கிருஷ்ணகிரி நரசிம்ம சுவாமி கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி
2019-02-13@ 16:03:48

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணகிரி பழையபேட்டை,லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் பவித்ரோற்சவம் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. அதன்படி முதலாமாண்டு கும்பாபிஷேக நிறைவையொட்டி, நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு கலஸ்தாபனம், ஸ்ரீ விஸ்வக்சேன ஆராதனை, ஸ்ரீ பஞ்ச சூக்த ஹோமம், ஸ்ரீ சுதர்ஸன ஹோமம், ஸ்ரீ லட்சுமி குபேர ஹோமம் ஆகியவை நடந்தது. பின்னர் அன்று காலை 10 மணி முதல் பூர்ணாஹுதி, சிறப்பு அபிஷேகம், மகா மங்களாரத்தி, தீர்த்தப் பிரசாதம் ஆகியவை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு சிறப்பு யாகம், மகா மந்திரகள் ஓத, சிறப்பு அலங்காரத்துடன் லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் செய்திகள்
அயோத்தியாப்பட்டணம் ராமர் கோயிலில் திருக்கல்யாணம்
களக்காடு வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம்
பாகம்பிரியாள் கோயிலில் சித்திரை திருக்கல்யாண வைபவம்
சக்கரபாணி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
வேளிமலை குமாரகோவிலில் முருகன் வள்ளி திருக்கல்யாணம்
பங்குனி உத்திரத்தையொட்டி திருச்செந்தூரில் முருகன் - வள்ளி திருக்கல்யாணம்
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!