பழநி மலைக்கோயிலில் கந்த சஷ்டி விழா : சண்முகர் திருக்கல்யாணம்
2018-11-15@ 14:59:49

பழநி: பழநி கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு நேற்று காலை நடந்த சண்முகர் திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 8ம் தேதி மலைக்கோயிலில் காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு மலைக்கோயிலில் வள்ளி தெய்வானை சமேதரராக சண்முகருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி துவங்கியது. திருக்கல்யாணத்தையொட்டி வள்ளி தெய்வானை சமேத சண்முகருக்கு 16 வகையான அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது. பட்டாடை அணிவிக்கப்பட்டு, பல்வேறு ஆபரணங்கள் பூட்டப்பட்டது. பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் முழங்க மங்கள நாண் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து மாலை மாற்றுதல் போன்ற திருமண சடங்குகள் நடத்தப்பட்டன.
பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம், வளையல் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டன. அன்னதானக்கூடத்தில் பக்தர்களுக்கு அறுசுவை திருமண விருந்து நடந்தது. நிகழ்ச்சியில் பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், சித்தனாதன் சன்ஸ் சிவநேசன், செந்தில்குமார், கந்தவிலாஸ் செல்வக்குமார், நவீன் விஸ்ணு, கண்பத் கிராண்ட ஹோட்டல் உரிமையாளர் ஹரிஹரமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நேற்றிரவு 7 மணிக்கு ரிஷப லக்னத்தில் பெரியநாயகி அம்மன் கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. டிஎஸ்பி விவேகானந்தன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும் செய்திகள்
அயோத்தியாப்பட்டணம் ராமர் கோயிலில் திருக்கல்யாணம்
களக்காடு வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம்
பாகம்பிரியாள் கோயிலில் சித்திரை திருக்கல்யாண வைபவம்
சக்கரபாணி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
வேளிமலை குமாரகோவிலில் முருகன் வள்ளி திருக்கல்யாணம்
பங்குனி உத்திரத்தையொட்டி திருச்செந்தூரில் முருகன் - வள்ளி திருக்கல்யாணம்
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை