நந்தியம்பெருமானுக்கு திருக்கல்யாணம் : ஆயிரக்கணக்கானோர் தரிசனம்
2019-03-18@ 14:33:57

அரியலூர்: அரியலூர் மாவட்டம் திருமழபாடியில் உள்ள வைத்தியநாதசுவாமி கோயிலில் நந்தியெம் பெருமானுக்கும், சுயசாம்பிகை தேவியாருக்கும் நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர். விழாவை முன்னிட்டு திருவையாறு அறம்வளர்த்த நாயகி உடனாய ஐயாறப்பர் தனது கோயிலில் இருந்து காலையில் மாப்பிள்ளை நந்தியெம்பெருமானுடன் புறப்பட்டு வைத்தியநாதன்பேட்டை வழியாக திருமழபாடிக்கு எழுந்தருளினார். இதனையடுத்து கோயில் முன்பு உள்ள மேடைக்கு மணமகன் திருநந்தியெம்பெருமானும், மணப்பெண் சுயசாம்பிகைதேவியாரும் அழைத்து வரப்பட்டனர். மேடையில் சுவாமிகள் இருவருக்கும் மஞ்சள், சந்தனம், விபூதி, திரவியப்பொடி, தேன், பன்னீர், பஞ்சாமிர்தம், தயிர், பால் போன்றவைகளால் சிறப்பு அபிஷேகம், தொடர்ந்து கும்ப நீரால் மகா அபிஷேகம் நடைபெற்றது.
மணமகன், மணமகள் நாதஸ்வர ஊஞ்சல் உற்சவத்துடன் மாலை மாற்றுதல், காப்பு கட்டுதல் நடைபெற்றது. தொடர்ந்து திருநந்தியெம்பெருமானும், சுயசாம்பிகை தேவியாருக்கும் புத்தாடைகள் அணிவிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நாதஸ்வர இன்னிசையுடன் மணமகன் நந்தியெம் பெருமான், மணமகள் சுயசாம்பிகை தேவியர் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவித்தார். நந்தி திருமணத்தை பார்த்தால் முந்தி திருமணம் என்ற ஜதீகத்தையொட்டி, திருமணமாகாத பெண்கள் மற்றும் ஆண்களும், ஆயிரக்கணக்கான பக்தர்களும் பெருந்திரளாக திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுவாமியை தரிசித்தனர்.
மேலும் செய்திகள்
அயோத்தியாப்பட்டணம் ராமர் கோயிலில் திருக்கல்யாணம்
களக்காடு வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம்
பாகம்பிரியாள் கோயிலில் சித்திரை திருக்கல்யாண வைபவம்
சக்கரபாணி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
வேளிமலை குமாரகோவிலில் முருகன் வள்ளி திருக்கல்யாணம்
பங்குனி உத்திரத்தையொட்டி திருச்செந்தூரில் முருகன் - வள்ளி திருக்கல்யாணம்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!