SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிறந்த தேதி பலன்கள் : பிப்ரவரி 23 முதல் மார்ச் 1 வரை

2013-12-11@ 16:00:48

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

குடும்ப விவகாரங்கள்ல ரொம்பவும் எச்சரிக்கை தேவைங்க. சாதாரணமா ஒதுக்கிவிடக்கூடிய அற்ப விஷயங்களை ஊதி ஊதிப் பெரிசாக்கற உறவுக்காரங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க. ஆனா, உங்கமேல உண்மையான அக்கறை கொண்டவங்களா உங்க நண்பர்கள் இருப்பாங்க; அவங்ககிட்ட மட்டும் உங்க அந்தரங்க விஷயங்களைப் பரிமாறிக்கறது நல்லதுங்க.

உத்யோகஸ்தர்களுக்கு சில வழக்கமான பிரச்னைகள் வரும்தான்னாலும் பொறுமையோடு, புன்சிரிப்போடு வேலையில ஈடுபட்டீங்கன்னா, எல்லாமே சாதகமாக முடியுமுங்க. காது, மூக்கு, தொண்டை பகுதிகள்ல உபாதை தெரியுதுங்க. உணவுக் குழாய்ல ஏற்கெனவே பாதிப்பு இருக்கறவங்க மருத்துவர் பேச்சைத் தட்டாதீங்க. வாகனத்ல மிதமான வேகம்தான் விவேகமானது; ஞாபகம் வெச்சுக்கோங்க.

இந்தத் தேதிப் பெண்களுக்கு புன்சிரிப்புதான், பலன்தரும் இந்த வார ஆபரணம். புதன்கிழமை பெருமாளை வழிபடுங்க; புதுப் பாதை தெரியும்.

2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

அவசரம், படபடப்பு, அனாவசிய ரோஷம் எல்லாம் உங்களோட மதிப்பைக் குறைச்சுடாம பார்த்துக்கோங்க. சீக்கிரம் முடிக்கணும்னு நினைக்கற வேலைகளை, அதே அவசரம் முடிக்க விடாமலும் பண்ணிடுமுங்க. பொதுவாகவே பயணத்ல எச்சரிக்கையா இருங்க. பயணத்தின்போது, புது அறிமுக நபர்கள்கிட்ட ரொம்பவும் நெருங்காதீங்க. உத்யோகத்ல உங்களோட புது உத்திகளை பிறர் சொந்தம் கொண்டாட வாய்ப்பு இருக்குங்க.

அதேபோலதான் வியாபாரம், தொழில்ல ஈடுபட்டிருக்கறவங்களுக்கும். வாகனம் பழுதுபட்டா உடனே கவனிங்க; அது உங்களைப் பாதுகாப்பாக கவனிச்சுக்கும். நரம்பு உபாதை, ரத்தக் கொதிப்பு கோளாறுகளை மருத்துவர் கவனத்துக்குக் கொண்டுபோங்க. அடிவயிறு, உணவுக் குழாய் பகுதிகள்ல உபாதை தெரியுதுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் மௌன விரதம் மேற்கொள்றது நல்லதுங்க. சனிக்கிழமை ஆஞ்சநேயரை வழிபடுங்க; சவால்களை சமாளிப்பீங்க.

3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு


உங்க பேச்சு பேச்சா இருக்குமுங்க. வீட்டிலேயும் சரி, வெளியிடங்கள்லேயும் சரி, உங்க வாக்குக்கு மதிப்பும் மரியாதையும் கூடுமுங்க. உங்க யோசனையைக் கேட்கவும், அதன்படி நடக்கவும் உறவுக்காரங்களும் நண்பர்களும் உங்களைத் தேடி வருவாங்க. சிலருக்கு முதன்முதலாக வெளிநாட்டுக்குப் போற வாய்ப்பு கிடைக்குமுங்க. அனுபவப்பட்டவங்ககிட்ட உரிய அறிவுரை கேட்டு, அதன்படி செயல்பட்டீங்கன்னா எந்தச் சிக்கலும் ஏற்படாதுங்க.

ரொம்ப நாளா தொடர்பு விட்டுப்போயிருந்த உறவினர், நண்பர்களை குடும்ப சுபவிசேஷங்கள் மூலமாக சந்திப்பீங்க. உத்யோகம், வியாபாரம், தொழில் இனங்கள் சுமுகமாகவே போகுமுங்க. ரத்தத்ல கொழுப்பு அளவைப் பரிசோதிச்சுக்கோங்க.

இந்தத் தேதிப் பெண்கள் இனிமையான பேச்சுதான் ஏற்றம் தரும்ங்கறதைப் புரிஞ்சுப்பீங்க. வியாழக்கிழமை இஷ்டப்பட்ட மகானை வழிபடுங்க; இஷ்டப் பட்டதெல்லாம் ஈடேறும்.

4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

உணவுக் கட்டுப்பாடு இந்த வாரத்ல நீங்க கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான அம்சமுங்க. எளிதாக செரிமானம் ஆகக்கூடிய சாத்வீகமான உணவை மட்டும் எடுத்துக்கோங்க. நாக்கு கேட்குதேங்கறதுக்காக கண்ணில் பட்ட கவர்ச்சியான உணவு வகைகளை வயிற்றுக்குள் தள்ளி, அதை வேதனைப்படுத்தாதீங்க. சிலர் வாகனத்ல மாற்றம் செய்வீங்க. தடைகள் எல்லாம் மறைஞ்சு குடும்பத்ல சுபவிசேஷங்கள் மனம் மகிழ நிறைவேறுமுங்க.

மனசில் தீர்மானமான எண்ணங்கள் உருவாகுமுங்க. இதனால எதிலும் வெற்றி பெறக்கூடிய தன்னம்பிக்கையும் வளருமுங்க. இதனால தொழில், வியாபாரம், உத்யோகம், குடும்பம்னு எல்லா இனங்கள்லேயும் நன்மைகள் அதிகரிக்குமுங்க. உறவுக்காரங்க, நண்பர்கள் மத்தியில மதிப்பு கூடுமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் புது உற்சாகம் பெறுவீங்க; முகப்பொலிவு கூடும். செவ்வாய்க்கிழமை விநாயகரை வழிபடுங்க; சிறப்புகள் சேரும்.

5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

பெண்கள் விஷயத்ல ரொம்பவும் எச்சரிக்கையா இருங்க. உறவுப் பெண்களாக இருந்தாலும் சரி, உங்களுக்குப் பழக்கமானவங்களா இருந்தாலும் சரி, புதிதாக அறிமுகமானவங்களாக இருந்தாலும் சரி, பேச்சில் எந்த கட்டத்திலும் கண்ணியத்தைத் தவறவிடாதீங்க. அதேபோல உங்ககிட்ட ஏதேனும் உதவி அல்லது ஆதாயம் கோரக்கூடிய அவங்ககிட்ட ஏமாந்துடாமலும் இருக்கணுமுங்க. கொடுக்கல் வாங்கலில் பிரச்னை தெரியுதுங்க;

அதனால சரியான சாட்சியைக் கூட வெச்சுகிட்டே இந்த விவகாரத்ல ஈடுபடுங்க; இல்லாட்டி அநியாயத்துக்கு நஷ்டப்படுவீங்க. அதேசமயம், நல்ல நண்பர்களைப் பகைத்துக்கொள்ளாதபடி பக்குவமா நடந்துக்கோங்க, ஏற்கெனவே நரம்பு, இருதயப் பகுதியில பாதிப்பு ஏற்பட்டிருக்கறவங்க, உரிய சிகிச்சையைத் தவறாம எடுத்துக்கோங்க.

இந்தத் தேதிப் பெண்கள் புது அறிமுகங்கள்கிட்ட நெருங்கிப் பழகாதீங்க. வெள்ளிக்கிழமை லட்சுமி நரசிம்மரை வழிபடுங்க; நன்மைகள் தேடி வரும்.

6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

மனசில் இனம் புரியாத சஞ்சலங்கள் உருவாகுமுங்க. சிலசமயம், தன்னம்பிக்கை தளர்ந்துபோகும். அதுக்காக நீங்க தளர்ந்து போயிடாதீங்க. நல்ல நண்பர்கள், உறவினர்கிட்ட ஆலோசனை கேளுங்க. அவங்களோட அனுபவ அறிவு உங்க மனசுக்கு மருந்து தடவுமுங்க. இதைவிட குலதெய்வ வழிபாடு ரொம்பவும் முக்கியமுங்க. குலதெய்வத்தின் ஆசியும், அருளும் உங்களுக்கு எப்போதும் பக்க பலமா இருக்குமுங்க.

உங்க முன்னேற்றம் படிப்படியாக அமையும்ங்றதால எதுக்காகவும், யாரிடமும் கோபமோ, ஆவேசமோ படாம பழகணுமுங்க. உத்யோகஸ்தர்கள் சொந்த யோசனைப்படி பணியாற்றுங்க. பிறர் ஆலோசனைகளை ஏற்காதீங்க. அதேபோல ஏதேனும் முதலீடு செய்யும்போதும் கவனமா இருங்க. சிலருக்கு வயிற்றில் உபாதை ஏற்படலாம்.

இந்தத் தேதிப் பெண்கள் எந்தச் சூழ்நிலையிலும் மன உறுதியை இழக்காதீங்க. செவ்வாய்க்கிழமை துர்க்கையை வழிபடுங்க; துடிப்போடு வாழ்வீங்க.

7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு


வருமானம் பெருகுமுங்க. இந்தக் கூடுதல் வருமானத்தை ஏற்கெனவே இருந்த கடன்களைத் தீர்க்கவும், புது முதலீடு செய்யவும், சாமர்த்தியமாகப் பயன்படுத்துங்க. முக்கியமா புது வீடு அல்லது மனையில முதலீடு செய்ங்க. இந்தத் தேதிப் படைப்பாளிகளுக்கு பல மரியாதைகளும், அங்கீகாரமும் கிடைக்கக்கூடிய காலகட்டமுங்க. உங்களோட புது யோசனைகள் பலராலும் பாராட்டப்படுமுங்க. இதை உத்யோகத்திலேயும் உணர்வீங்க.

உயர்வுகளுக்கு நீங்கத் தகுதியானவர்தாங்றதை சக ஊழியர்களும் புரிஞ்சுகிட்டு ஆதரவா இருப்பாங்க. மனசில் இருந்த தயக்கம், பயம் எல்லாம் விலகிடும்ங்கறதனால, பேசும் வார்த்தைகள்ல கடுமை படராம பார்த்துக்கோங்க. முதுகெலும்பு, கழுத்து எலும்பில் பிரச்னை வரலாமுங்க. ஒவ்வாமையால சிலருக்கு சருமத்ல நிற மாற்றம் ஏற்படும்.

இந்தத் தேதிப் பெண்கள் சேமிப்பின் அவசியத்தை உணர்வீங்க. சனிக்கிழமை சிவாலயத்ல சிவன், அம்பிகையை வழிபடுங்க; வாழ்க்கை செம்மையாகும்.

8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எதிர்பார்த்த சில விஷயங்கள் ஏமாற்றம் தரலாம்; ஆனா அதுக்காக வாழ்க்கையே முடிந்துவிட்டதுபோல துக்கப்படவேண்டிய அவசியமில்லீங்க. இப்படித் துக்கப்பட்டா தேவையில்லாத சந்தேகங்களும், பழிவாங்கும் மூர்க்கமும்தான் வளரும். அதனால ஏமாற்றங்களைப் பார்த்து ஏளனமாகச் சிரிச்சுட்டு, அடுத்த வேலையில ஆர்வத்தோட ஈடுபடுங்க.

முக்கியமா சட்டத்துக்குப் புறம்பானவங்களோட தொடர்பிலே ஏதாவது ஆதாயம் எதிர்பார்த்து ஏமாறுவதற்கு வாய்ப்பு இருக்கறதால வன்மமும் கூடும்; அதனால அந்த சகவாசத்தையே ஒழிச்சிடுங்க. ஏற்கெனவே கண்ணில் உபாதை இருக்கறவங்க முறைப்படி மருந்து எடுத்துக்கோங்க. நெருப்போடு அல்லது உயரத்ல வேலை செய்யறவங்க எச்சரிக்கையா இருங்க. ஞாபகமறதி கொஞ்சம் சங்கடம் தரும்.

இந்தத் தேதிப் பெண்கள் அதிகம் எதிர்பார்க்காதீங்க; அப்புறம் அவதிப்படாதீங்க. வியாழக்கிழமையில மகான் ராகவேந்திரரை வழிபடுங்க; மனசு அமைதியாகும்.

9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

தாய்வழி உறவில் எச்சரிக்கையாக இருங்க. உங்கமேல அதிக உரிமை எடுத்துகிட்டு அவங்க உங்கக் குடும்பத்ல சச்சரவை ஏற்படுத்தலாம். பூர்வீக சொத்து விவகாரம் உங்களுக்கு சாதகமாகவே தீர்ப்பாகிடும். அதனால அனாவசியமா வார்த்தைகளை விட்டு, பிறரோடு மனக்கசப்பை உருவாக்கிக்காதீங்க. நிதானமாக ஈடுபடும் எல்லா விஷயங்கள்லேயும் வெற்றி உங்க பக்கம்தாங்க. அரசாங்க விஷயங்கள்லே, யார்கிட்டேயும் விரோதத்தை வளர்த்துக்காதீங்க;

காரியம் கைகூடாவிட்டாலும், வீண்பழிக்கு ஆளாகாமத் தப்பிப்பீங்க.  பாரம்பரிய நோய் பாதிப்பு அறிகுறி ஏதேனும் தெரிஞ்சா உடனே மருத்துவரைப் பார்த்திடுங்க. உத்யோகம், வியாபாரம், தொழில்ல அமைதியான போக்கால் நல்ல நட்புகளை வளர்த்துப்பீங்க.

இந்தத் தேதிப் பெண்கள் தங்களோட நெடுநாள் விருப்பம் நிறைவேறப் பெறுவீங்க. இஷ்டப்பட்ட மகானுக்கு பசுநெய் தீபம் ஏற்றி வழிபடுங்க. வாழ்க்கை ஒளிரும்; மணக்கும்.

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-09-2020

  18-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • birthdayceleb17

  இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்தநாள்!: நாடு முழுவதும் பா.ஜ.க-வினர் கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் உற்சாக கொண்டாட்டம்..!!

 • guinness17

  2021 உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற சாதனையாளர்களின் புகைப்படங்கள்..!!

 • amavasai17

  மஹாளய அமாவாசை!: மறைந்த நம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க உகந்த நாள்...பித்ரு வழிபாடு செய்வது சிறப்பு..!!

 • modiji17

  பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்தநாள்!: பிரதமரின் அரசியல் பயண புகைப்பட தொகுப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்