SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிறந்த தேதி பலன்கள் : மார்ச் 9 முதல் 15 வரை

2013-12-11@ 16:00:48

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

வீட்டு மனை அல்லது விவசாய நிலம் வாங்குவது-விற்பது சம்பந்தமான விஷயத்ல ரொம்பவும் எச்சரிக்கையா இருங்க. அதிக லாபத்துக்காக சட்டத்துக்குப் புறம்பான உத்திகள்ல இறங்க முயற்சிக்காதீங்க. சகோதர உறவுகளுடன் சாதாரணமா ஆரம்பிக்கும் பேச்சு, பெரிய விவகாரமாக மாறலாம்; அதனால கவனமாகப் பேசுங்க. உத்யோகஸ்தர்களும் ரொம்பவும் விழிப்பா இருக்கணுமுங்க. உங்க மேல பொறாமை கொண்ட சிலர் உங்க பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பாங்க. அதுக்கு இடம் கொடுக்காதீங்க. அன்றன்றையப் பணிகளை அன்றன்றே முடிச்சுடுங்க; தள்ளிப் போடாதீங்க. ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையைப் பரிசோதனை செய்துக்கோங்க.

இந்தத் தேதிப் பெண்கள் குடும்ப ரீதியாகத் தாங்கள் மேற்கொண்டு வரும் விரதங்கள், பூஜைகளை விடாமல் தொடருங்க. செவ்வாய்க்கிழமை துர்க்கையை வழிபடுங்க; துர்க்கை காயத்ரி படிங்க; துஷ்டர்கள் தூர விலகிப் போவாங்க.

2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

‘சிக்கலும் தடைகளும் எங்கதான் இல்லே?’ன்னு உங்க பிரச்னைகளுக்கு நீங்களாக சமாதானம் தேடிக்காதீங்க. ‘எனக்கு எந்த சிக்கலும் வரக்கூடாது’ங்கற மனவுறுதியோடு பணியில ஈடுபடுங்க. சிலருக்கு அரசாங்கம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நிவர்த்தி ஆகிடுமுங்க. புதுமையா சிந்திச்சு, புதுப் புகழ், உயரத்தை எட்டுவீங்க. உத்யோகஸ்தர்கள் சிறப்புகள் பெறுவீங்க. வேலை இடமாற்றத்துக்கோ அல்லது புது வேலைக்கோ வாய்ப்பு கிடைச்சா, உடனே பயன்படுத்திக்கோங்க. வியாபாரம், தொழில் இனங்கள்லாம் நல்ல வளர்ச்சி காணுமுங்க. ஏற்கெனவே உணவுக்குழாய், கழிவுப்பாதையில் உபத்திரவம் இருக்கறவங்க அதுக்கான சிகிச்சை, மருந்துகளைத் தொடர்ந்து, தட்டாம எடுத்துக்கோங்க. சிலருக்கு இதயத்ல பாதிப்பு ஏற்படலாம்.

இந்தத் தேதிப் பெண்கள், யாருக்கும் எந்த யோசனையும் தராதீங்க. செவ்வாய்க்கிழமை புற்றுள்ள அம்மன் கோயிலுக்குப் போய்வாங்க. ராகு காயத்ரி படிங்க; சிறப்புகள் மேலோங்கும்.

3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

மனசிலே திடீர், திடீர்னு பயம், பழைய தர்மசங்கட சம்பவங்கள்ல உங்க பங்கு பற்றிய குற்ற உணர்வு எல்லாம் அப்பப்ப மனசை அலைக்கழிக்குமுங்க. ‘நடந்தது நடந்துபோச்சு’ன்னு அந்த சம்பவங்களை மறந்திட்டு, இனியும் யாருக்கும் எந்த வருத்தமும் ஏற்படாதபடி நடந்துக்கப் பாருங்க. இது குடும்பம், வெளிவட்டாரப் பழக்கம், தொழிலிடம்னு எல்லா பிரிவுகளுக்கும் பொருந்துமுங்க. பிராணாயாமம், தியானம், யோகான்னு பயிற்சி செய்து மனசை ஒருநிலைப்படுத்திக்கோங்க. பூமியால் ஆதாயம் உண்டுங்க. பிள்ளைகளுக்கு இது அனுகூலமான காலகட்டம்; அவங்க அதை சரியாகப் பயன்படுத்திக்க உதவுங்க. ஒவ்வாமை பிரச்னை சாதாரண ஜலதோஷமாகத்தான் ஆரம்பிக்கும்; ஆனா, பெரிய பிரச்னையில் கொண்டுவிடுமுங்க; எச்சரிக்கை.

இந்தத் தேதிப் பெண்கள் சிலர், பிறருக்கு உதாரணப் பெண்மணியாக விளங்குவீங்க. வெள்ளிக்கிழமை விநாயகருக்கு அறுகம்புல் சாத்தி வழிபடுங்க; அற்புத வாழ்வு அமையும்.

4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

சமீபத்திய சாதனைகள் உங்க மனசிலே உறுதியை வளர்க்குமுங்க. அதே சமயம் தலையில கனத்தை ஏத்திக்காதீங்க. சாதனைகளும் அதன் அனுகூலங்களும் உங்க பேச்சில் கூடுதல் கண்ணியத்தை வளர்க்கணுமுங்க. அதேசமயம், சில முக்கியமான விஷயங்கள்ல, நீங்க லாபப்படாவிட்டாலும் வளைஞ்சு கொடுக்கப் பாருங்க. எந்த  பலவீன சந்தர்ப்பத்திலும் அசட்டு தைரியத்தோடு செயல்படாதீங்க. சிலருக்கு உத்யோக இடத்ல சில சங்கடங்கள் வரலாம்; இது, தகாத நட்பின் விளைவாகவும் இருக்கலாம். ஆனா, சீக்கிரமே அந்த பிரச்னைகள்லாம் தீர்ந்து, சுற்றம், சூழல், சமுதாயத்ல மரியாதை கிடைக்குமுங்க. என்றாலும் நண்பர்கள் தேர்வில் மட்டும் ஒரு தரத்துக்கு இரண்டு தரமாக யோசிங்க. ரத்தத்ல கொழுப்பு, கலப்பட உணவால் பிரச்னைன்னு வருமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் தைரியமாக செயல்பட்டு வெற்றி பெறுவீங்க. புதன்கிழமை பெருமாளை தரிசனம் செய்ங்க; பேரருள் கிட்டும்.  

5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

உபாதை அறிகுறி சாதாரணமாகத் தெரிஞ்சாலும் அதை அலட்சியப்படுத்தாதீங்க. சிலருக்கு காது-மூக்கு-தொண்டை பகுதிகள்லேயும் வேறு சிலருக்கு, முதுகு எலும்பிலும் பாதிப்பு வரலாம். உடனே மருத்துவரைப் பார்த்திடுங்க. சிலருக்கு ஒவ்வாமைக் கோளாறு ஏற்படுமுங்க. வழக்கமான சோப்பு, வாசனை திரவியங்களோட பிராண்டை மாத்தறதாலேயும் அது அதிகமாகலாம். குடும்பத்திலேயும் சரி, உத்யோக இடத்திலேயும் சரி, தகுதியில்லாம, தேவையில்லாம ரோஷப்பட்டு, நல்ல உறவுகளையும் நட்புகளையும் அனாவசியமா வருத்தப்பட வைக்காதீங்க. இதுக்கு, ‘எல்லாம் தெரியும்’ங்கற மெத்தனப் போக்கை மாற்றிக்கணுமுங்க. கற்றுக்க வேண்டியது இன்னும் அதிகம் இருக்கிறதுங்கற அடக்கத்தைப் பழகிக்கோங்க.

இந்தத் தேதிப் பெண்கள், எல்லா வேலையிலேயும் மூக்கை நுழைக்காம உங்க எல்லைக்குள்ளேயே நில்லுங்க. ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயரை தரிசனம் பண்ணுங்க; அனுபவம் அறிவைத் தரும்.

6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

பிள்ளைகளோட உடல்நலத்ல அதிக அக்கறை எடுத்துக்கோங்க. அவங்கள்ல சிலருக்கு வயிற்றில் கோளாறு ஏற்படலாம். சிலருக்கு மஞ்சள்காமாலை நோய் அறிகுறியும் தெரியலாம். சில செலவுகளைத் தவிர்க்க முடியாதுதாங்க. அட, கடனே படவேண்டியிருந்தாலும் அதுக்காக வருத்தப்படாதீங்க - சுலபமா சமாளிச்சுடுவீங்க. அற்பத்துக்கு ஆசைப்பட்டு, சட்ட விரோத செயல்கள்ல ஆர்வம் காட்டாதீங்க. சுய முயற்சியால முன்னேறதுதான் உங்களுக்குப் பெருமை. பலன் தாமதமாகக் கிடைச்சாலும் மனசு நிம்மதியா இருக்குமில்லே? சூரிய உதயத்துக்கு முன்னாலேயே எழுந்து அன்றன்றைய வேலைகளை சுறுசுறுப்பா ஆரம்பிங்க. இந்தப் பழக்கம் உத்யோகம், வியாபாரம், தொழில்னு எல்லா இனங்கள்லேயும் முன்னேற்றம் தருமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் வீட்டுப் பெரியவங்களை ஆலோசிக்காம எதிலும் இறங்காதீங்க. வெள்ளிக்கிழமை பெருமாள் கோயிலில் தாயாரை தரிசனம் பண்ணுங்க; பொருளாதாரம் வலுவடையும்.

7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

ஏதேனும் பிரச்னைன்னு வந்தா நழுவப் பார்க்கற குணத்தை மாத்திக்கோங்க. பின்விளைவுகள் உங்களுக்கும் உண்டுங்கறதால எதிர்ப்படும் எந்தப் பிரச்னையையும் அலசி, ஆராய்ந்து, சுமுகமாகத் தீர்க்கப் பாருங்க. முக்கியமா வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் கொஞ்சம் பொறுப்போடு நடந்துக்கோங்க. அவங்களோட தினசரி பழகுமுறையிலே ஒரு நலிவு தெரிஞ்சா உடனே என்னன்னு விசாரிங்க; அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்ங்க. குடும்ப விவகாரங்கள்ல அந்நியர் தலையீட்டை அனுமதிக்காதீங்க. வம்புச் சுவைக்காக அலைபவர்களோட நாக்குக்கு அந்த விவகாரங்களைத் தீனியாக்கிடாதீங்க - ஒட்டு மொத்த நஷ்டமும் உங்களுக்குதான். உத்தியோகம், தொழில், வியாபார இனங்கள்ல அனுகூலம் அதிகரிக்குமுங்க. சிலருக்கு உணவுக் குழாய்ல உபத்திரவம் வரலாம்.

இந்தத் தேதிப் பெண்கள் யார்கிட்டேயும் குடும்பக் குழப்பங்களைச் சொல்லாதீங்க. திங்கட்கிழமை சிவ வழிபாடு செய்ங்க; சங்கடங்கள் சொல்லிக்காம ஓடிடும்.

8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

வாகனம் ஓட்டும்போது மட்டுமல்ல, சாதாரணமாக நடந்து போகும்போதும் எச்சரிக்கையா இருக்கணுமுங்க. விபத்துக்கு வாய்ப்பு இருக்கறதால கூடுதல் விழிப்புணர்வு பாதிப்புகளை அதிகரிக்காதுங்க. எதற்கும் எங்கும் எப்போதும் உணர்ச்சிவசப்படாதபடி மனப்பக்குவத்தை வளர்த்துக்கோங்க. போதைப் பொருள் பயன்படுத்தறவங்க அதை அப்படியே ஒட்டுமொத்தமாக புறக்கணிச்சு ஒதுக்கிடுங்க. பொதுவாக உத்யோகஸ்தர்களுக்கு ‘எங்கே’ன்னு பிரச்னை காத்துகிட்டிருக்குங்க. அதனால முன்பின் யோசிக்காம யாருக்கும் வாக்கு கொடுக்காதீங்க; நெருங்கினவங்களா இருந்தாலும் கண்ணை மூடிகிட்டு கையெழுத்துப் போடாதீங்க. ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் எச்சரிக்கை தேவைங்க. எந்த முடிவெடுக்கும் முன்னும் ஒருமுறைக்கு இருமுறை யோசிங்க. முழு உடல் பரிசோதனை செய்துக்கறது நல்லதுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் சுயமாக எந்த முடிவும் எடுக்காதீங்க. வெள்ளிக்கிழமை நரசிம்மரை வழிபடுங்க; நல்லதே நடக்கும்.  

9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எல்லா தரப்பிலேர்ந்தும் நல்ல விஷயங்கள் வந்து மனசுக்கு தெம்பைத் தருமுங்க. தைரியமா மேற்கொள்ற முயற்சிகள்லாம் பெயரையும் புகழையும் சம்பாதிச்சுத் தருமுங்க. அவஸ்தை தந்துகிட்டிருந்த சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாயிடுமுங்க. படைப்பாளிகளுக்கு பிரகாசமான காலம். பெரிய அளவில் பாராட்டும் சன்மானங்களும் கிடைக்குமுங்க. சிலர் வெளிநாட்டுப் பயணம் போவீங்க. சிலருக்கு புதுவீடு, வாகனம், ஆபரண சேர்க்கை ஏற்படுமுங்க. குடும்பத்ல சுபவிசேஷங்கள் தடை நீங்கி மன நிறைவாக நடந்தேறுமுங்க. பிள்ளைகளோட கல்வி, கலை தேர்ச்சி, உறவுக்குள்ளேயும் வெளி வட்டாரத்திலேயும் உங்களுக்குப் பெருமை தேடித் தருமுங்க. சிலர் மூட்டு பாதிப்பால அவதிப்படுவீங்க. சிலருக்கு பாதங்கள்ல பிரச்னை வரலாம்.

இந்தத் தேதிப் பெண்களுக்குப் பெரியவங்க ஆதரவு கிட்டும். வெள்ளிக்கிழமை பார்வதிதேவியை வழிபடுங்க; வாழ்வில் பிரகாசம் கூடும்.

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • erode-dmk-votes-2

  அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!

 • scotland-bonfire-festival

  ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி

 • stalin-corp-31

  மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 • long-whale-newyork

  35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

 • pak-blast-30

  பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்