SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மொச்சை சுண்டல்

2018-10-10@ 14:32:07

என்னென்ன தேவை?

மொச்சை - 1/4 கிலோ,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - 2 டீஸ்பூன்.

தாளிக்க...

கடுகு, தனியா - தலா 1/2 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 6,
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
தேங்காய்த்துருவல் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?


வெறும் கடாயை சூடாக்கி மொச்சையை லேசாக வறுத்து 8 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் போட்டு உப்பு சேர்த்து 3-4 விசில் விட்டு வேகவைத்து வடித்து கொள்ளவும். கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்தமிளகாய், தனியா சேர்த்து வறுத்து, ஆறியதும் சிறிது உப்பு போட்டு பொடித்துக் கொள்ளவும். பின்பு அதே கடாயில் மீதியுள்ள எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து வெந்த மொச்சை சுண்டலில் கலந்து அதனுடன் பொடித்த பொடி, தேங்காய்த்துருவல் கலந்து பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Coimbatore jallikattu

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை செட்டிபாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி படங்கள்.

  • pipin-statue-21

    குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்..!!

  • rose-shaped-coral-21

    என்ன ஒரு அழகு!!!: டஹிடி தீவின் கடலுக்கு அடியே சுமார் 3 கி.மீ நீளமுள்ள ராட்சத ரோஜா வடிவ பவளப்பாறைகள் கண்டுபிடிப்பு..!!

  • Trichy_Thiruverumbur_Koothappar_Jallikattu

    திருச்சி திருவெறும்பூர் கூத்தப்பர் பகுதி ஜல்லிகட்டு போட்டி: சீறி பாயும் காளைகள்

  • Marinaa

    சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நேற்று நடைபெற்ற அணிவகுப்பு ஒத்திகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்