SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லால்குடி அருகே அரியூர் வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

2018-10-04@ 14:00:45

லால்குடி: லால்குடி அருகே அரியூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயிலில் நடந்த திருக்கல்யாண விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.  லால்குடி அருகே அரியூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வரதராஜ பெருமாள் திருக்கல்யாண மஹோத்சவம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டால் திருமணமாக ஆண் பெண்களுக்கு திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.  இதனை தொடர்ந்து நேற்று காலை விருச்சிக லக்னத்தில் திருக்கல்யாண மஹோத்சவம் நடந்தது.

இதனையொட்டி, கோயில் மூலவர் லெட்சுமிநாராயண பெருமாள் தேவி பூதேவிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு மாப்பிள்ளை அழைப்புடன் சீர்வரிசை எடுத்தல், எஜமான சங்கல்ப்பம், முளைப்பாறி இடுதல், மாலை மாற்றுதல், கன்னிகாதானம் நடந்தது. இதனை தொடர்ந்து, திருக்கல்யாணம். மாப்பிள்ளை தாரணம், தீபாராதனை நடத்தப்பட்டது.

திருக்கல்யாணத்தில் அரியூர், அன்பில், செங்கரையூர், களத்தில்வென்றார்பேட்டை, திண்ணியம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். திருமணம் ஆகாத ஆண்கள் பெண்கள் இரு மாலையோடு வந்து திருமண பிரார்த்தனை செய்துகொண்டு சுவாமிக்கு திருக்கல்யாணத்தில் அணிவித்த மாலையை தாங்கள் பெற்றுக்கொண்டு சென்றனர். ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் திருமண விருந்து நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் குருக்கள் கிராம மக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • etna-volcano-23

    இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!

  • sandjakki11

    "மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!

  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்