முள்ளு முறுக்கு
2018-10-10@ 14:39:20

என்னென்ன தேவை?
பச்சரிசி 3 கப்,
கடலைப் பருப்பு 1 கப்,
பயத்தம் பருப்பு 1/4 கப்,
எள் தேய்த்து காய்ந்தது 1/2 டீஸ்பூன்,
சீரகம் 1/2 டீஸ்பூன்,
கட்டி பெருங்காயம் சிறிதளவு,
வெண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு தேவைக்கு,
எண்ணெய் பொரிப்பதற்கு.
செய்முறை:
சுத்தம் செய்து கழுவி காய வைத்த அரிசி, கடலைப் பருப்பு, பயத்தம் பருப்பு மூன்றையும் மெஷினில் மாவாக அரைத்துக் கொள்ளவும். இந்த மாவில் உப்பு, பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்து ஊற்றவும். பிறகு வெண்ணெய், எள், சீரகம், தேவையான தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்துக்கு பிசையவும். முள் முறுக்கு அச்சில் தேவையான மாவைப் போட்டு காய்ந்த எண்ணெயில் பிழியவும். பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். மாவை கொஞ்சம் கொஞ்சமாக கலந்து செய்யவும்.
மேலும் செய்திகள்
கூத்தனூர் சரஸ்வதி
கவலைகள் போக்கும் காந்திமதி
கோதுமை அல்வா
திருவருள் பொழியும் தேவிமகாத்மிய தேவியர்
அலங்கார ரூபிணி அன்னை புவனேஸ்வரி
மொச்சை சுண்டல்
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை