SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி மதனகோபால சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

2019-03-19@ 15:42:04

பெரம்பலூர்: பெரம்பலூர் அரு ள்மிகு மதனகோபால சுவாமி திருக்கோ விலில் பங்குனி உத்திரப் பெருந்திரு விழாவை முன்னிட்டு திருக் கல்யாண வைபவம் நேற்றுமாலை நடந்தது. நாளை (20ம்தேதி) திருத்தேரோட்டம் நடக்கிறது. பெரம்பலூரில் மதனகோபால சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி கடந்த 11ம் தேதி அங்குரார்ப்பணம் நடந்தது. 12ம் தேதி கோயில் செயல் அலுவலர் மணி முன்னிலையில் கொடியேற்றம் நடந்தது.

13ம் தேதி சிம்ம வாகனம், 14ம் தேதி அனுமந்த வாகனம், 15ம் தேதி ஷேச வாகனம், 16ம் தேதி வெள்ளி கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. இந்நிலையில் நேற்று மாலை திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கோயில் செயல் அலுவலர் மணி, முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், கீத்துக்கடை குமார், பூக்கடை சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும் பெரம்பலூர், துறைமங்கலம், அரணாரை பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (20ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி தேருக்கான முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • formars29

    வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் வெடித்தது போராட்டம்!: இந்தியா கேட் அருகே டிராக்டரை தீயிட்டு எதிர்ப்பு..!!

  • coronadeath29

    கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் உலக நாடுகள்!: கொடிய தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது..!!

  • thee29

    பற்றி எரியும் காட்டுத்தீயால் கண்ணீரில் தத்தளிக்கும் கலிபோர்னியா மாகாணம்!: பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு..!!

  • vadothara29

    குஜராத் மாநிலம் வதோதராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி!: 10 பேர் இடிபாடுகளில் சிக்கினர்!!

  • dmk28

    புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தி.மு.க தலைமையில் தோழமைக் கட்சிகள் தமிழகம் முழுவதும் போராட்டம்: காஞ்சியில் ஸ்டாலின் பங்கேற்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்