SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நவராத்திரி விழா : 10 நாட்களும் பூஜை செய்யும் முறைகளும்

2018-10-10@ 14:45:24

அகிலமெல்லாம் காக்கும் அம்பிகையை நவராத்திரி தினங்களில் ஆராதனை செய்தால் அடைய முடியாததே இவ்வுலகில் இல்லை என்பது சான்றோர் வாக்கு.     

முதல் நாள்


வடிவம்: மகேஸ்வரி (மது கைடபர் என்ற அசுரனை அழித்தவள்)
பூஜை: 2 வயது சிறுமியை குமாரி அவதாரத்தில் வணங்க வேண்டும்.
திதி: பிரதமை
கோலம்: அரிசி மாவால் பொட்டுக் கோலம் போட வேண்டும்.
பூக்கள்: மல்லிகை, சிவப்புநிற அரளி, வில்வ பூக்களால் அர்ச்சனை செய்யவேண்டும்.
நைவேத்தியம் : வெண்பொங்கல், சுண்டல், பழம்,எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரைப் பொங்கல், மொச்சை, சுண்டல், பருப்பு வடை.
ராகம்: தோடி ராகத்தில் பாட வேண்டும். நவ துர்க்கைகளில் சைல புத்ரியை வணங்க வேண்டும்.
பலன்: வறுமை நீங்கும், வாழ்நாள் பெருகும்.

இரண்டாம் நாள்

வடிவம்: ராஜராஜேஸ்வரி (மகிஷனை வதம் செய்ய புறப்படுபவள்)
பூஜை: 3 வயது சிறுமியை கவுமாரி வடிவமாக வணங்க வேண்டும்.
திதி: துவிதியை
பூக்கள்: முல்லை, துளசி, மஞ்சள்நிற கொன்றை, சாமந்தி, நீல சம்பங்கி பூக்களால் பூஜிக்க வேண்டும்.
நைவேத்தியம்: புளியோதரை, எள் பாயாசம், தயிர்வடை, வேர்க்கடலைசுண்டல், எள் சாதம்.
ராகம்: கல்யாணி ராகத்தில் கீர்த்தனைகள் பாடலாம். நவதுர்க்கைகளுள்  பிரம்மசாரிணியை  வணங்க வேண்டும்.
கோலம் : கோதுமை மாவினால் கோலம் போட வேண்டும்.
பலன்: நோய்கள் நீங்கும், உடல் ஆரோக்கியம் பெருகும்.

மூன்றாம் நாள்


வடிவம் : வாராகி (விஷங்களை அழித்தவள்)
பூஜை: 4 வயது சிறுமியை கல்யாணி வேடத்தில் பூஜித்து வணங்க வேண்டும்.
திதி : திருதியை
கோலம்: மலர்களால் கோலம் போட வேண்டும்.
பூக்கள்: செண்பக மொட்டு, குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
நைவேத்தியம்: கோதுமை சர்க்கரைப் பொங்கல், காராமணி சுண்டல்.
ராகம்: பாட வேண்டிய ராகம் காம்போதி. நவதுர்க்கைகளில்  சந்த்ரகண்டாவை பூஜிக்க வேண்டும்.
பலன்: தன தானியங்கள்  பெருகும் வாழ்வு சிறப்பாக அமையும்.

நான்காம் நாள்


வடிவம்: மகாலட்சுமி (சிம்மாசனத்தில் அமர்ந்த திருக்கோலம்)
பூஜை: 5 வயது சிறுமியை ரோகிணி வேடத்தில் பூஜிக்க வேண்டும்.
திதி: சதுர்த்தி.
கோலம்: அட்சதையால் படிக்கட்டு போல கோலமிட வேண்டும்.
பூக்கள்: செந்தாமரை, ரோஜா மற்றும் ஜாதிமல்லிப் பூக்களால் அர்ச்சிக்கவேண்டும்.
நைவேத்தியம்: தயிர் சாதம், அவல் கேசரி, பால் பாயாசம், கற்கண்டு பொங்கல், கதம்ப சாதம், உளுந்துவடை, பட்டாணி சுண்டல்.
ராகம்: பைரவி ராகத்தில் பாடலாம்.நவதுர்க்கைகளுள்  கூஷ்மாண்டாவை பூஜிக்கவேண்டும்.
மாலை : கஸ்தூரி மஞ்சள், முத்து போன்றவற்றால் மாலை செய்து போடலாம்.
பலன்: கடன் தொல்லைகள் தீரும்.

ஐந்தாம் நாள்


வடிவம்: மோகினி (சும்ப நிசும்பனின் தூதர்கள் தூது போன நாள்)
பூஜை: 6 வயது சிறுமியை வைஷ்ணவி வேடத்தில் பூஜிக்க வேண்டும்.
திதி: பஞ்சமி.
கோலம்: கடலை மாவால் பறவை கோலம் போட வேண்டும். வாசனை தைலத்தால் அலங்கரிக்க வேண்டும்.
பூக்கள்: கதம்பம், மனோரஞ்சிதம்  போன்ற பூக்களால் பூஜிக்க வேண்டும்.
நைவேத்தியம் : சர்க்கரைப் பொங்கல், கடலைப் பருப்பு வடை, பாயாசம், தயிர் சாதம், பால் சாதம்,  கடலைப்பருப்புசுண்டல்.
ராகம்: பஞ்சமாவரண கீர்த்தனைகள் பாட வேண்டும். பந்துவராளி ராகமும் பாடலாம். நவதுர்க்கைகளுள்  ஸ்கந்தமாதாவை பூஜிக்க வேண்டும்.
பலன்:நாம் விரும்பும்அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.

ஆறாம் நாள்

வடிவம் : சண்டிகாதேவி (நாகசனத்தில் அமர்ந்திருக்கும் கோலம்)
பூஜை: 7 வயது சிறுமியை இந்திராணி, காளிகாவாக நினைத்து பூஜிக்க வேண்டும்.
திதி: சஷ்டி.
கோலம்: கடலை மாவினால் தேவி நாமத்தை கோலமிட வேண்டும்.
பூக்கள்: பாரிஜாதம், விபூதிப் பச்சை, செம்பருத்தி, சம்பங்கி,
நைவேத்தியம்: தேங்காய் சாதம், தேங்காய் பால்பாயாசம், ஆரஞ்சு பழம், மாதுளை, பச்சைப்பயறு சுண்டல், கதம்ப சாதம்.
ராகம்: நீலாம்பரி ராகத்தில் பாடலாம். நவ துர்க்கைகளுள்  காத்யாயனியை பூஜிக்க வேண்டும்.
பலன்: வழக்குகளில் வெற்றி உண்டாகும். கவலைகள் நீங்கி பொருட்கள் சேரும்.

ஏழாம் நாள்

வடிவம்: சாம்பவி துர்க்கை (பொற் பீடத்தில் ஒரு பாதம் தாமரை மலரில் இருக்க வீணை வாசிக்கும் தோற்றம்)
பூஜை: 8 வயது சிறுமியை பிராம்ஹி மகா சரஸ்வதி, சுமங்கலியாக கருதி பூஜிக்க வேண்டும்.
திதி: சப்தமி.
கோலம்: நறுமண மலர்களால்
கோலமிட வேண்டும்.
பூக்கள்: தாழம்பூ,  தும்பை, மல்லிகை, முல்லை.
நைவேத்தியம் : எலுமிச்சம் பழசாதம், பழ வகைகள், வெண்பொங்கல்,கொண்டக்கடலை சுண்டல், பாதாம் முந்திரி பாயாசம், புட்டு.
ராகம்: பிலஹரி ராகத்தில் பாடி பூஜிக்க வேண்டும். நவ துர்க்கைகளுள் காளராத்ரியை பூஜிக்க வேண்டும்.
பலன்: வேண்டும் வரம் அனைத்தும் கிடைக்கும்.

எட்டாவது நாள்

வடிவம்: நாரஸிம்ஹி (கரும்பு வில்லுடன் சுற்றிலும் அணிமா முதலிய அஷ்ட சக்திகளுடன் ரக்த பீஜனை  வதைத்த வடிவம்)
பூஜை : 9 வயது சிறுமியை மகா கவுரியாக பூஜிக்க வேண்டும்.
திதி: அஷ்டமி.
கோலம்: தாமரை கோலம்
பூக்கள்: மருதோன்றி, சம்பங்கி பூக்கள், வெண்தாமரை, இருவாட்சி.நைவேத்தியம்: பால்சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை சுண்டல்.
ராகம்: புன்னகை வராளி ராகத்தில் பாடி பூஜிக்கலாம். நவதுர்க்கைகளுள் மகாகெளரியை பூஜிக்க வேண்டும்.
பலன்: நமக்கு இஷ்ட சித்தி உண்டாகும்.

ஒன்பதாம் நாள்

வடிவம்: பரமேஸ்வரி, சுபத்ராதேவி (கையில் வில், பாணம், அங்குசம், சூலத்துடன் தோற்றம்)
பூஜை: 10 வயது சிறுமியை சாமுண்டி வடிவில் வழிபட வேண்டும்.
திதி: நவமி
கோலம்: வாசனைப் பொடிகளால் ஆயுதம் போன்ற கோலம் போட வேண்டும்.
பூக்கள்: தாமரை, மருக்கொழுந்து, துளசி, வெள்ளை மலர்கள்.
நைவேத்தியம்: சர்க்கரை பொங்கல், உளுந்து வடை, வேர்க்கடலை, சுண்டல், கடலை, எள் பாயாசம், கேசரி, பொட்டுக்கடலை, எள் உருண்டை.
ராகம்: வசந்த ராக கீர்த்தனம் பாடி தேவியை மகிழ்விக்க வேண்டும்.  நவ துர்க்கைகளுள் ஸித்திதாத்ரியை பூஜிக்க வேண்டும்.
பலன்: ஆயுள், ஆரோக்கியம் பெருகும். சந்ததிகள் சவுக்கியமாக இருப்பார்கள்.

பத்தாவது நாள்


வடிவம்: அம்பிகை. இவளுக்கு விஜயா என்ற பெயரும் உண்டு (ஸ்தூல வடிவம்)
திதி: தசமி.
பலன்: புரட்டாசி மாதம் சுக்ல பட்சமியே விஜய தசமி. மூன்று சக்திகளும், தீய சக்தியை அழித்து, வெற்றி கொண்டு அனைவருக்கும் நன்மைகளை அள்ளித்தந்து அருள் பாலிக்கும் சுபநாள். இன்று தொடங்கும் எல்லா காரியங்களும் வெற்றி மீது வெற்றி பெறும்.
நைவேத்தியம்: பால் பாயாசம், காராமணி சுண்டல், இனிப்பு வகைகள்.
பூக்கள்: வாசனைப் பூக்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • israel-desert-24

    இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

  • Ecuador_protests

    ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

  • pondi-scl-23

    புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

  • admk-23

    50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

  • Goat_Pakistan

    பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்