SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிறந்த தேதி பலன்கள் : மார்ச் 2 முதல் 8 வரை

2013-12-11@ 16:00:48

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எல்லா விஷயங்களும் மன நிறைவாக முடியக்கூடிய வாரமுங்க. அரசாங்க சலுகைகளையோ அல்லது அனுமதி, ஒப்புதலையோ எதிர்பார்க்கிறவங்களுக்கு அதெல்லாம் கைகூடுமுங்க. எதிர்பார்த்தபடியே நல்ல செய்திகள் வந்து சேருமுங்க. சமுதாயத்ல புகழ், செல்வாக்கு எல்லாம் ஓங்குமுங்க. உங்க வாக்குக்கு குடும்பத்ல, வெளிவட்டாரப் பழக்கத்ல எல்லாம் மதிப்பு கூடுமுங்க.

வீடு அல்லது தொழிற்கூடம் அமைப்பதற்கான மனை வாங்குவது எளிதாக முடியுமுங்க. உங்க திட்டப்படி அமைத்துக்கொள்ளத்தக்க வகையில அந்த மனை, பல சௌகரியங்கள் கொண்டதாக இருக்குமுங்க. தொலைதூரப்பயணத்ல எச்சரிக்கையா இருங்க; உடைமைகள் காணாமல் போகலாம். காது-மூக்கு-தொண்டை பகுதிகள்ல பிரச்னை வரலாமுங்க.

இந்தத் தேதிப் பெண்களோட நீண்டநாள் விருப்பம் நிறைவேறுமுங்க. புதன்கிழமை பெருமாள் துதி பாடி அவரை வணங்குங்க; பேறுகள் பல பெறுவீங்க.

2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

உத்தியோகத்ல சிலருக்கு அவங்க விருப்பப்பட்ட துறைக்கோ அல்லது இடத்துக்கோ மாற்றம் வரலாமுங்க; சந்தோஷம்தான். வேறு சிலருக்கு நிர்ப்பந்தம் காரணமா, மனவிருப்பம் இல்லாமலேயே அந்த மாற்றம் வரலாம்; இந்த மாற்றமும் உங்க எதிர்கால நன்மைக்குதாங்க; வருத்தப்படாதீங்க. மேலதிகாரி சிலசமயம் திடீர் பிரச்னைகளை உருவாக்குவாருங்க; உடனே கோபப்பட்டுடாதீங்க;

அமைதியாக யோசிச்சு, உங்களைப் பிறர் குறை சொல்லாதபடி நடந்துக்கோங்க. யார்கிட்டேயும் எந்த விரோதமும் வெச்சுக்காதீங்க. தினமும் குலதெய்வத்தை மனசார வழிபடுவதோடு, முடிந்தபோதெல்லாம் போய் தரிசனமும் செய்துவிட்டு வாங்க. உடலின் இடது பக்கம், முக்கியமா இருதய நோய் அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீங்க.

இந்தத் தேதிப் பெண்கள் அக்கம் பக்கத்தாருடன் எச்சரிக்கையாகப் பழகணுமுங்க. ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயர் துதி பாடி அவரை வணங்குங்க; ஆனந்தம் அதிகரிக்கும்.

3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

குடும்பத்ல நிலவிவந்த தடைகள் நீங்கி, சுப விசேஷங்கள் மன நிறைவாக நடைபெறுமுங்க. இதனால ரொம்ப நாள் தொடர்பில்லாம இருந்த உறவினரையும், நண்பர்களையும் மறுபடி சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமுங்க. குடும்பத்ல புதிய வரவும் சந்தோஷத்தை அதிகரிக்கும். எந்த மன இறுக்கமும் வெச்சுக்காம வெளிப்படையாக குடும்பத்ல பேசுங்க.

குடும்ப உறுப்பினர் விஷயத்ல, குறிப்பா பிள்ளைகள் பற்றி மூன்றாம் நபர் யாரும் தலையிட்டு புகாரோ, அபிப்ராயமோ சொல்வதை அனுமதிக்காதீங்க. உத்தியோகஸ்தர்கள் சிலருக்குப் புது பொறுப்பும், பதவியும் கிடைக்குமுங்க. சிலர் வெளிநாட்டிலேர்ந்து நல்ல செய்தியைப் பெறுவீங்க. சருமத்தில் சிலருக்கு நிறமாற்றம் போன்ற கோளாறு ஏற்படலாம்.

இந்தத் தேதிப் பெண்கள் எல்லோரிடமும் மனசில் உள்ளதைச் சொல்லிகிட்டிருக்க வேண்டாங்க. செவ்வாய்க்கிழமை துர்க்கை துதி பாடி அவரை வணங்குங்க; துன்பம் தொலைந்து போகும்.

4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

இந்த வாரத்ல உங்க உடல் நலத்ல முக்கியமான அக்கறை எடுத்துக்கோங்க. சாப்பிடற சாப்பாடு மட்டுமல்லாம, பழக்க வழக்கங்கள்லேயும் கூடுதல் எச்சரிக்கை வேணுமுங்க. சிலருக்கு விரும்பத்தகாத சகவாசத்தால சில இழப்புகள் ஏற்படலாம். அந்த நஷ்டக் கோபத்தை வீட்ல காட்டி, அவங்க நிம்மதியைக் கெடுக்காதீங்க. மனச் சிதறல்களுக்கு இடம் கொடுக்காதீங்க.

பிராணாயாமம், தியானம், யோகான்னு பயிற்சி செய்து மனசை ஒருநிலைப்படுத்துங்க. அல்லது ஏதாவது படிப்பு, கலை என்று ஈடுபட்டு, மனசை அதில் திருப்பி, லேசாக்கிக்கோங்க. எந்த வேலை ஆரம்பிக்கு முன்னரும் இஷ்டப்பட்ட தெய்வத்தின் நாமத்தைச் சொல்லி ஆரம்பிங்க; வெற்றி காண்பீங்க. சிலருக்கு ரத்தத்தில் கொழுப்பு சத்து சேர்ந்து சில கோளாறைத் தருமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் எந்த கட்டத்திலும் நிதானத்தை இழக்காதீங்க. வியாழக்கிழமை ஏதேனும் புற்றுள்ள அம்மன் துதிபாடி வணங்குங்க; வாழ்க்கைப் பாதை சீராகும்.

5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு


‘கூட பத்து ரூபாதானே, போகட்டும் விடு’ங்கற மனோபாவத்தை இந்த வாரம் மாத்திக்கணுமுங்க. ஏன்னா, நீங்க வேண்டாம்னு சொன்னாலும், அனாவசிய செலவுகள் உங்ககூட வந்து சொந்தம் கொண்டாடுமுங்க. உத்தியோகஸ்தர்கள், குறிப்பாக அரசுத் துறை ஊழியர் ரொம்பவும் எச்சரிக்கையாக நடந்துக்கணுமுங்க. உங்களுக்குன்னு விதிக்கப்பட்ட வரைமுறைக்குள், சட்டத்திட்டங்களுக்குள் நீங்க நின்னுக்கறது நல்லதுங்க.

எந்த கவர்ச்சிக்கும், முறைகேடான லாபத்துக்கும் ஆசைப்பட்டுடாதீங்க. சில கூடுதல் வசதிக்காகவும், செலவை சமாளிக்கறதுக்காகவும், எந்தக் குறுக்கு வழியிலேயும் போய் வருமானம் தேட முயற்சிக்காதீங்க. சிலருக்கு ஒவ்வாமையால சளித் தொந்தரவு வரலாமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் நியாயமான ஆசைகளுக்கு மட்டும் மனசில் இடம் கொடுங்க. வெள்ளிக்கிழமை பெருமாள் துதிபாடி, அவரை வணங்குங்க; பேரிடர் எதுவும் நேராமல் அவர் காப்பார்.

6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு


தொலைதூரத்திலேர்ந்து வர்ற செய்திகளால சந்தோஷம் அதிகரிக்குமுங்க. வெளி மாநிலம் அல்லது வெளி நாட்டில் இருக்கும் உறவினர்கள், நண்பர்களால உங்களோட நெடுங்கால ஏக்கமும் ஆசையும் நிறைவேறுமுங்க. சிலர் முதல்முறையாக வெளிநாடு பயணம் போக வாய்ப்பு வருமுங்க. இந்த மகிழ்ச்சியை உடனே ஆள் தராதரம் தெரியாம எல்லார்கிட்டேயும் பகிர்ந்துக்காதீங்க.

உங்க மேல உண்மையான அக்கறை இருக்கறவங்ககிட்ட மட்டும் சொல்லி அவங்களோட அறிவுரையைக் கேட்டால் போதுமுங்க. தொழில், வியாபாரத்ல எந்த ரகசியமும் வெளியே கசிந்திடாதபடி எச்சரிக்கையா இருங்க. வாகனத்தை ஜாக்கிரதையாக செலுத்துங்க. உணவுக் குழாய், குடல் பகுதிகள்ல சிலருக்கு பாதிப்பு வருமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் ரகசியத்தைப் பரம ரகசியமாகப் பாதுகாக்கணுமுங்க. புதன்கிழமை விநாயகர் துதி பாடி அவரை வணங்குங்க; விக்னங்களையெல்லாம் அவர் நேராக்குவார்.

7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எதையும் யோசிச்சுப் பேசுங்க; சொல்லுங்க. முக்கியமா எந்தக் கையெழுத்துப் போடுமுன்னும் அவசரப்படாதீங்க. ஒரு தரத்துக்கு பத்து தரம் சரிபார்த்துகிட்டு, வாசகங்களைப் படிச்சு, ஏதேனும் சந்தேகம் இருந்தா உரிய நிபுணர்கிட்ட காண்பிச்சு, தெளிவாகப் புரிஞ்சுகிட்டு அப்புறமா கையெழுத்துப் போடுங்க. எந்த முதலீட்டையும்  குடும்பத்துப் பெரியவங்க ஆலோசனையோட, அவங்க ஆசியோட செய்ங்க. கூடா நட்பை விலக்கி வைக்கணுமுங்க.

புதிதாக அறிமுகமாகிற நபரின் கவர்ச்சிப் பேச்சில் மயங்கிடாதீங்க. உத்தியோகத்ல இடமாற்றம் கிடைச்சா ஏற்றுக்கோங்க; அதனால சில பிரச்னைகள்லாம் தானாக சரியாகிடுமுங்க. ஏற்கெனவே நரம்பு, கண்கள்ல கோளாறு இருக்கறவங்க மருத்துவத்தைக் கைவிடாம தொடருங்க.

இந்தத் தேதிப் பெண்கள் எந்த விவகாரத்தையும் சரியாகப் புரிஞ்சுகிட்டு உங்க அபிப்ராயத்தைச் சொல்லுங்க. வியாழக்கிழமை மகான் ராகவேந்திரர் துதி பாடி அவரை வணங்குங்க; மயக்கம் கலையும்.


8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு


பெற்றோர் உடல்நலம் மன சங்கடம் தருமுங்க. உங்களாலான எல்லா முயற்சிகளையும் நீங்க எடுத்துகிட்டாலும், அதையும் மீறி, மருத்துவர்களின் உன்னிப்பான கவனிப்பையும் மீறி, சிலருக்கு உடல்நலக் கோளாறு சவாலாகவே இருக்குமுங்க. இதுக்காக மனசு விட்டுப் போயிடாதீங்க. இப்பதான் நீங்க உறுதியான மனதோடு அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்யணுமுங்க.

பூர்வீக சொத்து விவகாரத்தில் ஏற்கெனவே பிரச்னையை சந்திச்சவங்க, அமைதியாக, பொறுமையாகக் காத்திருந்தாலேயே உங்களுக்குன்னு உண்டானது உங்களை வந்து சேருமுங்க. தொழிலதிபர்கள் புதுத் தொழிலிலோ, கூடுதல் முதலீட்டிலோ ஈடுபடவேண்டாங்க. ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவைப் பரிசோதிச்சுக்கோங்க; உரிய மருந்தையும் எடுத்துக்கோங்க.

இந்தத் தேதிப் பெண்கள் குடும்பத்துப் பெரியவங்க நலன்ல அக்கறை எடுத்துக்கணுமுங்க. சனிக்கிழமை சிவ துதி பாடி ஈசனை வணங்குங்க; சீராகும் வாழ்க்கை.

9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு


உத்தியோகம், வியாபாரம், தொழில் இனங்கள்லாம் நல்ல முன்னேற்றத்தைக் காணுமுங்க. கூடுதல் பதவி, ஊதியம், சலுகைகள், அதிகாரத்தோடு சிலருக்கு உத்தியோகம் இடமாற்றமும் அமையுமுங்க. உங்க திறமையைப் புது இடத்ல நிரூபிக்கறதுக்கு இது ஒரு வாய்ப்பு; முறையாகப் பயன்படுத்திக்கோங்க. வியாபாரக் கிளை, தொழில் விரிவாக்கம்னு உங்க மதிப்பை விஸ்தரிக்கக்கூடிய நல்ல வாய்ப்புகளும் வருமுங்க;

தயக்கமே இல்லாம, ஏற்றுக்கொண்டு சிறப்பு பெறுங்க. விடுபட்ட குலதெய்வ வழிபாடு ஏதேனும் இருந்தா இப்பவே அதுக்கு ஏற்பாடு பண்ணிகிட்டு, அந்த தெய்வத்துக்கு நேரடியாகப் போய் நன்றி சொல்லுங்க. இந்த வழிபாட்டை குடும்பத்தாரோடு போய் செலுத்தறது நல்லதுங்க. சிலருக்கு ரத்தத்ல தொற்று காரணமாக காய்ச்சல் வரலாம்.

இந்தத் தேதிப் பெண்கள் சிலரின் காதலை பெற்றோர் அங்கீகரிப்பாங்க. வெள்ளிக்கிழமை மகாலட்சுமி துதி பாடி அன்னையை வணங்குங்க, சிகரத்தைத் தொடுவீங்க.

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • erode-senthilbalaji-8

  சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!

 • athisayangal

  நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்

 • perunad

  பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!

 • turkeydeath11

  துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!

 • lantern-festival-china

  உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்