SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிறந்த தேதி பலன்கள் : பிப்ரவரி 9 முதல் 15 வரை

2013-12-11@ 16:00:48

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

புதுசா அறிமுகமாகிறவர்கிட்டகூட ரொம்பவும் அன்யோன்யமா பழகறீங்க; அதே மாதிரி வாழ்க்கைத் துணையோட பழக ஏன் மறுக்கறீங்க? ஆணாதிக்க மனோபாவத்திலேர்ந்து விலகி வந்து, உங்களுக்குச் சமமான குடும்ப பாரத்தை சுமக்கற துணையோட பேச்சுக்கு மதிப்பு கொடுங்க. அவங்க யோசனை வாழ்க்கையில சில சிக்கல்களைத் தவிர்க்க உதவுமுங்க. உத்யோகத்ல நிலுவையிலிருந்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு, சலுகைகள் எல்லாம் கூடுதல் ஆதாயத்தோடு கிடைக்குமுங்க. தொலைதூரச் செய்திகள் மகிழ்ச்சி தருமுங்க. எந்த பயணத்தின்போதும், கூடவே உங்க உடல் உபாதைக்காகத் தொடர்ந்து எடுக்கவேண்டிய மருந்துகளை கையோடு கொண்டு போங்க.

இந்தத் தேதிப் பெண்கள் அனுசரிச்சுகிட்டுப் போகிறது குடும்ப நன்மைக்காகத்தான்; சுய மரியாதை இழப்பல்லங்கறதைப் புரிஞ்சுக்கோங்க. புதன்கிழமை பெருமாளை உளமாற வணங்குங்க; புது வாழ்க்கை மலரும்.

2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

மனசாட்சி வேண்டாம், வேண்டாம்னு சொன்னாலும், பாழாய்ப் போகிற மனசு தூண்டி விடறதால, சட்டத்துக்குப் புறம்பான விஷயங்கள்ல நாட்டம் கொள்றதை முற்றிலும் தவிர்க்கணுமுங்க. பணியிடத்ல சக ஊழியர்கள், மேலதிகாரிகளோட எதுக்கும் வாக்குவாதம் வெச்சுக்காதீங்க. உங்களோட பெரிய எதிரியே உங்க பேச்சுதான். அதனால கூடுமானவரை பேசம மௌனமாக இருந்திடறதே மேல். சிலருக்கு நரம்பு உபத்திரவம் அதிகத் தொந்தரவு கொடுக்குமுங்க. முறையான சிகிச்சையையும், தொடர்ந்து எடுத்துக்க வேண்டிய மருந்துகளையும் கொஞ்சம்கூட தவிர்க்காதீங்க. குலதெய்வ வழிபாடு ஏதேனும் பாக்கி இருந்தா அதை உடனே முடிச்சுடுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் அனாவசிய சந்தேகங்களைத் தவிர்த்து எல்லோரிடமும் சுமுகமாகப் பழகணுமுங்க. செவ்வாய்க்கிழமையில துர்க்கை அம்மனை உளமாற வணங்குங்க. துர்சிந்தனைகள் தூரப் போகும்.  

3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

ஒரு பெற்றோருக்கு ஒரு குழந்தைங்கற சித்தாந்தத்திலே இப்பவே ஒரு குழந்தைக்கு மாமன், அத்தைன்னு உறவுமுறைகளே இன்னும் கொஞ்ச காலத்ல இல்லாமலேயே போயிடுமோன்னு கவலை பரவும் இந்த காலத்ல, எதுக்கு அனாவசியமா ரத்த பந்த உறவுகளோட சண்டையும், சச்சரவையும்வளர்த்துக்கறீங்க? உங்கத் தேவைகள் வளர, அதனால ஏற்படற உங்களோட வசதிகளைப் பார்க்கறவங்க, பாராட்டறதைவிட பொறாமைதான் படுவாங்க. உத்யோகத்ல உயர்பதவியில இருக்கறவங்களைப் பார்த்துப் பெருமூச்சு விடாதீங்க. முதல்ல நீங்க அனுபவிக்கற சலுகைகள் உங்கத் தகுதிக்குச் சரியானதுதானான்னு சிந்திச்சுப் பாருங்க. சிலர் ஒவ்வாமையால பாதிக்கப்படுவீங்க.

இந்தத் தேதிப் பெண்கள் அடுத்தவங்களோடு உங்களை ஒப்பிட்டுப் பார்க்காதீங்க; மன அமைதியை இழக்காதீங்க. சனிக்கிழமை சிவபெருமானுக்கு வில்வத்தால அர்ச்சனை பண்ணுங்க; உங்க தகுதி, உழைப்புக்கேற்ற முன்னேற்றத்தை அடைவீங்க.  

4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எந்த சமாசாரத்தையும் சிந்திச்சு, உடனுக்குடன் முடிக்கறதால ஏற்படற நிம்மதியை இனிமேலாவது உணர ஆரம்பிங்க. தள்ளிப் போடற விஷயங்கள், உரிய பலன்களைத் தராமப் போயிடுமுங்க. அலட்சியமாக வீணாக்கப்படும் நேரத்தால ஏற்படக்கூடிய ஏமாற்றம், நஷ்டம் எல்லாம் தாங்கிக்க முடியாததாகவும் ஆகிடுமுங்க. பிறருக்கு ஆலோசனை சொல்ற நீங்க, அந்த ஆலோசனைகள் உங்களுக்கே பொருந்தும்ங்கறதையும், முதல்ல நீங்கதான் அதைப் பின்பற்றணுங்கறதையும் புரிஞ்சுக்கோங்க. கொடுக்கல், வாங்கலில் ரொம்பவும் எச்சரிக்கையாக இருங்க. ஏற்கெனவே நரம்பு உபாதை இருக்கறவங்க, தொடர்ந்து எடுக்க வேண்டிய மருந்துகளைத் தவறாம எடுத்துக்கோங்க. சிலருக்கு இருதயப் பகுதியில் பாதிப்பு ஏற்படலாம்.

இந்தத் தேதிப் பெண்கள் நேரத்தை வீணாக்காம, பயனுள்ளவகையில செலவழியுங்க. திங்கட்கிழமையில் ஆஞ்சநேயரை வழிபடுங்க; மனோதிடம் வலுப்பெறும்.

5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எந்த ஆதாயத்துக்காகவும் சட்டத்தை மீறாதீங்க. குறிப்பா உள்நாடு அல்லது வெளிநாட்டில் வியாபாரம், தொழில் செய்யறவங்க, அரசாங்க விதிமுறைகளை அனுசரிச்சுகிட்டுப் போகணுமுங்க. சட்ட விவரங்கள் தெரிஞ்ச நிபுணர்களின் உதவியை நாடுவதிலும் தவறில்லீங்க. உத்யோகஸ்தர்களுக்கு அவங்க உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்குமுங்க. அதிக வேலை பளு காரணமாக இரவுத் தூக்கம் குறையலாம். எந்த சந்தர்ப்பத்திலும் உங்க தவறை அடுத்தவர் மேலே போட்டுவிட்டுத் தப்பிக்க நினைக்காதீங்க. பிறர் மேல சுமத்தினா இப்போதைக்குத் தப்பிச்சுக்கலாம்; ஆனா எதிர்கால நிரந்தர நஷ்டத்துக்குத் தயாராகிடணுமுங்க. சிலருக்கு செரிமானக் கோளாறு வரும்.

இந்தத் தேதிப் பெண்கள் பிறர் பேச்சைக் கேட்டு இயல்புக்குப் புறம்பான விஷயங்கள்ல ஈடுபடாதீங்க. வியாழக்கிழமையில விநாயகரை வழிபடுங்க; வேண்டாததெல்லாம் விலகிப் போகும்.  

6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

லாபங்கள் அதிகரிக்கற காலகட்டமுங்க. உடனே தாம் தூம்னு செலவழிக்க ஆரம்பிச்சுடாதீங்க; தகுதியில்லாதவங்களுக்கு சுய விளம்பரத்துக்காகவோ, போலியாக அனுதாபப்பட்டோ வாரி வழங்காதீங்க - நல்லவங்களோட வருத்தத்துக்கும், பிறர் கிண்டலுக்குக்கும் ஆளாக வேண்டியிருக்குமுங்க. பெரிய மனிதர்கள் சந்திப்பு உங்க மதிப்பை உயர்த்துமுங்க. அதனால புது பொறுப்புகளும், புது பதவிகளும் கிடைக்கலாமுங்க. தினமும் உடற்பயிற்சி செய்யறவங்க, எந்த காரணத்துக்காகவாவது அவசர அவசரமாகச் செய்யாதீங்க. இதனால முதுகு எலும்புப் பகுதியில அல்லது கழுத்துப் பகுதியில் பாதிப்பு வரலாம். சிலருக்குக் கழிவுப்பாதியில கோளாறு வரலாமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் ஆடம்பரச் செலவுகளைக் குறைச்சுக்கணுமுங்க. வெள்ளிக்கிழமையில லட்சுமி நரசிம்மரை வழிபடுங்க. வருமானமெல்லாம் அனாவசியமா விரயமாகாது; சேமிப்பு கூடும்.

7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

குடும்பத்ல மன நிம்மதி இருந்தாதான் வெளிப் பழக்கத்ல உங்களால பல சாதனைகள் புரிய முடியும்ங்கறதைப் புரிஞ்சுக்கோங்க. பொதுவாகவே குடும்பத்ல பெரியவங்க அல்லது வாழ்க்கைத் துணையோடு எந்த பிரச்னை வந்தாலும், சமாதானமாகப் போயிடுங்க; சிக்கலே வராது. நீங்க செய்திருந்த ஓரிரு முதலீடுகள் நீங்கக் கொஞ்சமும் எதிர்பார்க்காதவகையில பெரும் லாபம் ஈட்டிக் கொடுக்குமுங்க. சமூகத்தில் சிறப்பு அந்தஸ்து பெறுவீங்க. நல்ல செய்திகளும், வங்கிக் கடன்களும் உங்களோட எதிர்காலத் திட்டங்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்குமுங்க. உத்யோகத்ல உங்களோட விசுவாசம், உடல்நலக் குறையையும் பொருட்படுத்தாம நீங்க அர்ப்பணிக்கற உழைப்பு எல்லாம் உச்ச நிலைக்கு உங்களை உயர்த்துமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் கொஞ்சம் ஈகோவை விலக்கி வெச்சுட்டு எல்லோருடனும் பழகுங்க. வியாழக்கிழமை மகான் ராகவேந்திரரை வணங்குங்க; மேன்மைகள் சிறக்கும்.

8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

அவசரச் செயல்கள் அரைகுறைப் பலன்களைத்தான் தரும்ங்கறதை பழைய அனுபவங்களால உணர்ந்திருப்பீங்க. ஆனாலும் உணர்ச்சிவசப்பட்டு மறுபடியும் அவசரப்படுவீங்க. இந்த சுபாவத்தை மாத்திக்க முயற்சி பண்ணுங்க. சுபவிசேஷங்கள்ல குடும்பத்தார் யோசனையைக் கேட்டுக்கோங்க. முக்கியமா ஏதேனும் அழைப்பிதழ் அச்சடிக்கறதானா அதை பிறர் படிக்கக் கொடுத்து ஏதேனும் அச்சுப்பிழை இருந்தா திருத்திக்கோங்க. ரோஷப்பட்டு, யார் மேலயாவது கோபப்பட்டு பார்த்துகிட்டிருக்கற வேலையை விட்டுடாதீங்க. வேறு வேலையைக் கைவசம் வெச்சுகிட்டு இப்படி முடிவெடுக்கறதுதாங்க நல்லது. பொறுமையால தொழில், வியாபாரத்ல நல்ல முன்னேற்றம் அடைவீங்க. காது, மூக்கு, தொண்டை பகுதிகள்ல சிலருக்கு உபாதை வரலாம்; சிலர் ஒவ்வாமையால பாதிக்கப்படலாம்.

இந்தத் தேதிப் பெண்களுக்கு அவங்க விருப்பம்போல திருமணம் நடைபெறுமுங்க. ஞாயிற்றுக்கிழமையில அனுமனை ஆராதிச்சு, ஆனந்த வாழ்வடைங்க.

9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எதிரே இருக்கறவங்க உங்களைவிட புத்திசாலின்னு நினைச்சுகிட்டுதாங்க நீங்க பேசணும். அதனால யாரையும் கிள்ளுக்கீரையா நினைக்காதீங்க; அவங்கவங்களுக்கு உரிய மதிப்பையும் மரியாதையையும் கொடுங்க. யாரையும் பழிவாங்கற எண்ணத்தை அடியோட கைவிடுங்க. எல்லாம் நல்லதாகவே நடக்கும்போது எதுக்காக இந்த குரூர சந்தோஷம்? புது பொறுப்பு, உத்யோக மேன்மை, வியாபார-தொழில் அபிவிருத்தின்னு நன்மைகள் அடுத்தடுத்து வரும்போது வக்கிர புத்தி ஏற்பட்டு விடாதபடி பார்த்துக்கோங்க. முக்கியமா உங்கப் பேச்சில் நிதானத்தைக் கடைபிடிச்சீங்கன்னா எந்த அவமானமும் ஏற்படாதுங்க. பாரம்பரியமா வரும் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோயைப் பரிசோதிச்சுக்கோங்க.

இந்தத் தேதிப் பெண்கள் பிறர் மெச்சணுங்கறதுக்காக காரியம் பண்ணாதீங்க; உங்களுக்காகப் பண்ணுங்க. திங்கட்கிழமை சிவபெருமானை வழிபடுங்க; சிக்கலெல்லாம் சீராகும்.
 
யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • erode-dmk-votes-2

  அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!

 • scotland-bonfire-festival

  ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி

 • stalin-corp-31

  மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 • long-whale-newyork

  35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

 • pak-blast-30

  பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்