SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2019-03-01@ 17:35:03

மார்ச் 2, சனி  

ஏகாதசி. வேளூர் மூன்று தின சூரிய பூஜை ஆரம்பம். மதுரை ஸ்ரீகூடலழகர் புறப்பாடு கண்டருளல். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். ராமேஸ்வரம் ஸ்ரீசுவாமி அம்பாள் தங்க ரிஷபவாகன சேவை. திருவைகாவூர் ஸ்ரீசிவபெருமான் பவனி வரும் காட்சி.

மார்ச் 3, ஞாயிறு   

பிரதோஷம். திருவோண விரதம். மாசி 19, 20, 21ம் தேதிகளில் மாலை கோனேரிராஜபுரம் ஸ்ரீ உமாமகேஸ்வரர் ஆலயத்தில் சூரிய பூஜை. ராமேஸ்வரம் ஸ்ரீசுவாமி அம்பாள் முத்தங்கி சேவை. தங்கப் பல்லக்கில் பவனி. காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஜெயந்தி.

மார்ச் 4, திங்கள்  

மஹா சிவராத்திரி. சென்னை சுகப்பிரம்ம மஹரிஷி ஆசிரம தன்வந்திரி விழா. திருவண்ணாமலை ஹரிபிரம்மாதியர் அடிமுடி தேடியருளிய லீலை. காளஹஸ்தி, திருக்கோகர்ணம், ஸ்ரீசைலம், திருவைகாவூர் தலங்களில் ஸ்ரீசிவபெருமான் ரிஷப வாகனசேவை. திருப்பனந்தாள் ஸ்ரீ அருணஜடேஸ்வர ஸ்வாமிக்கு 4ம் காலத்தில் தாழம்பூ சாத்துதல். சிறுவாச்சூர் மதுரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம். நுங்கம்பாக்கம் வைதீக சமாஜம் மஹாருத்ரம். பானூர் திரெளபதி தீமிதி உற்சவம்.

மார்ச் 5, செவ்வாய்  

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப்பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. காளஹஸ்தி, திருக்கோகர்ணம், ஸ்ரீசைலம், திருவைகாவூர், ராமேஸ்வரம் தலங்களில் சிவபெருமான் தேரோட்டம். கோயம்புத்தூர் ஸ்ரீகோனியம்மன் திருக்கல்யாணம். ராமநாதபுரம் செட்டித்தெரு அன்னை முத்தாலம்மன் பவனி.

மார்ச் 6, புதன்  

சர்வ அமாவாசை. வாஸ்து (ந.நே.கா.10.06   10.42) கோச்செங்கட்சோழர். திருச்சேய்ஞ்ஞலூர் ஸ்ரீ சண்டேஸ்வர பட்டம். கோயம்புத்தூர் ஸ்ரீ கோனியம்மன் தேரோட்டம். ராமேஸ்வரம் ஸ்வாமி அம்பாள் காலை இந்திர விமானத்திலும், இரவு தங்க ரிஷபவாகன சேவை.

மார்ச் 7, வியாழன்  

செல்வமுத்துக்குமார சுவாமி திருவீதியுலா. கோயம்புத்தூர் ஸ்ரீகோனியம்மன் குதிரை வாகனத்தில் பரி வேட்டைக்கு எழுந்தருளல். சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

மார்ச் 8, வெள்ளி  

சந்திர தரிசனம். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். கோயம்புத்தூர் ஸ்ரீ கோனியம்மன் இந்திர விமானத்தில் தெப்ப உற்சவம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 01-12-2020

  01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • gurunanak30

  குருநானக் ஜெயந்தி!: சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் சிறப்பு வழிபாடு..!!

 • bushfire30

  ஆஸ்திரேலியாவில் 6 வாரங்களாக தொடர்ந்து பற்றி எரியும் புதர் தீ!: மூன்றில் ஒரு பகுதி எரிந்து சாம்பல்..!!

 • thiruvannamalai30

  அரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது!: புகைப்படங்கள்

 • vivasayigal30

  நைஜீரியாவில் தீவிரவாதிகள் அட்டூழியம்!: அறுவடைக்கு சென்ற 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுத்தறுத்து கொடூர கொலை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்