SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிறந்த தேதி பலன்கள் : மார்ச் 23 முதல் 29 வரை

2013-12-11@ 16:00:48

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

கொஞ்ச நாளா தடைப்பட்டுகிட்டிருந்த சுப விசேஷங்கள் மனம்போல நிறைவேறி மகிழ்ச்சி தருமுங்க.  சிலருக்கு பூர்வீக சொத்தில் அவங்களுக்குன்னு உரிய பங்கு சிரமமேயில்லாம கிடைச்சுடுமுங்க. உத்தியோகஸ்தர்கள் மேன்மை பெருவீங்க. உங்களோட பெயரும் புகழும் கூடும். மனை அல்லது வீடு விற்பது, வாங்குவதில் எச்சரிக்கையாக இருங்க. ஆவணங்கள் சரியா இருக்கான்னு பார்க்கறது ஒரு பக்கம். ஆனா, சிலரோட ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி, ஏதேனும் சட்ட ஓட்டையில் அதிக ஆதாயம் அடைய முடியுமான்னு யோசிக்க ஆரம்பிச்சுடாதீங்க; அதனால நஷ்டம்தான் அடைவீங்க. சிலருக்கு ரத்த நாளத்ல அடைப்பு ஏற்படலாம். சிறு உழைப்பிற்கும் அதிக மூச்சு வாங்கறா மாதிரி உபாதை அறிகுறி தெரிஞ்சா உடனே மருத்துவரைப் பார்த்திடுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் வீட்டுப் பெரியவங்க யோசனையைக் கேட்டுக்கோங்க. திங்கட்கிழமை சிவாலயம் போய் வழிபடுங்க. நல்ல திருப்பங்களை சந்திப்பீங்க.

2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு


சில விஷயங்கள் எதிர்பாராத வகையில, நீங்களே பிரமிக்கும்படி அமையுமுங்க. இதுக்கெல்லாம் உங்க உழைப்பு, விசுவாசம் எல்லாத்தையும்விட, கடவுள் அருள் உங்களுக்கு ஆதரவா இருக்கறதும் முக்கியமான காரணமுங்க. அதேசமயம், அலட்சியப் போக்கை மாத்திக்கோங்க. ‘சரியாகத்தான் இருக்கும்’னு ஊகிச்சு சில விஷயங்களை உங்க முழு கவனத்துக்குக் கொண்டுவராம செய்திடாதீங்க. யாரையும் நம்பி உங்க சொந்த விஷயங்களை ஒப்படைக்க வேண்டாங்க. நீங்களே முன்னிருந்து செய்து முடிங்க. உங்களை சுத்தி இருக்கறவங்க உங்களோட வளர்ச்சியில அக்கறை கொள்றதைவிட, பொறாமை கொள்வதுதான் அதிகமா இருக்கும், ரொம்பவும் கவனமா இருங்க. சிலருக்கு அஜீர்ணக் கோளாறு ஏற்படலாம்; சாத்வீகமான உணவையே எடுத்துக்கோங்க.

இந்தத் தேதிப் பெண்கள் பக்கம் பார்த்துப் பேசுங்க. செவ்வாய்க்கிழமை முருகனை வழிபடுங்க; முன்னேற்றம் உறுதி.

3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

உங்க தரப்பு வாதத்தை மென்மையாக ஆனால், உறுதியாக எடுத்து வையுங்க. உயர்ந்த குரல்ல, கோபம் தொனிக்கப் பேசினீங்கன்னா நியாயமாகவே இருந்தாலும் உங்க வாதத்துக்கு மதிப்பு இல்லாம போயிடுமுங்க. அதேபோல யாருடைய தவறையாவது சுட்டிக்காட்ட வேண்டிய சூழ்நிலை வந்தாலும் அதை தவறு செய்தவர் மனசு ஒடிஞ்சுபோவதுபோல கடுமையாகச் செய்யாதீங்க. வக்கீல் பொறுப்பிலே வழக்கு, சட்டச் சிக்கல்னு எதையாவது விட்டிருந்தீங்கன்னா, அதிலே நீங்க அனாவசியமா யோசனைகள் சொல்லி குழப்பாதீங்க; நீங்கதான் நஷ்டப்படுவீங்க. உத்தியோகத்ல ஆணவக் கோளாறால சில தவறுகள் ஏற்படுமுங்க; அதுக்கு சில சமரசங்களை நீங்க செய்துக்கவேண்டியிருக்கும். சிலர் கண் பரிசோதனை செய்துக்கறது நல்லதுங்க. பார்வைக் குறைபாடு, கண்ணில் அழுத்தம்னு ஏற்படலாம்.

இந்தத் தேதிப் பெண்கள் யோசிக்காம எந்த விஷயத்லேயும் இறங்காதீங்க. ஞாயிற்றுக்கிழமை சூரியனை வழிபடுங்க; மனசு தெளிவாகும்.

4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு


எதிர்பாராத செலவுகள் சிலசமயம் திக்குமுக்காட வைக்குமுங்க. செலவை சமாளிக்க சிலர் கடன் வாங்கவேண்டி வரலாம். பிள்ளைங்க சில பிரச்னைகளை வீட்டுக்குக் கொண்டு வரலாமுங்க. பிள்ளைங்ககிட்ட பொறுமையாகப் பேசி, அவங்களைத் திருத்தப் பாருங்க. சிலருக்கு உத்தியோகத்ல இடமாற்றம் வரலாம். சிலர் வீடு மாற்றலாம். தொழில், வியாபாரத்ல இருக்கற சிலருக்கு கிளைத் தொழில், கூடுதல் வியாபாரம்னும் சேரலாம். இதெல்லாம் ஆதாயம் தரக்கூடியதாகவே அமையுமுங்க. முதல்ல தோணற யோசனையையே செயல்படுத்துங்க; அடுத்தடுத்த யோசனைகளால குழப்பமடையாதீங்க. சிலருக்கு அலர்ஜி காரணமா நுரையீரல், சுவாச உறுப்புகள்ல பாதிப்பு வரலாம். ஒவ்வாததைக் கண்டுபிடித்து விலக்கிடுங்க. சிலருக்கு முதுகு எலும்பில் வலி தெரியலாம்.

இந்தத் தேதிப் பெண்கள் பிறர் பாராட்டறதுக்காக டாம்பீகமாக செலவு பண்ணாதீங்க; சேமிக்கப் பாருங்க. வியாழக்கிழமை மகான் ராகவேந்திரரை வழிபடுங்க; அவர் துதி பாடுங்க. குழப்பம் நீங்கி, மனம் ஒரு நிலைப்படும்.

5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

வெளிநாட்டிலேர்ந்து வரும் செய்திகள் உங்களுக்கு சந்தோஷம் தருமுங்க. எதிர்பார்த்திருந்த ஆதாயங்கள் வந்து சேரும். மேல் படிப்புக்காகவோ, அலுவலக ரீதியாகவோ அல்லது தொழில் தொடர்பாகவோ, சிலர் முதல் முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு இருக்குங்க. யாரையும் புறஞ்சொல்லாதீங்க. யார் மேலேயாவது உங்களுக்கு வருத்தம்னா, குறிப்பிட்ட நபர்கிட்ட நேரடியாகவே அதைத் தெரிவிச்சுடுங்க. அதை மூணாவது நபர்கிட்ட சொல்லப்போக, அவர் உங்க ரெண்டு பேருக்குமான பிணக்கிலே கிடைக்கற குரூர சந்தோஷத்துக்காக ஒண்ணுக்கு பத்தாகச் சொல்லி, உங்கப் பகையை ரொம்பவும் பற்ற வெச்சிடுவாருங்க; எச்சரிக்கையா இருங்க. சிலருக்கு காது-மூக்கு-தொண்டை பகுதிகள்ல தொந்தரவு வரலாமுங்க. சிலர் அஜீர்ணத்தால பாதிக்கப்படலாம்.

இந்தத் தேதிப் பெண்கள் அக்கம் பக்கத்து வீட்டாரிடம் அளவோடு பேசி பழகுங்க. சனிக்கிழமை சிவனை வழிபடுங்க; எல்லாம் சீராகும்.

6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவீங்க. சொந்த வீடுன்னா வீட்டின் உள் அமைப்பை உங்க வசதித் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்வீங்க. வாடகை வீட்டிலிருக்கறவங்க வீட்டு சொந்தக்காரர் அனுமதியோடு சில வசதிகளை செய்துப்பீங்க. அதேசமயம், உங்க தலைமையை அல்லது ஆதிக்கத்தை நிலைநாட்டறா மாதிரி அனாவசிய வாக்குவாதத்ல ஈடுபடாம இருக்கணுமுங்க. அப்படிச் செய்தா உங்களைப் பத்தி பிறருக்கு இருந்த மதிப்பு குறைய வாய்ப்பு இருக்குங்க. இந்தத் தேதி படைப்பாளிகளுக்கு புது அங்கீகாரம் கிடைக்குமுங்க. ஓவியர்கள் தம் படைப்புகளைக் கண்காட்சியாக வைக்கலாம்; சில எழுத்தாளர்களுக்கு அரசு அங்கீகாரம் கிடைக்கலாம். அஜீர்ணக் கோளாறு தெரியுதுங்க. சிலருக்கு கழிவுப்பாதையில் பாதிப்பு ஏற்படலாம்.

இந்தத் தேதிப் பெண்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்குமுங்க. ஞாயிற்றுக்கிழமையில சூரியனை வழிபடுங்க; வாழ்க்கை பிரகாசிக்கும்.

7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு


குடும்ப ஒற்றுமைக்கு முன்னுரிமை கொடுங்க. குடும்பத்துக்குள்ள ஏற்படக்கூடிய எந்த பிரச்னையையும் உங்களுக்குள்ளேயே பேசி தீர்த்துக்கறதுதாங்க நல்லது. நல்ல நண்பர் அல்லது உறவினரே ஆனாலும் அவங்களை மத்தியஸ்தம் செய்து வைக்கக் கூப்பிடாதீங்க. குலதெய்வ வழிபாடு விடுபட்டிருந்தா உடனே அதை முடிங்க. அதேபோல நீத்தார் கடன் ஏதேனும் பாக்கி இருந்தா அதையும் நிறைவேற்றிடறது நல்லதுங்க. இதற்குப் பிறகு உங்களுக்கு எல்லாமே சுமுகமாக நடைபெறுவதை பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீங்க. சிலருக்கு பல்லில் உபாதை வரலாம்.

இந்தத் தேதிப் பெண்கள் ஆறுதலைத் தேடி பிறரிடம் உங்க குடும்ப விஷயங்களைச் சொல்லிகிட்டிருக்காதீங்க. வாழ்க்கைத்  துணையின் உடல்நலத்தை அலட்சியப்படுத்தாதீங்க. உங்க ஆதரவும், அரவணைப்பும் அவர்களுக்குத் தேவை. புதன்கிழமை பெருமாளை வழிபடுங்க. குடும்பத்ல நிம்மதி நிறையும்.

8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு


மனசில் நிலவிவந்த குழப்பங்கள் எல்லாம் நீங்கிடுமுங்க. ‘அடச்சே, இதுக்குப் போயா இவ்ளோ கவலைப்பட்டோம்’னு நீங்களே வெட்கப்படறா மாதிரி கவலை ஏற்படுத்திய பிரச்னை வந்த சுவடு தெரியாம காணாமல் போயிடுமுங்க. பிறர் குற்றத்தை பூதக் கண்ணாடி வெச்சுகிட்டு பார்க்காதீங்க; அதுக்கு முன்னால உங்க குறைகளை, பலவீனங்களை ஆராய்ந்து அதைத் தவிர்க்கப் பாருங்க. அலுவலகத்ல சக ஊழியர்கள்கிட்டேயும் வியாபாரம், தொழில்ல விசுவாசமான கூட்டாளிகளையும் கடுமையாகப் பேசாதீங்க. யாரையும் பகைச்சுக்காதீங்க. சிறு துரும்பையும் பல் குத்த பயன்படுத்துங்க; அது உங்க கண்ணைக் குத்த விட்டுடாதீங்க. சிலருக்கு ரத்தத்ல தொற்றுக் கிருமி பரவ வாய்ப்பு இருக்குங்க. அந்த அறிகுறி தெரிஞ்சா உடனே பரிசோதனை பண்ணிக்கோங்க.

இந்தத் தேதிப் பெண்கள் ஏதேனும் ஒரு முடிவைத் தீர்மானமாக எடுங்க. சனிக்கிழமையில சிவபெருமானை வழிபடுங்க; காலம் உன்னதமாகும்.

9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

சேமிப்பு எவ்ளோ அவசியம்ங்கறதை சில எதிர்பாராத செலவுகள் உங்களுக்குச் சொல்லிக்கொடுக்குமுங்க. பண சேமிப்புக்கு அடிப்படை தேவை, நேர சேமிப்புங்கறதைப் புரிஞ்சுக்கோங்க. நேரத்தை அனாவசியமா வீணாக்காம ஆதாயம் தரக்கூடிய வகையில அதைப் பயன்படுத்துங்க. அதிகாலையில் உறக்கத்தை உதறி எழுந்திருங்க; அன்றன்றைய வேலைகளைத் திட்டமிட்டுக்கோங்க; எந்தப் பதட்டமும் இல்லாம ஒண்ணொண்ணா செய்து முடிங்க; வெற்றிக் கன்னி உங்களை அரவணைப்பாள். ரத்தத்ல சர்க்கரை அளவைப் பரிசோதிச்சுக்கோங்க. ரத்தக் கொதிப்பினால சிலருக்கு மயக்கம் ஏற்படலாம். மருத்துவரின் ஆலோசனையை அலட்சியப்படுத்தாதீங்க. வீட்டுப் பெரியவங்ககிட்ட எந்த விஷயத்துக்கும் யோசனை கேட்டுக்கோங்க. அவங்ககூட எந்த வாக்குவாதமும் வேண்டாங்க.

இந்தத் தேதிப் பெண்கள் அனாவசிய செலவுகளை அறவே நிறுத்திடுங்க. ஞாயிற்றுக்கிழமை அம்பிகையை வழிபடுங்க; ஆனந்தம் நிலைக்கும்.

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • erode-dmk-votes-2

  அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!

 • scotland-bonfire-festival

  ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி

 • stalin-corp-31

  மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 • long-whale-newyork

  35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

 • pak-blast-30

  பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்