதையால் அவதிப்படுவீங்க.

இந்தத் தேதிப் பெண்கள் அக்கம் பக்கத்தாருடன் குறைவாகப் பேசுங்க. சனிக்கிழமை சிவனை வழிபடுங்க; சிக்கல் எல்லாம் தீரும்.

8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

யாரிடமும் வன்மம் பாராட்டாதீங்க. பழைய காலத்ல உங்களால உதவி பெற்றவங்க உங்களுக்கே எதிராகத் திரும்பறாங்கன்னா அதுக்கு என்ன  காரணம்ங்கறதை ஆராய்ச்சி செய்து பாருங்க. நீங்க செய்த உதவிக்கு மேலாகவே அவங்க உங்களுக்குப் பிரதி உபகாரம் பண்ணியிருக்கறதையும், கேட்பார் பேச்சைக் கேட்டு அவங்களை நீங்க வெறுக்க ஆரம்பிச்சதும் நினைவுக்கு வரும். இப்பவும் அதுக்காக வருத்தப்படறதுதான் சரியே தவிர, இன்னமும் வன்மத்தை நெஞ்சிலேயே வெச்சிருக்காதீங்க. புது முயற்சிகள்ல வெற்றி உண்டுங்க. சிலருக்குக் கிடைக்கக்கூடிய வெளிநாட்டு ஆதாயங்களை முறையாகப் பயன்படுத்திக்கணுமுங்க. சிலர் காது-மூக்கு-தொண்டை உபாதையால அவதிப்படுவீங்க. சிலருக்கு ஒவ்வாமையால சளித் தொந்தரவு வரும்.

இந்தத் தேதிப் பெண்கள் பழைய பகைமையை மறந்தால்தான் உறவில் சந்தோஷம் காண முடியும். செவ்வாய்க்கிழமை துர்க்கையை வழிபடுங்க; துயரங்கள் ஓடிப்போகும்.

9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

அடுத்தடுத்து நன்மைகள் அணிவகுத்து நிற்குதுங்க. இந்த சமயத்ல அதுக்கெல்லாம் முழுக் காரணமும் நீங்கதான்னு நினைச்சுகிட்டு தலையில கனத்தை ஏத்திக்காதீங்க. அதனால உங்களுக்கு உதவினவங்க, உங்களோட முன்னேற்றத்துக்கு வேலை செய்தவங்ககிட்ட உங்களால தன்மையாகப் பழக முடியாதுங்க. இது உங்க நன்மைகளோட மதிப்பை ரொம்பவும் குறைச்சுடுமுங்க. அவங்க ஒத்துழைப்பாலதான் உங்களுக்கு இந்த வெற்றி கிடைச்சிருக்குங்க. வார்த்தைகள் கடுமையானா விரோதம் வளரும், இனிமையானா நட்பு மலருமுங்க. இது உத்தியோகம், வியாபாரம், தொழில், குடும்பம், வெளிவட்டாரப் பழக்கம்னு எல்லா இடங்களுக்கும் பொருந்துமுங்க. பற்கள்ல பிரச்னை வரலாமுங்க. சிலருக்கு அஜீர்ணக் கோளாறு ஏற்படும்.

இந்தத் தேதிப் பெண்கள் யாரையும் அதிகாரம் பண்ணாதீங்க. வெள்ளிக்கிழமை சிவ தரிசனம் பண்ணுங்க; சிவம் காக்கும்.

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • erode-dmk-votes-2

  அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!

 • scotland-bonfire-festival

  ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி

 • stalin-corp-31

  மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 • long-whale-newyork

  35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

 • pak-blast-30

  பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்