SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிறந்த தேதி பலன்கள்(மார்ச் 16 முதல் 22 வரை)

2013-12-11@ 16:00:48

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

பொதுவாகவே எல்லாத் துறையிலும் இருக்கும் உத்யோகஸ்தர்கள் ரொம்பவும் எச்சரிக்கையாக நடந்துக்கணுமுங்க. சுலபமா யாரையும் நம்பிடாதீங்க;  யாரோட ஆசை வார்த்தைகளுக்கும் இணங்கிடாதீங்க. கிரகங்களோட கோளாறால இப்போதைக்கு நட்பு வட்டம் சரியில்லேங்கறதால ரொம்பவும் கவ னமா இருங்க. வியாபாரம், தொழில் துறைகள்ல போட்டிகளை சமாளிக்க மலிந்த உத்திகளை நாடாதீங்க. உங்க நேர்மை, நாணயம் எல்லாம், விரை வில் நல்ல அங்கீகாரம் பெறுமுங்க. சிலருக்கு ஏற்கெனவே இருந்த நரம்பு உபத்திரவம் அதிகரிக்கலாம். சிலர் ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள  வேண்டியிருக்கலாம். உணவில் கட்டாயம் கட்டுப்பாடு வேணுமுங்க. சிலருக்கு தொலைதூர செய்திகள் நன்மை சுமந்து வருமுங்க; சிலர் வெளிநாட்டுப்  பயணம் மேற்கொள்வீங்க.

இந்தத் தேதிப் பெண்களுக்குப் பேச்சு சுருங்கினால், நன்மைகள் விரியுமுங்க. ஆஞ்சநேயரை ஆராதனை செய்யுங்க; ஆனந்தம் நிலைக்கும்.

2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

ரத்த பந்த உறவினரோடு எந்த வாக்குவாதமும் வெச்சுக்காதீங்க. அது, குடும்ப கௌரவத்தைக் குலைக்கும் அளவுக்கும் போயிடலாம், எச்சரிக்கையா  இருங்க. குடும்ப விவகாரம் எதுக்கும் மூணாம் மனுஷர் ஆலோசனையைத் தேடிப் போகாதீங்க. ஏற்கெனவே உங்க மேல காழ்ப்புணர்ச்சியோட இருக்க றவங்களுக்கு இது அல்வா சாப்பிடற மாதிரி ஆகிடும். ரோஷப்பட்டு சில நல்ல வாய்ப்புகளை இழப்பதும் நேரிடுமுங்க. குடும்பத்ல மட்டுமல்லாம,  தொழிலிடத்திலும் எதுக்காகவும் யார் மேலேயும் கோபப்படாதீங்க. சிலருக்கு தடைகள் நீங்கி, குடும்பத்ல விசேஷங்கள் சந்தோஷமாக நிறைவேறுமுங்க.  உங்களோட நியாயமான வாதம்கூட அடாவடியாகக் கருதப்பட்டு உங்க சிறப்புகளைக் குறைச்சுடுமுங்க. நரம்புக் கோளாறு, ரத்தக் கொதிப்பை மருத்து வர் கவனத்துக்குக் கொண்டு போறது நல்லதுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் மௌன விரதம் பழகறது நல்லதுங்க. சிவபெருமானை வழிபடுங்க; உங்க கோபக்கண் திறக்காம இருக்கும்.

3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

இரட்டை நாக்குப் பேச்சை மொத்தமா நிறுத்திடறது நல்லதுங்க. மிச்சவங்களைப் பத்தி புறஞ்சொல்லி சந்தோஷப்பட்டீங்கன்னா, அது பூமராங்காகி உங் களை நோக்கியே திரும்புமுங்க. முகத்துக்கு நேரே நல்ல மாதிரி பேசறது, முதுகுக்குப் பின்னால விஷத்தைக் கக்கறதெல்லாம் வேண்டாமுங்க. உத் யோகத்ல சிலரோட எதிரியே, மேலதிகாரிகளை குளிர்விக்கறதாக நினைச்சு, அவர்கிட்ட மிச்சவங்களைப் போட்டுக் கொடுக்கற சுபாவம்தாங்க அது.  வியாபாரம், தொழிலிடங்கள்ல குறுக்கு வழியில போய் அரசாங்கம், வங்கி சலுகைகளைப் பெற முயற்சிக்காதீங்க. தாமதமானாலும், நேர்வழியில  போனீங்கன்னா, நிரந்தரமான ஆதாயத்தை அனுபவிக்க முடியுமுங்க. சிலருக்குக் கண்கள்ல உபாதை வருமுங்க; சிலர் பொதுவான நரம்புத் தளர்ச்சி யால அவதிப்படுவீங்க.

இந்தத் தேதிப் பெண்கள் பிறரை விமர்சிக்கும்போது கவனத்தோடு வார்த்தைகளை விடுங்க. பெருமாளையும் தாயாரையும் தரிசனம் பண்ணுங்க;  பொறுத்து, பூமியாள்வீங்க.

4, 13, 22. 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

அசையும், அசையாப் பொருள் சேர்க்கை ஏற்படுமுங்க. அதுக்கு முட்டுக்கட்டையான தடைகள் எல்லாம் விலகி, குடும்பத்ல எல்லாருக்கும் சந்தோஷம்  ஏற்படறா மாதிரி அமையுமுங்க. தொழில், உத்யோகம், வியாபார ரீதியா சிலர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வீங்க. இந்தத் தேதி இளைஞர்கள்  சிலர், மேல் படிப்பு அல்லது புது வேலையை முன்னிட்டு முதல் வாய்ப்பாக வெளிநாடு போகலாம். விடுபட்ட குலதெய்வ வழிபாட்டை உடனே நிறை வேற்றிட்டீங்கன்னா, உங்க முயற்சிகளுக்கு அந்த தெய்வம் உறுதுணையாக இருந்து முன்னேற்றங்களை அருளுமுங்க. உத்யோகத்ல மேலதிகாரியோடு  நல்லுறவு ஏற்பட்டு, எதிர்கால நன்மைகளுக்கு வழி கிடைக்குமுங்க. சிலருக்கு காது-மூக்கு-தொண்டை பகுதிகள்ல பிரச்னை வரலாம்; சிலர் ஒவ்வாமை யால பாதிக்கப்படலாம்.

இந்தத் தேதிப் பெண்கள் புதுமை யோசனைகளால பாராட்டு பெறுவீங்க. மகான் ராகவேந்திரரை வணங்குங்க; மகிழ்ச்சி அதிகரிக்கும்.

5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டியது ரொம்பவும் அவசியங்க. ஒருசில சந்தர்ப்பங்கள்ல நீங்க செய்திருக்கக்கூடிய அநாவசிய செலவுகளை சமாளிக்க றதுக்கு எதிர்பாராத வகையில ஏதாவது வருமானம் வந்திருக்கலாம்; அதேபோன்ற சந்தர்ப்பங்கள் அடுத்தடுத்து நிகழும்னு எதிர்பார்க்காதீங்க. ‘அட,  இந்தச் செலவால என்ன பெரிய நஷ்டம் வந்திடப்போகுது’ங்கற அலட்சியம், அத்தியாவசிய செலவு வந்து கதவைத் தட்டும்போது உங்களைக்  கையைப் பிசைய வைத்திடுமுங்க. க்ரெடிட் கார்டு பயன்படுத்தறவங்க, இந்த வாரம் அதை கண்காணாத இடத்ல வெச்சிடறது ரொம்பவும் நல்லது. குடும்பத்துப் பெரியவங்க யோசனை சிலசமயம் வேப்பங்காய் போலக் கசந்தாலும் அது நல்வாழ்வுக்கான மருந்துங்கறதை மறந்திடாதீங்க. சிலருக்கு  அஜீர்ணக் கோளாறு வரலாம்.

இந்தத் தேதிப் பெண்கள் பிறர் பாராட்டறதுக்காக தாம் தூம்னு செலவு பண்ணாதீங்க. லட்சுமி நரசிம்மரை வழிபடுங்க; லட்சியங்கள் ஈடேறும்.

6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

மகான்கள் தரிசனம், சிலருக்கு மனதில் புத்தொளியைக் கூட்டுமுங்க. எடுக்கும் முயற்சிகள் எல்லாம் லாபமாகவே முடியுமுங்க. எதிர்பார்த்த செய்திகள்,  எதிர்பார்த்தபடியே ஆதாயங்களோட வந்து சேருமுங்க. புதிதாக அறிமுகமாகும் வேற்று மதத்து நண்பர்கள் அல்லது வேற்று மொழி அன்பர்களால நன் மைகள் பெறுவீங்க. சமுதாயத்ல சில விஐபிகள் அறிமுகத்தால உங்களுக்குப் புது அங்கீகாரம் கிடைக்குமுங்க. இதை முறையாகப் பயன்படுத்திகிட்டு மேலும் புகழ் பெறுவது உங்க கையிலதாங்க இருக்கு. சிலர், குடும்பத்துத் திருமண நிகழ்ச்சிக்காக நகைகள் மற்றும் வேறு விலையுயர்ந்த  பொருட்களை வாங்குவீங்க. சிலருக்குக் கழிவுப் பகுதியில் பாதிப்பு ஏற்படலாம்; இதை அலட்சியமாக விட்டால், சிக்கல் அதிகமாகும்; உடனே மருத்துவ ரைப் பார்த்திடுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் தெய்வீக வழிபாட்டில் அதிக ஆர்வம் காட்டுவீங்க. விநாயகரை வழிபடுங்க; வேண்டியதையெல்லாம் பெறுவீங்க.

7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

புது இடங்களுக்குப் பயணம் செய்யறவங்க உங்க உடைமைகள்ல கவனமா இருங்க. அங்கே ஏற்படக்கூடிய புது நட்பு உங்களைக் கூடாப் பழக்கத் துக்கு இட்டுச் செல்லும்; நாசூக்காகத் தவிர்த்திடுங்க. அந்த நாட்டின் அப்போதைய சட்ட திட்டங்களை நல்லா தெரிஞ்சுகிட்டு எந்த அனாவசிய பிரச் னையும் உங்களுக்கு ஏற்பட்டுவிடாதபடி பார்த்துக்கோங்க. பிள்ளைகளோட உடல்நலத்தை கவனிங்க. அவங்க மருந்து எடுத்துக்க முரண்டு பிடிச்சாலும்  நீங்க கட்டாயப்படுத்தி எடுத்துக்க வையுங்க. விலையுயர்ந்த தங்கம், வெள்ளி அணிகலன்களையும் பாத்திரங்களையும் வீட்டில் வைத்திருப்பதைவிட  வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைக்கறது நல்லதுங்க. கழுத்து எலும்பு, முதுகு எலும்பில் சிலருக்கு உபாதை தெரியுமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் புது அறிமுகங்கள்கிட்ட நெருங்கிப் பழக வேண்டாங்க. அம்மனை வழிபடுங்க; முடிந்தால் புதன்கிழமை அம்மனுக்கு பச்சை  வண்ணப் புடவை சாத்துங்க; வாழ்க்கை பசுமையாகும்.

8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

உத்யோகத்ல இடமாற்ற வாய்ப்பு கிடைச்சா தயங்காம ஏற்றுக்கோங்க. இருக்கற இடமே சுகம்னு நாளைத் தள்ளறதைவிட, புது இடத்ல உங்க திற மையை நிரூபிச்சு, கூடுதல் ஆதாயங்களைப் பெற முயற்சி பண்ணுங்க. சிலருக்கு இப்போதைய வேலையில மேலதிகாரிகளால சில பிரச்னைகள் வர லாம்; அதனாலும் இடமாற்றம் ஏற்படலாம்; இதுக்காகவும் வருத்தப்படாதீங்க; புது இடம் உங்களை ஆதரவா அரவணைக்குமுங்க. இதனால் உங்களை  பத்தி நாலு பேருக்குத் தெரியவந்து, உங்க திறமைக்கேத்த பதவியும் பெருமையான பொறுப்பும் கிடைக்கறதுக்கும் சான்ஸ் இருக்குங்க. வியாபாரம், தொழில்ல புது உத்திகளால பிறர் பிரமிக்கும்படி வளர்வீங்க. சிலருக்கு தலைவலி, தலைச் சுற்றல்னு ஏற்படுமுங்க. சிலருக்கு முதுகெலும்பில் வலி தெரியும்.

இந்தத் தேதிப் படைப்பாளிப் பெண்களுக்கு, பாராட்டும், விருதும் கிடைக்கலாமுங்க. துர்க்கையை வழிபடுங்க; அன்னை கவசமாகக்
காப்பாங்க.

9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

கொடுக்கல், வாங்கல் விஷயத்ல ஜாக்கிரதையா இருங்க. வெறும் வாய் வார்த்தையா வாக்கு கொடுக்கறதோ, வாங்கறதோ வேண்டாங்க; எழுத்துமூல  உத்தரவாதம்தான் சரி. அல்லது கைபரிமாற்றத்ல தொகையின் மதிப்பு குறைவாகவே இருக்குமானா, அதுக்கும் யாரையாவது சாட்சியா வெச்சுக்கறது  நல்லதுங்க. அதேபோல கடன் வாங்குவதானாலும், திருப்பிக் கொடுக்கக்கூடிய உங்களோட சக்தியை உத்தேசிச்சே வாங்குங்க. உத்யோகத்ல பிறரோட  பசப்பு வார்த்தைகளுக்கு மயங்கிடாதீங்க. எந்தக் காரணம் கொண்டும் யாருக்கும் உங்க பொறுப்புக்கும் மீறிய சலுகைகளை காட்டாதீங்க. அரசாங்கத் துக்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள், வரிகள் எதையும் நிலுவை வைக்காதீங்க. அதிக உழைப்பால அயர்ச்சி, உடல்வலின்னு சிலருக்கு ஏற்படு முங்க.

இந்தத் தேதிப் பெண்கள் அக்கம்பக்கத்ல கைமாத்து எதுவும் வாங்காதீங்க. சிவன் கோயில்ல இருக்கற பிள்ளையாரை வழிபடுங்க; சீராகும் வாழ்க்கை.

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • erode-senthilbalaji-8

  சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!

 • athisayangal

  நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்

 • perunad

  பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!

 • turkeydeath11

  துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!

 • lantern-festival-china

  உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்