நாட்டார் மங்கலத்தில் விஜயதசமி பண்டிகை : பெருமாள் வீதி உலா
2018-10-22@ 14:58:11

பாடாலூர்: ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் ஆயுதபூஜை மற்றும் விஜய தசமி பண்டிகையை முன்னிட்டு பெருமாள் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் ஆயுதபூஜை மற்றும் விஜய தசமி பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீ பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
இந்த விழாவில் முக்கிய சிறப்பு நிகழ்வாக பெருமாள் கோயில் முன்பு தென்னங்கிற்றில் பந்தல் அமைந்து வாழைமரம் கட்டி அதற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு அம்பு போட்ட பின்பு இரவு ஸ்ரீ வரதராஜ் கம்பபெருமாள் சுவாமியானது அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் திருவீதி உலா நடைப்பெற்றது. கிராம பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்துவழிபாடு நடத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
பழ தல விருட்சங்கள்
ஆதவன் வழிபட்ட அற்புத ஆலயங்கள்
அனுமனின் அருள் பெருக்கும் அற்புத ஆலயங்கள்
அஞ்சு மலை வாசன் ஐயப்பனின் ஆலயங்கள்
புத்தாண்டன்று தரிசிக்க வேங்கடவனின் தலங்கள்
சனி பகவான் பரிகார தலங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!