SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிறந்த தேதி பலன்கள் : பிப்ரவரி 2 முதல் 8 வரை

2013-12-11@ 16:00:48

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எந்த விஷயத்தையும் நிதானமா அணுகுங்க. உணர்ச்சிவசப்பட்டு சூழ்நிலையை ரொம்பவும் மோசமாக்கிடாதீங்க. சின்னக் கோபமும், ரோஷமும் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிடக் கூடிய அபாயம் இருக்குங்க. அதனால பொறுமையா, யோசிச்சுப் பேசுங்க. உங்களுக்கு எதெல்லாம் எதிராக இருக்கறதாக நீங்க நினைச்சுகிட்டிருக்கீங்களோ, அதெல்லாம் தற்காலிக மாயைதாங்க. இப்போ, அவமானப்படறதோ, கவுரவக் குறைவு ஏற்படறதோகூட அப்படித்தான், கவலைப்படாதீங்க. பிறர் குடும்ப விஷயங்கள்ல எந்த உதவி செய்யவும் போகாதீங்க; உபத்திரவம்தான் மிஞ்சும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போடாதீங்க. உத்யோகஸ்தர்கள் கவனமா இருங்க. யாரோ செய்யற தவறு உங்க மேல பழியா விழலாமுங்க. அடிவயிறு, உணவுக்குழாய்ல பாதிப்பு வருமுங்க. கண்களிலும் கோளாறு தெரியுது.

இந்தத் தேதி பெண்கள் பளிச்னு எந்த முடிவையும் எடுத்திடாதீங்க. விநாயகர் காரியசித்திமாலை படிங்க; மாயைகள் விலகும்.

2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

நீங்க கொஞ்சம்கூட எதிர்பாராத வகையில் சில நன்மைகள் ஏற்படுமுங்க. நீங்க அதிகமா முயற்சி பண்ணாமலேயே வெற்றிகள் உங்க மடியில வந்து விழுமுங்க. திடீர் திடீர்னு மனசுக்குள் சந்தோஷம் பொங்குமுங்க. இதுவரைக்கும் மனசுக்குள் முள்ளாக நெருடிகிட்டிருந்த குழப்பங்கள்லாம் விலகிடுமுங்க. எதிரிகள் காணாமப் போயிடுவாங்க. உங்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் எதிர்த்தவங்கள்லாம் விலகிப் போறதை நீங்க சில அனுபவங்களால உணருவீங்க. குடும்பத்ல உங்க வாக்குக்கு மதிப்பு கூடுமுங்க. சமுதாயத்ல சில புது பொறுப்புகளை மேற்கொள்ள வேண்டி வரலாம். ரத்தக் கொதிப்பு, சர்க்கரை அளவைப் பரிசோதிச்சுக்கோங்க. உயர் படிப்புக்கோ, வேலைக்கோ முயற்சி செய்யும் இந்தத் தேதி இளைஞர்கள், நற்பலன்களை அடைவாங்க.

இந்த தேதிப் பெண்களுக்கு, ஆடை-ஆபரண சேர்க்கை சந்தோஷம் தரும். அனுமன் சாலீஸா படிங்க; அனுதினமும் ஆனந்தம்தான்.

3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

காது-மூக்கு-தொண்டைப் பகுதியில சிலர் பிரச்னையை சந்திப்பீங்க. வேறு சிலருக்கு முதுகெலும்பு பகுதியில உபாதை வரலாமுங்க. இந்த வாரம், ஆரம்பிக்கும் காரியம் எல்லாமே உங்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையிலதாங்க முடியும். அதேசமயம், கோபத்தைக் கட்டுப்படுத்திக்க வேண்டியது ரொம்பவும் முக்கியமுங்க. குறிப்பாக கூட வேலை செய்யறவங்ககிட்ட கோபத்தைக் காட்டாதீங்க. உத்யோகத்ல மேலதிகாரிங்ககிட்ட விவாதம் பண்ணாதீங்க; அவங்க சொல்ற வேலைகளை மட்டும் செய்ங்க. குடும்பத்லயும் நீங்க விளையாட்டா பேசறதையெல்லாம் அடுத்தவங்களும் விளையாட்டாகத்தான் எடுத்துப்பாங்கன்னு தப்பு கணக்குப் போடாதீங்க. அது சிலசமயம் விபரீத விளைவுகளை ஏற்படுத்திடும். மன அயர்ச்சி, குழப்பங்கள் விலக பிராணாயாமம், தியானம் பழகுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் அண்டை, அயலாரிடம் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீங்க. அனுமன் அஷ்டோத்ரம் படிங்க; அற்புதங்கள் நிகழும்.

4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

குடும்பத்ல பெரியவங்க மேல அன்பான அக்கறை எடுத்துக்கறது நல்லதுங்க. கடமையா அக்கறை காட்டறதைவிட உள்ளார்ந்த அன்போட உடல்நலத்ல அதிக அக்கறை எடுத்துக்கோங்க. அதென்னவோ ரொம்பப் பெரிய வேலைன்னு நினைச்சுகிட்டு, வர்ர, போறவங்ககிட்ட எல்லாம் ‘அவ்ளோ செலவு பண்ணேன், இவ்ளோ கவனிச்சுகிட்டேன்’னு பெருமைபட்டுக்காதீங்க. யார் மேலேயும் கோபம் காட்டாதீங்க. அது, தன்னம்பிக்கையில்லாத பலவீனத்தைதாங்க வெளிப்படுத்தும். சரியான இடத்ல நியாயமான கோபத்தைக் காட்டற மனப்பக்குவத்தை வளர்த்துக்கணுமுங்க. உத்யோகம், வியாபாரம், தொழில்னு எல்லா இனங்கள்லேயும் இனிமையாகப் பேசி, பழகி, நன்மைகளை அடையணுமுங்க. உணவுக்குழாய், கழிவுப்பாதையில் உபதைகள் வருமுங்க; சாத்வீகமான உணவையே எடுத்துக்கோங்க.

இந்தத் தேதிப் பெண்கள் புது அறிமுகங்கள்கிட்ட விலகியே இருங்க. காயத்ரி ஜபம் சொல்லுங்க; கஷ்டங்கள் காணாமல் போகும்.

5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எதிர்பாராத வகையில் பல நன்மைகளை அடைவீங்க. குடும்பத்தாரோட பயணங்கள் மேற்கொள்வீங்க; அது பலவழிகள்லேயும் நன்மை தருமுங்க. அந்தப் பயணத்தில் எதிர்ப்படும் புதிய அறிமுகங்கள், உங்க வாழ்க்கையில் நல்ல திருப்பங்களை உருவாக்கக் காரணமா அமைவாங்க. அசையும், அசையாப் பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு இருக்குங்க. வீட்ல சுபவிசேஷங்கள், மனம் மகிழ நிறைவேறுமுங்க. புது வரவு, குடும்ப சந்தோஷத்தை அதிகரிக்குமுங்க. பிரிந்த தம்பதி மறுபடி இணைவாங்க. மேல் படிப்பு அல்லது வேலை காரணமாக குடும்பத்தைவிட்டுப் பிரிந்து போனவங்களும் வெற்றியோடு வந்து சேருவாங்க. படைப்பாளிகள், அரசாங்க விருதை எதிர்பார்க்கலாமுங்க. நரம்பு, ரத்தக் கொதிப்பு உபாதைகள்ல கவனமா இருங்க. சிலருக்கு, கண்களில் திடீரென்று நரம்பு கோளாறு வரும்.

இந்தத் தேதிப் பெண்களுக்கு எல்லாரும் மிகவும் ஆதரவா இருப்பாங்க. கணபதி மந்திரம் சொல்லுங்க; சந்தோஷம் நிலைக்கும்.

6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

பிள்ளைகளோட உடல்நலத்ல அதிக கவனம் செலுத்துங்க; அதைவிட அவங்களோட சகவாசத்தையும் கவனிக்க வேண்டியது அவசியமுங்க. குடும்பத்ல பெரியவர் அல்லது தலைவர் என்ற ஹோதாவிலே அவங்களை கண்டிக்கறதோ, பிறர் முன்னிலையில் தர்ம சங்கடப்படுத்தறதோ கூடாதுங்க. யார் பேச்சையாவது கேட்டு அவங்க மேல ஒரு தப்பான கருத்தை உருவாக்கிக்காதீங்க. அவங்களைப் பக்குவமா திசை திருப்பப் பாருங்க. அவங்களோட நல்வாழ்க்கைக்கு அவங்களே பொறுப்புங்கறதை உணர்த்துங்க. வீட்ல சுப விரயங்களுக்காக கஞ்சத்தனமில்லாம செலவு பண்ணுங்க. தொழில், உத்யோகத்ல இருக்கறவங்க கீழ்நிலை ஊழியர்களை அனுசரிச்சுப் போகணுமுங்க. கொஞ்சம் கர்வப்பட்டாலும், பாதிப்பு உங்களுக்குதான். ரத்தத்தில் உப்பு ஏற்றத் தாழ்வால் பாதிப்பு ஏற்படுமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் வீண் யோசனையால குழம்பாதீங்க; எல்லாமே நல்லாதான் நடக்குது. கோவிந்த நாமாவளி சொல்லுங்க; குறையில்லாமல் வாழுங்க.

7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

குடும்பத்ல ஏற்பட்டிருந்த குழப்பங்கள், சின்னச் சின்ன சண்டை, சச்சரவுகள்லாம் மனம் விட்டுப் பேசறதால நீங்கிடுமுங்க. அனாவசியமா தவறாகப் புரிந்துகொள்ள வைத்த சம்பவங்கள்ல, நீங்க சொல்றதுதான் சரின்னு வீம்போடு நீங்க செயல்பட்டதும் உங்களுக்குப் புரியவருமுங்க. அரசியல்ல இருக்கறவங்களுக்குப் புதிய பொறுப்புகள் கைகூடுமுங்க. தலைமையோட நெருங்கிப் பேச கிடைக்கற வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கோங்க. இந்தத் தேதி இளைஞர்களுக்கு அவங்கவங்க தகுதிக்கேற்ப வேலையோ, தொழில் அல்லது வியாபாரமோ அமையுமுங்க. கூட்டுத் தொழில்ல இருக்கறவங்க பிரிந்து, தனியே வேறு தொழில் ஆரம்பிப்பீங்க. காது-மூக்கு-தொண்டை, பற்கள்ல உபாதை வரலாமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் சிலர், சிறு தொழிலதிபராக மாறலாம்; அல்லது குடும்பத்தார் தொழில்ல பங்கேற்பீங்க. துர்க்கை கவசம் சொல்லுங்க; தனிப் பெருமை அடைவீங்க.

8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

நண்பர், உறவினர் வீட்டு விசேஷங்கள்ல உங்களுக்குத் தனிப் பெருமை, மரியாதை எல்லாம் கிடைக்குமுங்க. சந்தோஷத்துக்குக் குறைவிருக்காது. திட்டமிட்ட செயல்கள் எல்லாம், நன்மைகள் தருமுங்க. பெரிய மனிதர்களின் சந்திப்பு அந்தச் செயல்களுக்கு உறுதுணையாக அமையுமுங்க. பிள்ளைகளோட மேல் படிப்பு, வேலை, திருமணம் மாதிரியான விஷயங்களுக்கு அவங்களோட சிபாரிசும், வழிகாட்டலும் பெரிய உதவியாக இருக்குமுங்க. அடிவயிறு முதல் பாதம் வரை ஏதாவது வித்தியாசமான உபாதையை உணர்ந்தீங்கன்னா உடனே மருத்துவரைப் பார்த்திடுங்க. அவசரமா நடக்கறது, ஓடறதால சிலருக்கு முதுகெலும்பு பாதிக்கப்படலாமுங்க. தினமும் கடினமா உடற் பயிற்சி செய்யறவங்க, அதை அலட்சியமா செய்யாதீங்க.

இந்தத் தேதிப் பெண்கள் கோபத்தால நல்ல நட்பை இழக்க வேண்டியிருக்குமுங்க; எச்சரிக்கையா இருங்க. மஹாவிஷ்ணு ஸ்லோகம் ஏதாவது சொல்லுங்க; வெற்றி தானே வந்து சேரும்.

9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

செலவுகள் கொஞ்சம் தலைக்கு மேலேதான் போகுமுங்க. வர்ற வருமானத்துக்குள்ள சமாளிக்கறதும் கொஞ்சம் கஷ்டம்தான். இன்ன செலவை செய்திருக்க வேண்டாமோன்னு அப்புறமா வருத்தப்படும் சூழ்நிலைகள் வரலாமுங்க; ஆனா, அதுக்காக அப்படியே இடிஞ்சுபோய் உட்கார்ந்திடாதீங்க; ஆனது ஆச்சுன்னு மனசைத் தேற்றி கிட்டு சேமிக்க வழியிருக்கான்னு பாருங்க. குடும்பத்தார் யோசனைகள் இதுமாதிரி செலவீனங்கள்ல உதவியா இருக்கும்; அனாவசிய செலவும் ஏற்படாதுங்க. கொடுக்கல்-வாங்கல்ல தேவையில்லாத வாக்கு வாதத்தைத் தவிர்க்கணுமுங்க. நட்போ, உறவோதான் முக்கியமே தவிர, பணம் இல்லேங்கறதால, அந்த நஷ்டத்துக்கும் மனமொப்பி தயாராகிடுங்க; அடுத்த இதே மாதிரியான சந்தர்ப்பத்ல எச்சரிக்கையா இருந்திடுங்க. ரத்தத்ல கொழுப்பு குறைய முயற்சி எடுத்துக்கோங்க.

இந்தத் தேதிப் பெண்கள் மனசைக் கட்டுப்படுத்திக் கணுமுங்க. முருகன் பாடல்கள் பாடி மனநிறைவோட வாழுங்க.

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • erode-dmk-votes-2

  அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!

 • scotland-bonfire-festival

  ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி

 • stalin-corp-31

  மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 • long-whale-newyork

  35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

 • pak-blast-30

  பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்