ஸ்ரீகாளஹஸ்தியில் பிரமோற்சவம் திரவுபதி சமேத தர்மராஜர் திருக்கல்யாணம் கோலாகலம்
2018-07-19@ 14:12:18

ஸ்ரீகாளஹஸ்தி: ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள திரவுபதி சமேத தர்மராஜ சுவாமி கோயில் பிரமோற்சவத்தையொட்டி நடந்த சுவாமி திருக்கல்யாணத்தில்திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். சித்தூர் மாவட்டம், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலின் துணை கோயிலான திரவுபதி சமேத தர்மராஜ சுவாமி கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. பிரமோற்சவத்தின் 5வது நாளான நேற்றுமுன்தினம் திரவுபதி சமேத தர்மராஜர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது.
முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரம் நடந்தது. பின்னர் வேத பண்டிதர்கள் மந்திரங்கள் முழங்க மேள, தாளத்துடன் திரவுபதி சமேத தர்மராஜருக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் திருமண கோலத்தில் சுவாமி முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில், பிரமோற்சவத்தின் 6வது நாளான நேற்று சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி மேள, தாளம் முழங்க வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்தும் தேங்காய் உடைத்தும் சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் செய்திகள்
அயோத்தியாப்பட்டணம் ராமர் கோயிலில் திருக்கல்யாணம்
களக்காடு வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம்
பாகம்பிரியாள் கோயிலில் சித்திரை திருக்கல்யாண வைபவம்
சக்கரபாணி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
வேளிமலை குமாரகோவிலில் முருகன் வள்ளி திருக்கல்யாணம்
பங்குனி உத்திரத்தையொட்டி திருச்செந்தூரில் முருகன் - வள்ளி திருக்கல்யாணம்
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை